பணம், மனம் இவை இரண்டும் உள்ளவர்கள் நிச்சயம் குறைவுதான் ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லை என்று இந்த சமுதாயத்தை குறை சொல்லிக்கொண்டு வாழும் நாம் என்றாவது நம்மை பற்றி சிந்தித்தது உண்டா??
அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்டினி அதே நமக்கு வந்தால் அது இரத்தம்.,
எது எப்படியோ காலம் நிற்கப்போவதில்லை ஆனால் மனிதனின் ஓட்டம் நிச்சயம் நின்றுவிடும்.,
அதற்குள் முடிந்ததை செய்,,
முடிந்தால் முடியாதவர்களுக்கு உதவி செய்,,
எவரோ தான் என்று பார்க்காமல் எந்நிலையில் அவர் உள்ளார் என்று பார்,,
வலியை ஏற்க வேண்டாம்,
உணர கற்றுக்கொள் கோவில்கள் ஏராளம் பூமியில் உண்டு - ஆனால் மனிதனுக்கு கடவுள் மனிதனே!
அக்கடவுளாய் ஒருவர் மற்றொருவரின் தேவையை பூர்த்திசெய்யும் போது அனைவருக்கும் தெரிவார்.
இன்றைக்கு Officla covid special so minimum staff only allowed to work அதனால் மதிய உணவு யாரும் கொண்டு வரல ஒரு 8 பேர் சேர்ந்து சாப்பாடு Order பண்ண திட்டம் போட்டோம் Zomato எங்க ஏரியால சேவையில் இருந்தது. சைவம் மற்றும் அசைவம் வாய் சுவைக்க மனம் குளிர order போட்டு ஒரு அரைமணி நேரம் காத்திருக்க வந்தது அழைப்பு மணி.,
Sir zomatoல order பண்ணிங்க company எங்க இருக்குங்க என்ற ஒரு பெண்ணின் குரல் அப்போ எதையும் யோசிக்காம அலுவலகம் இருக்கும் இடத்தை விளக்கமாக கூறிவிட்டு வைத்துவிட்டேன்.
மறுபடியும் ஒரு 10நிமிடம் கழித்து அதே போன் sir company gate ல நிக்கிறேன் sir சாப்பாடு வந்துடுச்சு வாங்கிக்கோங்க அதே பெண்ணின் குரல் அப்போது தான் நம்ம ஏரியாவுல ஒரு பெண் zomato ல service work பண்ராங்கனு தெரிஞ்சது
நிறைய செய்தி பாத்திருப்போம், fb, whats app இப்படி எல்லா social media லயும் இந்த மாதிரியான service செய்யும் ஆண்களின் நிலையை அறிந்திருப்போம் அது எல்லாம் நமக்கு பொழுதுபோக்கு தான். நமக்கு தேவை உணவு நம் வீட்டை தேடி ஆனால் இந்த உலகம் இன்று ஒரு மிகப்பெரிய பேராபத்தில் சுழன்று கொண்டிருக்க அந்த ஆபத்திலும் தன் குடும்ப சூழலை தலையில் ஏந்தி உணவு பொட்டலங்களை முதுகில் சுமந்து திருமணம் ஆகாத ஒரு இளம் பெண் சிவப்பு நிற சட்டையில் என் கண் முன்னே நிற்கிறார்.
பணம் ஒன்று தான் இவ்வுலகை இயக்குகிறது. எந்த சூழ்நிலையிலும் பணம் இல்லாத வாழ்க்கையில் ஒருவேளை சாப்பாட்டிற்காக உயிரையும்,உடலையும் இவ்வுலகம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் என்ற நிலையிலும் போராடிக் கொண்டிருக்கும் அந்த சகோதரி நிலை கண்டு கண்ணீர் சிந்தவும் முடியாமல் அவளிடம் பேச ஆரம்பித்தேன்.
குடும்பத்தில் ஒரே பெண் அப்பா பல ஆண்டிற்கு முன் மரணம் அம்மா கூலி வேலை
விதவை என்ற கைம்பெண்ணின் நிலையில் அப்பெண்ணால் இவ்லுலகை எரிக்க முடிந்திருந்தால் உடனே எரித்திருப்பால் கோபத்தில் ஆனால் இயலாது இப்படிபட்ட கோவத்தோடு தன் மகளை பெண்ணாய் வளர்க்க ஆசைப்பட்டால் சூழ்நிலை அப்பெண் ஒரு ஆண் மனதோடு வளர்ந்தால் தான் உலகில் உயிருடன் வாழ முடியும் என்ற நிலையில் அந்த பெண் (மகள்) என் கண் முன்னே அடுத்த order க்கு delivery செய்ய busyயான நிலையில் நின்றிருக்கிறாள்.
அப்பெண்ணின் துணிவில் இருக்கும் ஆண்மையை பாராட்ட வார்த்தைகள் போதாது. ஒற்றை புன்னகையோடு என் இடம் விட்டு நகர்ந்தால் அப்பெண்.ஒவ்வொரு மனிதனை சந்திக்கும் போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும் என்பது உண்மைதான். இன்றைய அனுபவம் ஒரு சிங்கப்பெண்ணை சந்தித்த மகிழ்ச்சி எப்படியாவது இந்த பெண்ணை போன்றவர்களுக்கு ஒரு உதவி செய்தால் நிச்சயம் நம் பெண்ணுலகம் இருக்கும் இடமே வேறு.,
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
செய்யப்படும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்தவரின் புண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சுயநலம், தேவை இதை தவிர என்றாவது கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம்., நம்மால் முடிந்த உதவியை எதிர்பார்த்து பலபேர் நம்மோடு வாழ்கிறார்கள் சுற்றி பாருங்கள் உங்கள் அருகிலும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் கண்ணீரிலும் ஆயிரம் வலிகள் உண்டு அதேபோல்
ஒவ்வொரு மனித சிரிப்பிலும் மற்றொருவரின் உதவி நிச்சயம் இருக்கும்.
(Note:-ஒவ்வொரு உதவியும் ஒரு சுய(பொது)நலம்)