ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஆணால் உணரப்பட்ட பெண் உணர்வு(மூன்றாம் பாலினம்)

 

       உலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஆண் மற்றும் பெண்ணுணர்வோடு பிறந்து உலகில் ஆண்டு மடிகிறார்கள்., இரு ஒத்த பாலினங்கள் மூலம் ஒருவருடைய உணர்வை அதே பாலினத்தை சார்ந்த மற்றொருவர் உணர்ந்து கொள்கிறார். ஆனால் என்றேனும் ஆண் உணர்வுகளை பெண்ணும், பெண் உணர்வுகளை ஆணும் உணர முடியாது அதை உலகில் சாத்தியமாக்கியது ஒரு மூன்றாம் பாலினம்., 


     ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உணர்வை புரிந்து கொண்டான் என்றால் அவன் கடவுளுக்கு இணையானவன் அது எப்படி சாத்தியம் உடலாலும் மனதாலும் வேறுபட்ட இரு வேறு மனிதர்களில் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்வது சாத்தியமற்றது உண்மைதான் ஆனால் உலகின் மிகச்சிறந்த படைப்பு இந்த மூன்றாம் பாலினம், உண்மையில் பெண்ணின் உணர்வுகளை உணரத் தெரிந்தவர்கள் தான் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள்., பிறக்கும் போது ஆணாக உடலின் அத்தனை அமைப்புகளையும் பெற்று ஆணாகப் பிறந்திருப்பார்கள் அவர்கள் வளர வளர அவர்களின் உணர்வுகளில் மாற்றம் கண்டு சில காலங்களுக்குப் பிறகு முற்றிலும் பெண்ணாக மாறிவிடுகிறார்கள்.. இந்த மாற்றத்தை எந்த ஒரு குடும்பமும் அல்லது பெற்றோர்களும் ஏற்பதில்லை காரணம் தனது ஆண் மகன் ஒரு பெண்ணாக மாறிவிட்டான் அதனால் இந்த சமுதாயத்தில் நமக்கு அவமானம் என்று அவரகளிடம் மாற்றம் உணர்ந்த பொழுதே அவரகளை ஒதுக்கி விடுகிறார்கள் ஏனோ தெரியவில்லை?? அந்த மாற்றத்தை அவர்கள் அறிய ஆரம்பிக்கும் பொழுதிலிருந்தே அவர்கள் ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர ஆரம்பிக்கிறார்கள், மற்ற ஆணின் உணர்வுகளை வலிகளை உணர ஒரு ஆணாகத்தான் இருக்க முடியும் அது போல ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் இதை அனைவரும் அறிவோம் ஆனால் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அதே ஒரு ஆணின் வலிகளையும் உணர்ந்தவர்கள் தான் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள்… நம் நாட்டு சட்டம் அவர்களுக்கென இட ஒதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்கி அவர்களின் வாழ்வினை காக்க வழி செய்துள்ளது உண்மைதான் ஆனால் அவர்களும் நம்மை போன்றவர்கள் தானே அவர்களை பற்றின ஒரு மிக கீழ் தனமான நம்முடைய எண்ணம் தான் அவர்களின் இன்றைய நடத்தைகளுக்கு முக்கியக் காரணம்… மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பல பெயர்கள் உண்டு அவர்களைக்கண்டால் விரோதியைப் போல் ஒதுக்குவது, வேலைவாய்ப்பின்மை, குடும்ப ஆதரவு இல்லாதது, அவர்களை பற்றின மற்றவர்களின் எண்ணம் என பல வகைகளில் நாம் அவர்களை தண்டிக்கிறோம், அதனால் தான் அவர்களின் நடத்தையும் மாறியுள்ளது அத்தனையும் வயிற்றுப்பிழைப்பிற்காக என்பது புரியாது நமக்கு… ஏனென்றால் ஒருவரின் உணர்வுகள் தான் மற்றொருவரான நமக்குப் புரியாதே., ஒருவரின் நிலையோ அல்லது உணர்வுகளையோ புரிந்து கொள்ள அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை உணர்வுகளை மதிக்கத் தெரிந்தால் போதும் அவர்களும் ஒரு உணர்வே என்று தெரிந்தால் போதும், அவரகளின் உணர்வுகளுக்கும் உயிர் உள்ளது என்பதை தெரிந்தால் போதும்., அவர்களுக்கும் வலி என்று ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் போதும்., பசியும், வலியும் எல்லாருக்கும் ஒன்றே என்று நாம் உணர்ந்தால் போதும் அவரகளை ஒதுக்கி வைக்கும் எண்ணம் நம்மை விட்டு விலகும்..

