சனி, 29 ஆகஸ்ட், 2020

"ஒரு தனி மனிதன் முயன்றால் எதையும் சாதிக்கலாம்"Vasanth & Co H.வசந்தகுமார் MP 👍💪🏻



வாழ்க்கையில் நான் சாதிப்பேன் என்ற வைராக்யம் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் அதற்கும் ஒரு சில சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் இல்லை என்றால் என்ன தான் நாம் செய்தாலும் முன்னேற்றம் என்பது எட்டகனியாகவே இருக்கும் 


அப்படி என்னத்தான் பிரச்சனை நமக்கு எல்லாம் சரியாகவே இருக்கு ஆனாலும் எதோ ஒரு விஷயத்தில் மட்டும் நம் செயலோ அல்லது முயற்சியோ முழுமையடையாமல் இருப்பதால் நம் செயலும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்ற குழப்பம்


எல்லாருக்கும் இருக்கும் குழப்பம் தான் அதற்கான விடையாக இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வெற்றி சாம்ராஜ்யத்திற்கு சொந்தக்காரர், "வசந்த&Co" வின் உரிமையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.H.வசந்தகுமார் MP அவர்கள்...


பணம், பதவி இருந்து சாதிக்க நினைப்பவர்களுக்கு வரும் குழப்பம் வேறு எதுவுமே இல்லாமல் தேவையானதை உருவாக்கி சாதிக்க நினைப்பவர்கள் சந்திக்கும் குழப்பம் வேறு


1970களில் ஏழ்மை இளைஞன் பட்ட படிப்பு முடித்த இளைஞனின் 

கொள்கையில் ஒரு சுவாரசியம் இருக்கிறது


அந்த சுவாரசியமும், அவரது கொள்கையும் ஒரு மனிதனை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று இன்று உலகத்தில் பலரும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு உண்மை உழைப்பு


இருந்த வரை அவரது வாழ்க்கை வெளியே  வரவில்லை அவர் இறந்த பிறகு அவருடைய வாழ்க்கையின் மொத்த நினைவுகளும் இன்று உலகம் வியந்து பார்க்கிறது அந்த மனிதனை


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் பிடித்திருக்கும் என்பதையும் தாண்டி அவருடைய வளர்ச்சி பொதுவாக எல்லாரையும் சிந்திக்க வைத்துள்ளது 


யார் அந்த வசந்தகுமார்??


"ஒரு தனி மனிதன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்"


ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை மந்திரம் பிழைப்புத்தேடிய ஒரு வாலிபனின் வாழ்க்கை அவருடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முதலாளி மட்டும் தான் அடுத்து அவர் எடுத்த முடிவு நான் முதலாளி ஆக வேண்டும் என்று 


உலகில் எல்லோரும் நினப்பதுதான் நான் முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு பொதுவான எதிர்பார்ப்பு தான் ஆனாலும் அவரின் எதிர்பார்ப்பு சற்று வித்தியாசம் அந்த முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் சாதாரணமான எண்ணம் அல்ல உடலில் குருதியில் ஒன்றென ஊரிப்போன ஒரு எண்ணம், அதற்காக தனக்கான இருந்த நல்ல வேலையையும் விட்டு விலகி முதலில் ஒரு தொழில் துவங்கினார் இந்த இடத்தில் தான் அவரது தொழிலுக்கான ஒரு தூண்டுதல் விதை அவருக்குள் முளைத்தது அவரது நண்பர் அவரது கடையை வாடகைக்காக கொடுத்தது.,


அவர் வாழ்க்கையின் கனவான முதலாளித்துவத்திற்கான ஆரம்பம் அந்த கடையில் தான் உதயமானது ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அப்போதைக்கு கிடைத்த பொருட்களை வியாபாரம் செய்தார் அந்த பட்டதாரி வாலிபன்.


கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய தொழில் விருக்தியானது, காரணம் அவருக்கு தொழிலைத்தவிர வேறு எதுவும் தெரியாது 


அவருடைய கொள்கை "அவருடைய வாழ்க்கையில் ஒரே முதலாளி பிறகு நான் தான் முதலாளி"




அவருடைய ஆசை "விலை உயர்ந்த காரில் வந்து இறங்கும்போது தன்னுடைய கார் கதவை இன்னொருவர் திறந்துவிட வேண்டும்"


வாழ்க்கையின் திறவுகோள்

"ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் இவ்வுலகில்"




"உலகில் அதிகமாக ஆசைப்படு நிச்சயம் அது கைக்கூடும் உண்மை உழைப்பு இருந்தால்" என்பது இவருடைய வாழ்க்கையில் உண்மையானது 


அரசியலில் ஆதிக்கம் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கற்பனை செய்தவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவே வாழ்க்கையை முடித்துக்கொண்டார்…


எத்தனை முயற்சிகள்???


ஒரு சாதாரண இளைஞன் 40ஆண்டுகளில் ஒரு தனி விற்பனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி தன் நாட்டிலே ஒரு உயர் அரசு பதவியை பிடித்துள்ளார் என்றால் அந்த 40 ஆண்டுகாலம் அவருடைய உழைப்பு எப்படிபட்டதாக இருந்திருக்கும் அத்தனை உழைப்புக்கு உரிமையாளர் தான் திரு.H.வசந்த குமார் MP


ஒரு விற்பனைக்கடல், தனி சாம்ராஜ்யம், நாடாளுமன்ற உறுப்பினர், அத்தனை உயர் நிறுவனங்களுக்கும் ஒரு மிகச்சிறந்த போட்டியாக வலம் வந்த தமிழக தொழிலதிபர் இப்படி ஏகப்பட்ட வெற்றிகள் அதற்கு எத்தனை தோல்விகளை சந்தித்திருப்பார் இவர்?? நினைக்கையில் தலை சுற்றுகிறது

ஒன்றும் இல்லாமல் ஆரம்பமான ஒரு பொட்டிக்கடை இன்று தமிழகத்தில் மக்களின் பிரத்யேக விற்பனை நிலையமாக உருவெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது


அவருடைய வெற்றிக்கு காரணம் கனவுடன் கூடிய முயற்சி இதுதான் கனவு இதுதான் என் வாழ்க்கை என்று அடம்பிடித்து இத்தனை நாள் வாழ்க்கையை போராடி வென்று கொண்டிருந்திருக்கிறார் 


அவரது பிறப்பு ஒரு சாதாரண நிலை இறப்பு இன்று தமிழகமே அவரது வெற்றியை வியந்து பார்க்கிறது


வெற்றியாளர்களின் வெற்றியைவிட தோல்வியை படியுங்கள் நம் தோல்விகளுக்கான விடை கிடைக்கும்


வாழ்க வளமுடன்!!!👍💪🏻😉

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

கொரோனா இல்லாத உலகம் படைக்க உணவே மருந்து!!🙏😷🥕🌽

 

கண்ணுக்குத் தெரியாத ஒரு தொற்று, தொற்றிவிட்டால் உயிரைக் கொல்லும் அளவிற்கு பாதிக்கும் தொற்று, அருகில் நெருங்க நெருங்க நம்மையும் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்திலே உடலில் உள்ள அவ்வளவு வலிமையும் கரைந்துவிடுகிறது.,


இந்த தொற்றினால் வரும் வலியை விட மக்களின் பயம் தனிமை படுத்துவதால் இருக்கும் அவமானத்திற்காகத்தான், சில பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் வெளியே வரமுடியாமல் உயிரை மாய்த்தவர்களும் உண்டு

