ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

S P B நினைவலைகள் 💐🙏🌱😞

 


காற்றுக்கு இசை உயிரூட்டிய கவிஞனே!


மெல்லிசையில் மெட்டுக்கள் படித்த கலைஞனே!


வார்த்தைகளில் உணர்வுகளை பதித்த இசைக் கடவுளே!


கண் தேடிய காற்றுக்கு உயிரூட்டி செவி கொணர்ந்த கவியின் தாயே!


இசை மழை எங்கே பொழிந்தாலும் உன் குரல் இல்லா இடமும் காற்று புகாத இடம் மட்டுமே!


ஆயிரமாயிரம் குரல் படைப்புகள்!


பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு பாட்டிலும் உந்தன் குரல் ஒலிக்க

அதில் எம்மக்கள் மூழ்கி முக்குளிக்க., 


சிரிப்பு முதல் அழுகை வரை ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு படைப்புகளை பாட்டாய் பாடிய குரல் எங்கே இப்போது???


அடியேன் நான் சொக்கிச் சொக்கி உந்தன் குரலால் கைதானேன்!


எத்தனை வயது கடந்தாலும் 

அத்தனை கம்பீரம் உந்தன் குரலிலே.,


பல குரல் மன்னர்களும் எட்டாத உயரத்தை 

ஒற்றைக் குரலால் நீ அடைந்தாயே., 


நான்கு தலைமுறைக்கும் ஏற்ப ஆயிரமாயிரம் படைப்புகளை பொக்கிஷமாய் இவ்வுலகிற்கு கொடுத்த

நீயும் பொக்கிஷமாய் இம்மண்ணிற்குள் பதிக்கப்பட்டுவிட்டாய்!! 


உம் பாடல் கேட்டு குளிர்ந்த என் நெஞ்சம் 

நீயில்லை இனி என்றதும் உறைந்து உடையாப் பனியாக பயனற்றுப்போனதே!


தேகம் பிரிந்த ஆன்மா ஒன்று 

அத்தனை மக்களுக்கும் தாலாட்டு பாட இறைவன் பாதையடி சேர்ந்தது இப்போது!!!


உயிர் இல்லா தேகம் மறைந்தாலும்

உணர்வுள்ள உன் உயிர் பாடல்கள்

காற்றாய் ஒவ்வொரு உயிரோடும் சேர்ந்தே கிடக்கும்

இந்த இசை உலகம் உள்ளவரை!!!


துணிந்தவனுக்கு பாதையில் தடைகள் இல்லை!

எழுந்தவனுக்கு காலம் ஒரு பொருட்டல்ல 

என்பதனாய் பல மொழிகளில்

பல நாயகர்களுக்கு குரல் கொடுத்து இன்றும் அந்த நாயகர்களை வாழவைத்திருக்கும் பிண்ணனி மன்னனே!!


ஏன் இவ்வுலகிற்கு "நீ" என்று உன் குரலால் உணர்த்தி இன்று வானில் கரைந்துவிட்டாய்


புண்ணாகிய என் நெஞ்சிற்கு 

அமுதூட்டியது உன் குரலில் வரிகள்


ஆயிரம் நட்சத்திரம் வானில் உதித்தாலும் நிலவின் அழகிற்கு இணையேது?


எத்தனை ஆயிரம் குரல்கள் ஒலித்தாலும் உம் குரல் கொண்ட காந்தப்பாடல் எம்மை ஈர்த்தது ஏனோ???


நான் தனிமையை விரும்பியது உன் குரல் கேட்க

வலியை ஏற்றது உன் குரல் கேட்க


புண்பட்ட மனதை பூ கொண்டு துடைத்தது உம் குரலே.,


ஆயிரம் ஆயிரம் வார்த்தைமலர்களைத் தூவினாய் நீ அன்று 

அத்தனை நன்நெஞ்சங்களும் கண்ணீர் மலர்களை சிந்துகிறது இன்று


கலைஞனுக்கு ஓய்வில்லை எவ்வுலகிலும்?


