2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில்
நடந்து முடிந்தது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தம்
10 அணிகள் 2023 உலக
கோப்பையை வெல்ல பலபரிட்சை நடத்தின. யாரும் எதிர்பாராத விதமாக இந்த உலககோப்பை தொடரில் பல நிகழ்வுகள்
நடந்தேறின. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து சில பெரிய அணிகளை வென்று அனைத்து
கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இறுதியில் அரைஇறுதிச் சுற்றுகள் முறையே இந்தியா
அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து
விளையாடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அதே போல் மற்றொரு அரைஇறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடி வெற்று பெற்று இரண்டாவது அணியாக இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றது.
அனைவரும் எதிர்பார்த்த இறுதிப் போட்டி அகமதாபாத்தில்
உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட்
மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை
காண பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாது தமிழக பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன்
மற்றும் ரன்வீர் சிங் என பல திரை உலகினை சேர்ந்தவர்கள் மைதானத்திற்கு
சென்று போட்டியை பார்த்து ரசித்தார்கள்.ஆனால் துரதிஷ்டவசமாக
இந்தியா அணி ஆஸ்திரேலியாவிடம் தொல்வியை தழுவியது. இந்த தோல்வியை
ஏற்றுக்கொள்ள முடியாத பலர் சமூக வலைதளங்களில் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதை போல தமிழ் திரைப்பட இயக்குநரும்,
நடிகருமான செல்வராகவன் இந்திய தோல்வியை
ஏற்றுக்கொள்ள முடியாமல் "X"தளத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை, தந்தை அழுது அவர்கள் பார்த்ததுவும் இல்லை பாவம்.அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை.அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது." என்று பதிவிட்டிருந்தார்.
இந்திய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத பலருக்கு மத்தியில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியவர்களில் இயக்குநர் செல்வராகவனும் ஒருவர். இயக்குநர் செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.