து ஒரு வைரஸ் காய்ச்சல் தொற்று போலத்தான் சில அறிகுறிகள் வந்து போகும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முற்கால மருத்துவம் மட்டுமே இதற்கு சரியான தீர்வு சரி இந்த வைரஸை அழிக்க எந்த மருந்தும் இல்லை ஆனால் எப்படி மக்கள் பல லட்சம் பூரண குணமடைந்து விட்டார்கள் என்று வீடு திரும்புகிறார்கள்??? மருந்தே இல்லாத நோயிலிருந்து எப்படி மக்கள் குணமடைந்து திரும்புகிறார்கள்??? சாதாரண காய்ச்சலுக்கு மருந்து, விட்டமின் மாத்திரை, சளிக்கு சாதாரண மாத்திரை, தலைவலிக்கும் நன்றாக உறங்க சாதாரண மாத்திரை இப்படி மக்கள் முன்னரே தன் வீடுகளில் பயன்படுத்திய மருத்துவ முறைதானே தனிமை படுத்தப்பட்டுள்ள இடங்களிலும் மருத்துவர்கள் வழங்குகிறார்கள் சரி எல்லாம் நம்மிடமே உண்டு அப்படியும் ஏன் சில உயிர்கள் மாண்டுவிட்டனர் காரணம்?? ஒரு சாதாரண மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு தான் இந்த வைரஸின் தாக்கம், சிலர் இறந்து போக காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் வைரஸுன் தாக்கம் சற்று அதிகம் அவ்வளவுதான்


ஆனால் என்னை தனிமை படுத்துகிறார்கள் என்ற ஒரு பயம், மற்ற மக்களால் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம், எதிர்காலத்தில் தன்னை கொரோனா தாக்கியவர்கள் என்று மக்கள் ஏசுவார்கள் என்ற அச்சம் இப்படி நம்முடைய இந்த கொரோனா தொற்றிற்கும் அதனால் இறப்பிற்கும் முக்கிய காரணம் மனிதனின் உடல் நிலை மற்றும் மனநிலையும்தான் 


முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகளை தான் இன்று மாத்திரை என்ற பெயரில் மருந்தாக கொடுக்கிறார்கள் ஆனால் இந்த கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பில் தோற்கும் நம் மருத்துவம் தான் இன்று பல லட்சம் பேரை குணப்படுத்தி வருகிறது..,

மக்களின் மனநிலையில் மாற்றம் தேவை "தனிமைப்படுத்துவதால் நாம் தீண்டத்தகாதவர்கள் அல்ல நம்மால் பிறருக்கு இது பரவ கூடாதென ஒரு நற்சிந்தனை என்பதை உணருங்கள்" 





கொரோனாவை உணவால் மட்டுமே வீழ்த்த முடியும், உண்ணும் உணவில் மாற்றம் தேவை 

இன்றைய மக்கள் மருந்தை அல்லவா உணவாக எடுத்துக்கொள்கிறோம் 


உணவில் உப்பு இல்லாமல், சர்க்கரை இல்லாமல், வேக வைத்து வேறு எந்த சுவையும் இல்லாமல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நம்மில் பலர் காரணம் உடல் நிலை இப்போது உணவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது… உணவில் சுவை வந்தால் இறந்துவிடுவோம் என்று தினம் தினம் பயந்து பயந்துதான் உணவையும் உண்ணுகிறார்கள் பலர்… எது எப்படியோ இன்று முதல் மருந்தை உணவாக உட்கொண்ட நாம் உண்ணும் உணவையே மருந்தாக எடுத்துக்கொள்வோம் என்பதில் தீர்மானம் தேவை


உணவே மருந்து என்ற பழைய நிலைக்கும் திரும்பும் வரை கொரோனா நம்முடன் தான் வாழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...


உணவால் உடலை பலப்படுத்துவோம்!!!

முன்னோர்கள் வழி நடப்போம்!!!

கொரோனாவை எதிர்கொள்வோம்!!!😷👍💪🏻





வியாழன், 27 ஆகஸ்ட், 2020

புரிதலற்ற முடிவு!!! உணர்வற்ற உடலாகும் உணர்வுச்சங்கிலியால்!!!