கலைஞன் என்றால் படைக்க மட்டுமே என்பதை சுட்டிக்காட்டி இன்று வானுலகம் சென்றது உன் ஆன்மா.,


ஒரு நிமிட அழுகையால் துடைத்துவிட முடியாத உம் குரலின் நினைவுகள்

பல நூறு ஆண்டுகளுக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில்!


வருக்கும் இவ்வுலகம் நிரந்தரமல்ல என்பதை அறிந்தேன் உன் இறப்பாலே!!! 💐🙏🌱😞







புதன், 23 செப்டம்பர், 2020

உயிருக்கும்,உணர்வுக்கும் மதிப்பளிப்பது தான் மனித நேயம்👍Give the respect to third gender🙏💐

 


மூன்றாம் பால்


"உலகம் ஒரு வட்டம்"

    மனிதன் அனுபவத்தால் சொல்லும் சொல் இதில் உண்மை அல்லது பொய் என்பது அறிவியலின் உண்மையால் மட்டுமே உணர முடியும்… இந்த உலகில் படைப்புகள் ஏராளம் குறிப்பாக மனிதன், விலங்குகள் என அறிவை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்., ஐந்தறிவு உயிர் விலங்காகவும் ஆறறிவும் உயிர் மனிதனாகவும் வகைப்படுத்தி உலகம் மிக விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.. மனிதாக இருந்தாலும் அல்லது விலங்காக இருந்தாலும் சரி ஆண்பால் மற்றும் பெண்பால் என்று இருவகை பாலினம் உலகில் உருவாக்கி உயிர் பிறப்பிற்கு இவ்விரு பாலினமும் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. 


ஆனால் ஏதோ ஒரு விஷயம் கவனிக்க மறுக்கிறது இந்த சமூகம் இரு பாலினங்களுக்கு இடையே இன்னொரு பாலினம் பிறந்து இவ்வுலகில் இழக்கக் கூடாதவையெல்லாம் இழந்து அவர்களுக்கு துணை அவர்கள் மட்டுமே என்ற ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்றம் மட்டுமே மாறாதது உலகம் அறிந்த உண்மை இது ஆனால் மாற்றம் கொண்ட மனிதர்களை வெறுத்து ஒதுக்குவதும், அவர்களை தள்ளிவைப்பதுவும், அவர்களுக்கு இவ்வுலகில் இடம் இல்லை என்பது போல பாவிப்பதுவும் ஏன் என்று தான் புரியவில்லை… எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் அது பொக்கிஷம் ஆனால் ஏதாவது மாற்றம் வந்துவிட்டால் அது தேவை இல்லாதது என்பது போல பாவித்து மூன்றாம் பாலினத்தவர்களை வெறுப்பது ஏன்?? அவர்கள் தீண்டத்தகாதவர்களா???  இல்லை நம் உரிமைகளை பறிக்க வந்தவர்களா??? எதுவும் இல்லை ஆனால் நம் ஆண் பெண் சமூகம் காணாததை எதையோ கண்டது போல அவர்களை தள்ளிவைப்பது ஏன்??? ஒரு மனிதனுக்கு அரவணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை நிச்சயம் வேண்டும் ஆனால் இவர்கள் திருநங்கை என உடளலவிலும் உள்ளத்திலும், மாற்றம் கண்ட உடனே அவர்களை முதலில் வெறுத்து ஒதுக்குவது இந்த சமுதாயத்தில் அவர்களை பெற்ற பெற்றோர்கள் தான் காரணம் இந்த சமுதாயம் அவர்களை இழிவாக பேசுமாம், இப்படிப்பட்ட குழந்தையை பெற்றுவிட்டோம் என்று...ஆயிரத்தில் ஒருவரோ அல்லது இருவரோ தான் திருநங்கை என்று தெரிந்ததும் அவர்கள் குடும்பம் ஆதரிப்பது… ஏனையோர் இந்த சமுதாய பேச்சுகளுக்கு பயந்து தன் குடும்பத்தை விட்டு விலகி வாழ்கிறார்கள்… அவர்கள் சாவது வரையிலுமே அவர்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை அவர்கள் குடும்பம்… பெற்ற பிள்ளைகளை இறந்துவிட்டதாக கூறி காரியம் செய்த பெற்றோர்களும் இந்த நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை பெண்களை அடக்கி ஆண்ட சமுதாயம் தானே இது இன்றைய 20 ஆம் நூற்றாண்டில் தான் ஓரளவு முன்னேற்றம் வந்தது… அந்த முன்னேற்றம்  வளர ஆரம்பித்த உடனே பெண்கள் மீதான உடளலவிலும் மனதளவிலும் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களுக்கே அந்த நிலை என்றால் திருநங்கைகளின் நிலை சொல்லவே வேண்டாம்…