இறைவன் படைப்பில் எல்லாம் சமம் என்று உணரும் காலம் வந்தால் நம்மைப் போன்றவர்கள் தான் அவரகளும் என்று மதிக்க ஆரம்பிப்போம்… அவர்கள் ஆணாகப் பிறந்த பெண், ஆண் வலியையும் பெண் உணர்வையும் தன்னுள் ஏற்று பல இடங்களில் அவர்களுக்கான இடத்தை தேடிக்கொண்டிருப்பவர்கள்




கருத்துணர்வு:-

   மனிதனால் ஒதுக்கி வைக்க கூடிய உயிர் என்று எதுவும் இல்லை ஆனாலும் மனிதன் சாதி,மதம் என்று மனிதர்களை ஒதுக்கி வைத்து இப்போது பாலினத்தை மையமாக வைத்து ஒதுக்கி வைக்கிறான் என்றால் உணர்வுகளுக்கான மதிப்பு இங்கு இல்லை என்றே பொருள்… முடிந்தால் ஒருவரை புரிந்து கொள் இல்லை என்றால் ஒதுங்கிச்செல் ஒருபோதும் ஒதுக்கி செல்லாதே அந்த வலியும் உன்னால் உணர்ந்து கொள்ள முடியாது… 



வெள்ளி, 13 நவம்பர், 2020

நாகரீக வளர்ச்சியில் களவு போகும் சந்தோசங்கள்!!!




உலகில் மனிதன் தோன்றிய விதம் என பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறது அதாவது விலங்குகளின் பரிணாம வளர்ச்சி எனவும், இறைவனின் படைப்பான ஆதாம்,ஏவாள் முதல் உயிர் எனவும், அறிவியல் கோட்பாடுகள் சில பல காரணங்களை முன்வைத்து தங்கள் கருத்துக்கள் மூலம்  விவாதங்களையும் நிகழ்த்தியுள்ளார்கள்... இறைவன், அறிவியல் இரண்டில் எது உண்மை என்று ஆராய்ந்து பார்க்கும் நிலை இன்றைய தலைமுறையில் இல்லை காரணம் அவ்வளவு பேரும் அம்புட்டு பிஸி அட என்னங்க அப்படி பிஸி என்றால் பிறந்த குழந்தை ஒரு இரண்டு மூன்று வயதில் தொழில்நுட்ப வளர்ச்சியால் Online Class அதாவது LKG கூட Online class என்ற முறையை கொடுத்து அவர்களையும் பிஸியாக உருவாக்கியுள்ளது இன்றைய தலைமுறை பாதிப்பு காரணம் ஏதோ ஒரு தொற்று.. உலகில் இயற்கையில் ஏதேனும் மாற்றம் என்றால் அதற்கு மனிதன் மட்டும் தான் காரணம்... குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை உலகில் நடந்த அத்தனை இயற்கை சீற்றங்களுக்கு மனிதனின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் காரணமாக உள்ளது.. அதற்கான காரணங்களும் மனித நாகரீக வளர்ச்சி என்ற முறையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.., 

வளர்ச்சி தவறல்ல அதனால் என்ன பின்விளைவுகள் என்று சிந்திக்காத மனித வளர்ச்சி நம் எதிர்கால தலைமுறைக்கு தேவையா??? பள்ளி காலங்களில் ஓடி ஆடிய நாட்களில் இல்லாத வியாதிகள் நம் பிள்ளைகளில் தலைமுறையில் குழந்தை பருவத்திலே முளைக்க ஆரம்பித்துவிட்டது... 

எதை விதைத்தோமோ அது தான் முளைக்குமாம், நம் முன்னோர்கள் விதைத்த வழி முறையில் நாம் வாழ்கிறோம்., இந்த வாழ்க்கை முறை வலி என நினைத்து எதிர்கால சந்ததிக்கு வளர்ச்சி என்ற எண்ணத்தில் ஒரு விஷத்தை விதைக்கிறோம் என்று தெரியாமல் நாம் செய்யும் செயல் இன்னும் புரியாமல் இருக்கிறது நமக்கு... அத்தனை வளர்ச்சி சுகமான வாழ்க்கையை கொடுக்கும் சரி ஆனால் நிலையான வாழ்க்கையை கொடுக்குமா??? 90-100 வயதான மனிதனில் வாழ்க்கை சராசரி இன்று 40-50ஆகிவிட்டது... 60 வயதானால் உடலில் உள்ள  சத்துக்கள் எல்லாம் சக்கையாக பிழியப்பட்ட கரும்பை போல உடலும் எப்போது விழுமோ என்று காத்திருக்கிறது.. காரணம் உணவு முறை அரைகுறை வேகவைத்த உணவு... சமைத்து நான்கு நாட்கள் ஆன பிறகு சுவைக்கும் உணவு., Online Order என்ற பெயரில் சுவைக்காக உண்ணும் உணவு நம் உடலை சுவைக்க ஆரம்பிக்கிறது... 