 


பிறப்பில் நாம் மனிதர்கள்  உலகில் உயிரினங்கள் எல்லாம் இந்த பிறப்பை ஒரு வாய்ப்பாக எண்ணி சந்தோசங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ ஆரம்பிக்கிறது.


"சந்தோசங்கள் மட்டுமே இவ்வாழ்க்கையில் இருந்தால் அத்தனை சந்தோசங்களும் மதிப்பிழந்துவிடும்"


 வாழ்க்கைனா என்னப்பா?

பிறந்தோம் 

வாழ்ந்தோம் 

வளர்ந்தோம் 

சிரித்தோம் 

அழுதோம் 

மாண்டோம் இவ்வளவுதானா வாழ்க்கை?


வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் வாழ்நாள் என்பது ஒவ்வொரு உயிருக்கும் மாறுபடுகிறது


உலகில் வாழ வேண்டும் என்று நினைப்பவன் விரைவில் மாண்டுவிடுகிறான் உலகிற்கே ஒரு பாரமாக பாவங்களை மாட்டுமே சேர்ப்பவன் உலகில் நீண்ட ஆயுள் வாழ்கிறான்

என்ன இது இறைவனின் ஒரு படைப்பு தேவையானவர்களை எடுத்துவிட்டு தேவையற்றவர்களை உலகிற்கு அர்ப்பணிக்கிறான் இறைவன் என்ன காரணம்?? இதில் காரணம் ஒன்றுமில்லை இந்தவுலகம் இறைவனின் படைப்போ அல்லது அறிவியலின் படைப்போ அடுத்த நொடி உலகில் என்னில் உன்னில் என்ன மாற்றம் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது இது தான் இறைவனோ அறிவியலோ உலக உயிர்களுக்கு கொடுத்துள்ள ஒரு வித சவால்


அடுத்த நொடி என்னவென்பதே தெரியாமல் நான் வாழ்க்கை வாழ வேண்டும் எப்படி??? அடுத்து நான் நினைப்பது நடக்குமா என்று தெரியாமல் நான் தயாராக வேண்டும் எப்படி??


எல்லாம் அப்படிதான் நாளை நடக்கும், நாளை நான் உயிருடன் இருப்பேன் இதை நடத்துவேன் என்ற ஒரு நம்பிக்கை தான் நம்மை வழிநடத்துகிறது.,அந்த ஒரு நம்பிக்கையில் தான் இவ்வுலகம் ஓடிக்கொண்டிருக்கிறது


விலங்கினங்களின் வாழ்க்கை ஒரு உணவுச்சங்கிலி என்பது அனைவரும் அறிந்ததே அந்த உணவுச்சங்கிலியில் எந்த உயிரினம் எப்போது இன்னொரு உயிரினத்தின் வாழ்வாதாரத்திற்கு இறையாகும் என்பதை அறியாது சுற்றிக்கொண்டிருக்கும் அதற்கென ஒரு நேரம் வரும் போது தன் இறையை அவ்வுயிரினம் உண்டு தன் வளர்ச்சியை மேம்படுத்தும்


ஆனால் மனித இனம் விலங்கினங்கள் போன்ற உணவுச்சங்கிலி இல்லை என்றாலும் ஏதோஒரு விதத்தில் ஒரு மனிதனின் இழப்பு மற்றுமொரு மனிதனின் வளர்ச்சியை மேம்படுத்தும்


"ஒருவருடைய தோல்வி மற்றொருவருடைய வெற்றி"


"ஒருவருடைய அழுகை மற்றொருவருடைய சிரிப்பு"


"ஒருவருடைய இழப்பு ஒருவருடைய பிறப்பு"


"இது தான் மனிதர்களின் உணர்வுச்சங்கிலி"




ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஆயிரம் பேரின் எண்ணமும் ஒன்றாகாது, ஆயிரம் விதத்தில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை எண்ணங்களுக்கும் ஒரே நேரத்தில் உணர்வு உயிரூட்டினால் அந்த இடம் போர்க்களமாகும்

ஆயிரம் எண்ணங்களில் ஒரே எண்ணம் மட்டுமே இறுதியில் வெல்லும் அந்த போரில் கடைசியில் நிற்பவனின் எண்ணம்.,


இந்த மனித பிறவியில் ஆறாம் அறிவானது ஒன்று உண்டு அது தான் விலங்குகளையும் மனிதனையும் வேறுபடுத்தி காட்டுகிறது அதுதான் ஒருவரை ஒருவர் புரிந்துணர்தல்.