சரி அவர்களிடம் அப்படி என்னத்தான் தவறை கண்டோம் நாம்??? ஆணாக பிறந்தவர்கள் பெண்ணாக மாறுவது தவறு 

அவர்களின் அந்த மாற்றத்திற்கு காரணம் யார் என்று தெரியுமா? நமக்கு.,

அவர்களே அறியாத இந்த உடல் மாற்றம் மனதளவிலும், உடலளவிலும் தான் ஒரு பெண்ணாக தன்னை பாவித்தது அவர்களின் உயிரணு மாற்றம் இதனால் அவர்களை ஒதுக்குவதில் எந்த நன்மையும் இல்லை…

அவர்களை தீண்டத்தகாதவர்களாக நினைத்து அவர்களை குடும்பத்திலிருந்து வெறுத்து அவர்கள் வாழ்வதே ஒரு சாபம் என்று அவர்கள் எண்ணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்…

மனிதனிடம் இருக்கும் குணங்களில் முக்கியம் போராட்டக்குணம்.,



இந்த போராட்டக்குணம் ஆண் மற்றும் பெண்களை விட திருநங்கைகளுக்குத் தான் அதிகம் உண்டு என்பதை நாம் இன்றும் அறிவதில்லை..

அவர்களுக்கென சில சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளது இந்த நூற்றாண்டில் கல்வி உரிமை முதல் அரசு வேலை வரை அவர்களுக்கும் தனியிடம் கொடுத்து அவர்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது அரசு… அவர்கள் ஆண் மற்றும் பெண் பாலினம் போல ஆசைகளும், கனவுகளும், அன்பும், அக்கறையும் கொண்டவரகள் தான்… அவர்களுக்கென உரிமைகள் மற்றும் தேவைகள் மறுக்கப்பட்டதாலே அவர்கள் சாலையில் காசுக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது… 


அவர்களின் இந்த நிலைக்கு காரணம் நம் சமுதாயம் மட்டுமே என்றால் அது மிகையகாது… 

இன்றைய நூற்றாண்டில் தான் மூன்றாம் பாலினத்தவருக்கான சில உரிமைகள் வழங்கப்படுவதாக இருந்தாலும் மனதளவில் அவர்களுக்கு இடையூறுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது இந்த சமுதாயம். 



முதல் திருநங்கை SI பிரத்திகா யாஷினி அவர்களுடைய விண்ணப்பம் முதலில் அரசாலே நிராகரிக்கப்பட்டது காரணம் மூன்றாம் பாலினத்தவர் என்பதனால்., அதன்பிறகு அதன் மேல் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் தேவைகளுக்கும் முயற்சிகளுக்கும் நிச்சயம் அரசு உதவ வேண்டும் என்று கூறி அவரின் விண்ணப்பம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது… அதன்பிறகு அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்று இறுதியில் சென்னையின் ஒரு முக்கிய பகுதியில் SI ஆக வெற்றி பெற்று சாதித்துக்காட்டியுள்ளார் அவர்.. அவருடைய இந்த வெற்றி தான் தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும், இனி அவர்களுடய வாழ்க்கை மேலும் வளரும் என நம்பிக்கையூட்டியது… 

திருநங்கைகளும் மனிதர்கள் தான் 

அவர்களுக்கென வலி, அன்பு, உணர்வுகள் எல்லாம் நம்மைப்போலவே என்றுணர வேண்டும்… அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!!!