முன்னேற்றப்பாதை என்ற நம்பிக்கையில் கடந்த கால பாரம்பரியத்தை மறக்க நினைக்கும் நாம் நம் எதிர்கால சந்ததியின் வாழ்நாள் பற்றி நினைக்க மறக்கிறோம்.

இந்த மாதிரியான முன்னேற்ற பாரம்பரிய மாற்றம்(மறதி) ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்பதே., இந்த மாற்றம் நம் தாயகம் முழுவதும் பரவி விட்டது.,இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் நினைப்பது மட்டும்தான் மாற்றம் என்பதை மற்றவரிடம் மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம் நம்மிடம் தவிர... அடுத்தவன் மாறினால் உலகம் மாறிவிடும் என்று அடுத்தவனையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நாம் மாறினால் மட்டுமே நம் வீடு மாறும் என்ற ஒரு எண்ணம் கூட இல்லாத முட்டாள்களாக நாம் இருக்கிறோம்...(அரசியலிலும் கூட🥴)..

எப்போது புரிதல் என்ற வார்த்தைக்கு சுய புரிதல் உணர்கிறோமோ அப்போது தான் மாற்றமும் சுய மாற்றத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்று உணர்வோம்!!! நாகரீக வளர்ச்சி உணவு உடை மற்றும் இருப்பிடம் இப்படி அத்தியாவசிய வளர்ச்சி(மாற்றம் மட்டுமே) தான் முதல் வளர்ச்சி என்ற மூட நம்பிக்கையில் நம் எதிர்காலத்தையே பாதாள குழியில் தள்ளிவிடுகிறோம் என்று உணர்வதில்லை இன்றைய தலைமுறை... உணவில் வளர்ச்சி(வெந்தும் வேகாததுமான உணவு), உடையில் வளர்ச்சி(உடல் மறைத்து மானம் காத்தவன் இன்று உடலை(கவர்ச்சி) காட்டி தன் பெயரை நிலைநாட்ட நினைக்கிறோம், இருப்பிட வளர்ச்சி(இயற்க்கைக்கு போட்டியாக இருப்பிடம் அமைப்பது)இப்படிப்பட்ட அத்தியாவசிய வளர்ச்சி தேவையா? சரி இந்த நாகரீக வளர்ச்சியால் அழிவது நமக்கு மட்டும் தன் விளம்பரம், ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் நம் அழிவை நாம் தீர்மானித்தது போக அடுத்தவன் தீர்மானித்து நம் எதிர் காலத்தை அழிப்பது என்பது தான் நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி.,

இதை யாரும் அறியாமல் இல்லை தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்றால் நம் அந்தரங்கம் அத்தனையும் உலகமே பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி சற்றும் முகம் சுழிக்கும் விஷயம் தான் ஆனால் அது தான் உண்மை., தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒரு எமன் இந்த  சமூக வலைதளங்கள்.,



அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு இது உணவிற்கும் பொருந்தும் உணர்விற்கும் பொருந்தும் 20 ஆம் நூற்றாண்டில் இயற்க்கைக்கு எதிரான போராட்டத்தில் பிறந்த உயிர்களை விட இறந்த உயிர்கள் தான் அதிகம் அதுபோல தொழில்நுட்ப வளர்ச்சியால்இறந்த உயிர்களை விட உணர்வுகளை இழந்தவர்களே அதிகம்... எத்தனை புகைப்படங்கள், எத்தனை வீடியோக்கள் இதெல்லாம் பெருமை என நினைத்து நம் மானத்தையே விற்கும் நிலையமாக மாறுயிருக்கிறது சமூக வலைதளங்கள்., அதனை பயபடுத்துபவர்களுக்கு பொழுதுபோக்கு என்ற எண்ணத்தில் தன் முழு வாழ்வின் போக்கையும் மாற்றிவிடுகிறார்கள் அதனால் பயன் ஆயிரம் இருந்தும் அதனால் வளைவுகளை நோக்கியே நம் செயல்பாடுகள் அரங்கேறுகிறது சமூக வளைதளங்களில்.