"அறிவும் மனமும் வேறு"


அறிவால் விரைவில் முடிவெடுக்க முடியும் ஆனால் மனதால் மட்டுமே புரிந்துணர முடியும், புரிதல் இல்லாத முடிவு அர்த்தமற்ற முடிவாகும் எவருக்கும் பயனில்லாத முடிவாகும்


புரிதல் அற்ற முடிவானது எடுத்த பிறகு இழப்பிற்கு பிறகுதான் புரியும், சற்று முன் யோசித்திருந்தால் இழந்திருக்க மாட்டேன் என்று இப்படி எண்ணி வருந்தி பின் பயன் என்ன?? போனது திரும்ப வரவா போகிறது??


அத்தனை பெரிய மாமனிதர்களுக்கும் நமக்கும் உள்ள சில வித்தியாசங்களில் ஒன்று இந்த புரிதலுடன் கூடிய முடிவும் ஒன்றுதான் அனைத்து கோணங்களிலும் சிந்தித்து புரிதல் கொண்டு அந்த செயலை வெற்றியடைய செய்வதில் முக்கிய தேவை அனுபவம்


நாளை இருப்போமா? இறப்போமா? என்ற உறுதியற்ற உலகில் புரிதலற்ற முடிவால் மனதளவில் காயங்கள் ஏற்படுத்தி இருக்கும் வரை ஈருயிருக்கும் எந்த வித தொடர்புமற்ற ஒரு சூழ்நிலை உருவாக்குகிறது இந்த உலக வளர்ச்சி


நாளை என்ன என்று சிந்திக்கும் நாம் நாளை யாரோடு என்று சிந்திக்க மறக்கிறோம் வருபவரும் செல்பவரும் வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது எதனால் புரிதலற்ற முடிவுகள் இருப்பதனால்


பிறப்பு முதல் இறப்பு வரை எந்த ஒரு நபரும் நம்மோடு உலகில் பயணிப்பதில்லை ஒவ்வொரு உயிருக்கும் ஒரு முடிவான காலம் உண்டு


அக்காலம் எக்காலம் என்று சிந்தித்து சிந்தித்து காலத்தை கடத்துவதை விட்டு எக்காலமானாலும் அது என் காலம் என்ற நம்பிக்கையில் சமுத்துவ புரிதல் கொண்ட முடிவு எடுத்து இவ்வுலக அமைதியின் வளர்ச்சிக்கு வழி செய்வோம்!!!





"புரிதல் இல்லா ஒவ்வொரு முடிவும் உணர்வுசங்கிலியால் மனிதர்களின் உணர்வுகள் கொல்லப்பட்டுக்கொண்டு தான் இருக்கும்"🧐🤯🥴💐🌱


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"பிற்போக்கு எண்ணம் தான் வாழ்க்கையின் முதல் தோல்வி"😒👍🙏💐


நம்ம வாழ்க்கையில் நேருக்கு நேர் மோதும் எதிரி, பின்னால் குத்தும் விரோதி, முன்விட்டு பின் பேசும் துரோகி, நம் நிலையை ஏளனமாக நினைக்கும் பச்சோந்திகள் இப்படி பல வகையிலான குணங்களை பார்த்திருப்போம்.