அவர்களின் உண்மையான போராட்டத்திற்கு மதிப்பளிப்போம்!!!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

Has happened, so what?What next?நடந்துவிட்டது,அதனால் என்ன? அடுத்தது என்ன??👍💪🏻🙏

 

நாளை என்னவென்று எண்ணுவதால் கவலை நிச்சயம் எல்லோருக்கும் உண்டு., மனிதனாக பிறந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்ற கனவும் கற்பனைகளும் நிச்சயம் உண்டு, அந்த கனவுகளால் மனதில் ஒரு வித பயம் நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சம், ஏமாற்றம் அதெல்லாம் நடப்பதற்கு முன்பே நம்மை ஆட்கொண்டு ஒவ்வொரு நாழிகையும் ஏதோ ஒரு வித பயத்தை மனதில் விதைத்து மகிழ்ச்சியில்லாத ஒரு சூழலை நம்மில் ஏற்படுத்தி  நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ முடியாமல் செய்கிறது . ஒரு சிலருக்கு இது புரிகிறது காரணம்,? என்ன வலியானாலும் தாங்கலாம், அப்படி நடக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சிப்போம் என்ற நம்பிக்கையில் போராட தயாரானவர்களுக்கு அந்த பயம் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 


ஆனால் இன்று வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர்  மனதில் ஒரு வித பயம் அவர்களை ஆட்கொண்டு எதிர்காலத்திற்கான சிந்தனையிலே ஒரு மீளா பயத்தினை உருவாக்கி வைப்பது தான் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகம்...


ஒரு மனிதனின் விருப்பம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான கனவு, பிறருடைய கனவையும் சிந்தனைகளையும் ஒருவர் மீது திணிப்பதனால் சில பல எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 


ஒருவருடைய வாழ்க்கையில் அவருக்கான எதிர்காலம் என்ன என்பதை அவரை தவிர மற்றவர்கள் தீர்மானிப்பது தான் முந்தைய தலைமுறையின் போக்கு ஆனால் இன்று அந்த உரிமையும் முழுமையாக அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது என்றாலும் கல்வி போன்ற தேவைகளுக்கு பிள்ளைகளின் விருப்பம் தான் முன்வைக்கப்பட்டு அவர்களின் எண்ணம் போல அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டுக்கிறார்கள் பெற்றோர்கள், ஆனாலும் இந்த சுதந்திர உரிமை காலத்தில் மாணவர்களின் குறைகள் என்னவென்பதை விரைவில் அறிந்து கொள்ள முடிவதில்லை அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தாலும் அவர்கள் அந்த வாய்ப்பிற்கு உரியவர்களா? என்பதில் தான் அவர்களின் எதிர்கால வெற்றி அமைகிறது


மனிதன் உருவளவில் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கிறான். ஆனால் மனதளவில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை காரணம் மனதளவில் வலிமையாக சிலர், மனதளவில் இலகுவாக சிலர் என்று ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். இப்படி பட்ட வேற்றுமையால் ஒருவன் எந்த அளவிற்கு போட்டிகளை சமாளிக்க முடியும், ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளை ஏற்கப்போகிறான் என்பது அவரவர் மனதை பொறுத்து என்பது தான் உலவியல் உண்மை.

இன்றும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அரசியல் விளையாட்டாகத்தான் இவ்வுலகம் கருதுகிறது ஆனால் மனதளவில் அந்த மாணவர்களின் வலியினை எண்ணிப்பார்க்க இறைவனால் மட்டுமே முடியும் ஏன்???

என் வலியை உணர என்னால் மட்டுமே முடியும் பிறரால் முடியாது இது உடல் சார்ந்த வலியோ அல்லது வேதனையோ, பயமோ அல்ல மனம் சார்ந்த வேதனை மற்றும் பயம்.,