எதையும் பயன்படுத்தும் முன் நம் காலம் குறுகியது நம் பயன் பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும், பொழுதுபோக்கு என்ற நோக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கே எமனாகும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும்.. நம் முன்னோர்கள் பின்பற்றிய நாகரீகம் தான் நம் எதிர்காலத்தை காக்கும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்., மாற்றம் என்பது உன்னில் தொடங்கு நம் எதிர்காலமும் மாறும் அடுத்த சந்ததியின் வாழ்நாளும் மாறும்.. சமூகவலைதளங்கள் சிந்திக்க பல உண்டு, பொழுதுபோக்கு எனும் ஒரு  தேவை நம் வாழ்க்கைக்கு தேவை இல்லாததையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும் என்பதை உணருவோம்.



ஒரு காலத்தில் கைப்பேசி எல்லாம் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கும் என்ற எண்ணம் போய் இனி கைப்பேசி இல்லை என்றால் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் இல்லை என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் அன்பு பெற்றோர்களே கைப்பேசி, இணையதளம் வேண்டாம் என்ற போதே குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டிற்காக இணையதளத்தில் மூழ்கி இருப்பார்கள் ஆனால் இப்பொழுது கைப்பேசி தான் கல்விக்கான தேவை என்ற நிலையில் குழந்தைகளை இணையதளம் மற்றும் கைப்பேசிக்கு அடிமையாகாமல் காப்போம்.. நாகரீக வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி எப்போது மனிதனில் வாழ்நாள் , உடல் மற்றும் மன பாதிப்பு இல்லாமல் வளர்கிறதோ அப்போது தான் உண்மையான வளர்ச்சி.

திங்கள், 2 நவம்பர், 2020

நிலையில்லா சூழ்நிலையால் கனவுகளை சிதைப்பது முட்டாள்தனம் 👍💪🏻💐

 

சூழ்நிலை மாற்றம் காலத்தின் கட்டாயம், காலத்தின் பிடியில் பயணிக்கும் நாம் எதிர்பார்க்காத சூழ்நிலைகளை எதிர்பார்க்காத சமயத்தில் எதிர்கொள்வது தான் வாழ்வியல் உண்மை..

 ஒரு மனிதனின் செயல்பாட்டை சூழ்நிலை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதனை ஒரு மூன்றாம் மனிதனாக நின்று வேடிக்கைப் பார்த்தால் புரியாது இதிலும் அனுபவம் தான் முக்கியம்...  எப்போதும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலைகள் அமைவது இல்லை தேவையான நேரத்தில் செய்ய வேண்டியதை கண்டிப்பாக செய்தாக வேண்டும் எதற்காக என்றால் வாழ்வின் பயணத்திற்காக.., 

வாழ்க்கை எப்போதும் நேரான பாதையாக அமையாது மேடு பள்ளங்கள், வளைவுகள் இப்படி பலதரப்பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடும் இவைகளால் கற்பதை விட்டு காலத்தை குறை சொல்பவர் எப்போதும் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாது., எந்த சூழ்நிலைகளில் எந்த விஷயத்தை தொடர வேண்டும்,?? நாம் செய்யும் செயலுக்கு ஏற்றச் சூழ்நிலை அமையவில்லையா அந்த செயலை விட முயற்சிக்கும் எண்ணம் இருக்கும் வரை வாழ்வியல் வெற்றி தாமதம் தான்... சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறி செயல்படுவது அல்லது எந்த சூழ்நிலையானாலும் நம் செயலுக்கு ஏற்ப திரித்து செயல்படுவது உலகில் அபூர்வமான செயல்., அனுபவம் மட்டுமே அது போன்ற மாற்றத்தை கொடுக்கும்... 