ஒரு செயலை எதிர்கொள்ளும் போது நான் அதற்கு சரியானவனா என்று யோசித்து கைவிட வேண்டும் என்பது சரியான பொருள் அல்ல நான் அந்த செயலுக்கு சரியானவன் அல்ல என்று தெரிந்ததும் அந்த செயலை செய்ய உடலளவிலும், மனதளவிலும் என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழி.. உன்னால் முடியாது என்று சொல்ல பத்து பேர் இருந்தால் உன்னால் முடியும் என்று சொல்ல குறைந்தது ஒருவராவது இருப்பார்கள் என்பது இன்றைய உண்மை ஏனென்றால், நம்மைப்போல் போராடும் மனம் இவ்வுலகில் ஏராளம், ஆனாலும் நம் மாணவர்களின் எண்ணம் நாளைய நாள் என்னவாகுமோ என்று சிந்திக்க தொடங்குவதும், அவர்களின் மன வலிமையை சார்ந்து அவர்களின் முடிவுகள் இருக்கும் அதாவது மனதளவில் அவன் நாளை நடக்கும் போட்டியை சந்திக்க தயாராகிறானா?? அல்லது நாளை நடக்கும் போட்டியின் முடிவினை பற்றி சிந்திக்கிறானா??  தோற்றாலோ அல்லது வென்றாலோ நம் வாழ்க்கை எப்படி மாறும் என்று நேர் எதிர் எண்ணங்களை சிந்திக்கிறானா? என்பது அந்த மாணவனின் மனவலிமையை அடிப்படையாகக்கொண்டது.


அப்படிப்பட்ட சிந்தனைகள் அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல உலகில் இருக்கும் அத்தனை மனிதருக்கும் உண்டு 

இன்றும் சிலர் நமக்கு நாளை கொரோனா வந்துவிட்டால் இறந்து விடுவோமா என்ற பயத்திலே உடல் நிலை பாதிப்பில் உயிரை விடுவதும் ஒரு சில இடங்களில் நடக்கிறது.

நாளைய நாள் கனவு என்பது நம் முன்னேற்றத்திற்காகத்தானே தவிர நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதற்காக அல்ல என்பதை தயவு செய்து உணருங்கள்.

அந்த நேர்மறை எண்ணங்களுக்கு ஏற்ப நம்முடைய செயல்முறையில் நிச்சயம் மாற்றம் தேவை என்பதை உணருங்கள்.



மணவர்களின் வயது மதில்மேல் பூனைப்போல நிச்சயம் அனுபவ சிந்தனைகள் அவர்களுக்கென உருவாவது என்பது ஆயிரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ தான்., அதனால் நிச்சயம் மாணவர்களின் எண்ணங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழி நடத்தலை மையமாகக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது மனவியல் நிபுணர்களின் கருத்து... 





ஒவ்வொரு மாணவனின் மனதிலும் நற்சிந்தனைகளை விதைப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை... 

"உன்னால் முடியும் முயற்சி செய் என்று கைகொடுக்க வேண்டுமே தவிர.. உனக்கு இதை விட வேறு வழியில்லை இதில் வென்றால் மட்டுமே உன் வாழ்க்கை "என்ற ஒரு கருத்தை அவர்களுக்குள் விதைப்பதால் தான் இன்று மாணவர்களின் எண்ணம் ஒரு வித பயம் கலந்த எதிர்கால சிந்தனையாக வலுவிழந்து நிற்கிறது...



 வாய்ப்புகள் நிச்சயம் வரும் தோற்றால் அந்த வாய்ப்பு மீண்டும் வருவதற்குள் இப்போது தோற்றதற்கான காரணம் அறிந்த உன்னைத் தயார்படுத்திக்கொள் என்று ஒரு சிந்தனையை மாணவர்களின் மனதில் விதைத்தாலே போது அவர்களுக்கு நாளைய போட்டி பற்றிய பயம் அழிந்து நிச்சயம் வெல்வேன் என்ற நேர்மறை எண்ணம் பிறக்கும்...

இந்த சமுதாயம் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது எனது கருத்தல்ல இந்த தலைமுறைக்கு நம் சமுதாயம் கற்றுக்கொண்டுக்க வேண்டியது நிறைய இருக்கிறது அதை காலம் கடத்தாமல் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் போட்டிக்கு பயந்து தற்கொலைக்கு முயலும் எண்ணம் வராது...

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணங்களின் வெளிப்பாடே இந்த இழப்புகள் இனியும் இது போன்ற இழப்புகள் நேராமல் காக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் பொறுப்பு...



போட்டிகள் மீதான பயத்தை அழித்து 

வாய்ப்பிற்காக அவர்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விடாமுயற்சியை இளைஞர்கள் மனதிலில் விதைத்தால் போதும் நாளைய நாள் அவர்களுக்கு பிரகாசமாகும்…


நாளை தோற்றுவிடுவேனோ? என்ற பயம், தோற்றுவிட்டேன் என்ன செய்வது என்ற குழப்பம் தான் நம் முன்னேற்றத்திற்கான முதல் எதிரி, அந்த எதிரி வேறெங்கும் இல்லை நம் எண்ணங்களாக நமக்குள்ளேத்தான நடமாடிக்கொண்டிருக்கறது… அந்த எண்ணத்தை அழித்து நடந்து விட்டது அடுத்து என்ன செய்யலாம் என்று எப்போது சிந்திக்கிறோமோ அன்று தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக நம் எதிர்கால இலட்சியத்தை நோக்கி செல்லும்...👍💪🏻🌱💐🙏


"Has Happened, so what??

what next???"


சனி, 12 செப்டம்பர், 2020

"எதையும் கடந்து வா மனமே"...!👍💪🏻

வாழ்க்கையில் 

இதுவும் கடந்து போகும் 

மனம் என்ற பெட்டிக்குள் 

அடைக்கப்படுவதும், அடைபடுவதும் நம் எண்ணத்தின் வெளிபாடே!

வெற்றி என்று நினைத்தவுடன் வெற்றி வந்துவிடுவதில்லை 

வெற்றிக்கான செயல்முறைகளையும் நல்ல எண்ணங்களாக மனதின் தோட்டத்தில் விதைத்தால் 

பல இயற்கை இடர்பாடுகளாக செயற்கை தடைகளை கடந்து நம் வெற்றி முளைவிடும் 

நேர் கொண்ட பார்வை,

திடமான மனம்,

நல்ல எண்ணம்,

சீறிய சிந்தனை,

மங்காத முயற்சி,

எதுவாயினும்  சகிப்புத்தன்மை,

அன்பான அணுகல் 

இப்படி பல தேவையான நல்ல செயல்பாடுகள் கொண்டே 

வெற்றிக்கான பாதையை வடிவமைக்க வேண்டும். 


ஒரு வடிவமற்ற கல்

மற்றவரால் மிதிக்கப்படும் 

வடிவம் கொண்ட சிலைக்கல் மற்றவரால் மதிக்கப்படும்

மதிப்பதற்கும், மிதிப்பதற்கும் உருவம் மட்டுமே வேறுபாடு

ஆனால் அந்த உருவம் உருவாக்க படும் இன்னல்களுக்கு கொடுக்கும் விலையே அந்த மதிப்பு!!


இதையும் கடந்து போ மனமே!!

உன்னை உரசி செல்லும் தடைகள் எல்லாம்

உன்னை செதுக்குவதில் தூசிகளாகத்தான் சரிகிறது 

அந்த தூசிகளால் உன்னை இழந்துவிட்டாய் என்று அர்த்தம் கொள்ளாதே!

"நீ செதுக்கப்படுகிறாய்" என்று மனதில் கொள்!

நினைப்பது எல்லாம் நடந்தால் உலகில் வெற்றியின் சரித்திரங்கள் எழுதப்படாமலே போகும்!

ஒரே முறை பிறந்து... 

ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் மனிதர்களும் உண்டு.,

நான் இதற்குத்தான் பிறந்தேன் என்று உலகிற்கு செயலால் சொல்லிய மனிதர்களும் உண்டு., 

ஒரு இடத்தில் தேவையானவர்களுக்கு சிறந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உலகம்., 

அந்த சிறந்தவர்களும் சிறியவர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை உணர வேண்டும்!

சாதித்தவர்கள் சந்தித்த சோதனைகளுக்கு முன் சாதனைகள் எல்லாம் ஒரு பாகம் என்று உணர்ந்தால் புரியும்..,



உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...