ஒரு கொடியவன் பல தவறுகளை செய்து தண்டனைக்காக சிறையில்  அடைக்கப்பட்டுள்ளான் அவன் வாழ்வில் செய்யாத தவறுகள் இல்லை... அந்த தவறுகளுக்கு எல்லாம் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் அல்ல ஆனால் சிறையிலே தன் தவறுகளை உணர்ந்து சாகும் வரமாக ஆயுள் தண்டனை விதக்கப்பட்டது. அந்த கொடியவனை சிறையில் அடைத்தார்கள்.. நாட்கள் நகர்ந்தன சிறையில் அந்த  கொடியவனின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தான்... தனிமை அவனை வதைத்தது.. என்ன செய்வது என்று புரியாமல் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தான்... தன்  வாழ்நாள் முழுவதும் இப்படியே கடந்துவிடும் என்ற பயம் அவனை வாட்டியது... அவன் மீதான கோபத்தால் ஆவனையே தண்டித்துக் கொண்டான்...இப்படியே நாட்கள் நகர ஒரு நாள் அந்த சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க ஒரு துறவி வந்திருந்தார் அவ்வபோது அந்த சிறைக்கு சென்று கைதிகளுக்கு வாழ்க்கை பற்றிய கருத்துக்களை வழங்கி வந்தார் அப்படி ஒருநாள் அந்த துறவி சிறைக்கு சென்றிருந்த போது முதன்முதலாக அந்த துறவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அந்த கொடியவனுக்கு., துறவி கைதிகளின் மத்தியில் தனது ஆன்மீக மற்றும் வாழ்க்கை தத்துவ நெறிகளை வழங்க ஆரம்பித்தார் அந்த பேச்சினை சரிவர கவனிக்காமல் அந்த கொடியவன் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான் துறவியின் பேச்சும் முடிந்தது அந்த கருத்து பகிர்தலின் போது கொடியவனின் செயலை நன்கு உற்றுநோக்கிய துறவி இறுதியில் அந்த கொடியவனை நேரில் சந்திக்க அவனுடைய சிறைக்கு சென்றார் அங்கு அந்த கொடியவனை சந்தித்து அவனுடன் கலந்துரையாடலை தொடர்ந்தார்., 

அந்த கொடியவனோ நான் பல தவறுகளை செய்தவன் தண்டனை என்ற பெயரில் இந்த ஒரு சூழ்நிலையை ஏற்க முடியவில்லை, மரண தண்டனையை விட கொடியதாக இருக்கிறது இந்த தண்டனை... பறந்து, விரிந்த மனதினை ஒற்றை அறையில் அடைத்துவிட்டார்கள் இதற்கு தூக்கு தண்டனையே உயரிய விடுதலை என்று புலம்பிக்கொண்டிருக்க அந்த துறவி மகனே உன் இடம் தவறல்ல, உன் சூழ்நிலை தவறல்ல, உன் காலம் தவறல்ல உன் எண்ணம் தான் தவறு... .

உனக்கான இந்த சிறை உன்னை தண்டிக்க என்பது ஒரு மூடர்களின் எண்ணம் இந்த சிறை உன் தனிமையில் உன் வாழ்க்கைக்கான உண்மையை உணர்வதற்கானதே தவிர உன்னை தண்டிக்க அல்ல... எப்போது உன் சூழ்நிலை சரியில்லை என்று சிந்திக்க ஆரம்பிக்கிறாயோ அப்போது உன் வாழ்க்கை உன் கட்டுப்பாட்டில் இல்லை... எந்த ஒரு சூழ்நிலையும் நம் வாழ்க்கை பயணத்தை தடுத்து நிறுத்தாது என்று எண்ணி வாழ்க்கையை பற்றி சிந்துக்கிறாயோ அப்போது தான் உன் வாழ்க்கை உன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அறிவுரை கூறினார்...

 அறிவுரைகளால் சற்று தெளிந்த கொடியவன் தன் வாழ்க்கை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான் நாட்கள் ஓடின, ஆண்டுகள் நகர்ந்தன.,  கொடியவனின் செயலில் ஏதோ ஒரு மாற்றம் அவனது உடல் மற்றும் மனதளவில் ஒரு உண்மையான வாழ்க்கையை நேசிப்பவனாக பிறருக்கு உதவி செய்யும் முனைப்புடன் சிறையில் ஒரு நேர்மையானவனாக நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டான்... 

ஒரு கொடியவனின் மனம் மாற்றத்தை எந்த சூழ்நிலையும் பாதிக்கவில்லை காரணம் துறவியின் சந்திப்பிற்கு பிறகு தன் வாழ்க்கையில் அன்றைய சூழ்நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார், சூழ்நிலை எப்போதும் நம் செயலுக்கு முட்டுக்கட்டை போடுவதில்லை நம் எண்ணம் தான் தவறாக இருக்கும் பட்சத்தில் நம் வாழ்க்கை பயணம் அத்தோடு நிறுத்தி வைக்கப்படுகிறது... நம் வாழ்க்கை மாற்றத்திற்கு சூழ்நிலை மாற்றம் எப்போதும் ஒரு தடையாக இருக்காது அந்த மாற்றத்தை நம் வாழ்க்கை பாதைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.., நிலையில்லா சூழ்நிலை காரணம் காட்டி நிலையான சந்தோச வாழ்க்கையை இழந்து விடாதீர்.,

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...