எதிரிகள் இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை அப்படி இல்லை என்றாலும் நம்முடைய வலிமை நமக்கு தெரியாதல்லவா??சரி கண்ணுக்குத் தெரிந்த எதிரியை எதிர் கொண்டு போராட முடிந்தது அதில் வெற்றி,தோல்விகள் எல்லாம சகஜம் ஆனால் நமக்குள் இருக்கும் ஒரு எதிரி, துரோகி, விரோதி இப்படி பல பெயர்கள் சொல்லலாம்.,


யார் அந்த எதிரி  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அது? அது ஒரு குணம்  தன்னை பிறரோடு ஒப்பிட்டு தாழ்த்திக்கொள்ளும் எண்ணம்.,


அவனுக்கு நல்ல வாழ்க்கை 

அவங்களுக்கு பணம் இருக்கிறது 

அவர்களுக்கு அது இருக்கிறது எனக்கு எதுவுமே இல்லை

இந்த குணம் கொண்டவர்கள் யாருமே எளிதில் தன்னை உயர்த்திக்கொள்ள முடியாது


"எல்லாம் இருந்து சாதித்தவனின் வெற்றியை விட எதுவுமே இல்லாமல் அதை உருவாக்கி சாதித்தவனின் வெற்றிதான் உயர்ந்தது"


எல்லாம் உள்ளவன் சாதிக்கவே அவ்வளவு கஷ்டப்படுகிறான் எதுவும் இல்லாம நான் எப்படி சாதிப்பது??


எல்லாம் உள்ளவர்களுக்கும் எதுவுமே இல்லாதவர்களுக்கு வலி என்பது ஒன்று தானே


ஒரு இனிய நாள் ஆன்மீக தினத்தன்று இறைவன் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்க ஆலயம் ஒன்றில் ஆன்மீக பெரியவர் ஒருவர் தியானத்தில் இருக்கிறார் அதே ஆலயத்தில் வழிபாடு முடித்த ஒரு இளைஞன் ஆலயத்தை சுற்றிவிட்டு மரத்தடியில் தனிமையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க அந்த பெரியவர் அந்த இளைஞனின் கண்ணுக்கு தெம்பட அவரருகில் சென்று அமருகிறான்

அவர் கண்விழித்து அவனை பார்த்து சொல்லுங்கள் என்ன வேண்டும் என்றார் அதற்கு அந்த இளைஞன் ஐயா எனக்கு மன நிம்மதி இல்லாமல் கடந்த சில நாட்களாக புலம்பி திரிகிறேன் எனக்கு நிம்மதியான ஒரு முடிவு இந்த பிரச்சனைக்கு தேவை நான் ஒரு தொழில் செய்து வருகிறேன், என்னால் ஒரு அளவிற்கு மேல் லாபம் ஈட்ட முடியவில்லை ஆனால் என்  வீட்டெதிரில் வசிக்கும் ஒருவன் செய்யும் தொழிலில் மட்டும் லாபம் அதிகம் ஈட்டுகிறான், என்னைவிட அவன் சமூகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறான், என்னால் அவன் ஆளவிற தொழிலில் நிலைநாட்ட முடியவில்லை என்னிடம் ஆட்கள் குறைவு, அவனைவிட என் தொழிலில் ஈடுபாடு குறைவாக உள்ளது நான் என்ன செய்வதென்பதே புரியாமல் தவிக்கிறேன் என் மனதில் அவனைப்பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது,அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான்.,


அதற்கு அவர் நான் சொல்வதை செய்வாயா என்றார் சரி சொல்லுங்க என்றான் ஆலய வாசலில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருப்பான் அவனருகில் சென்று அமர்ந்து அவனோடு பிச்சை எடுப்பாயா என்றார்?? அவன் திக்கிட்டு ஐயா நான் எப்படி பிச்சை எடுப்பது என்றான் ஏன் முடியாது? அவனும் உன்னைப் போலவன் தானே என்றார் நான் சொல்வதை செய் நீ கேட்டதற்கான விடை கிடைக்கும் என்றார்.,


ஐயா என்னால் முடியாது என்றான் ஏன் என்றதற்கு அவன் என்னை விட தாழ்ந்தவன் அவனருகில் சென்று என்னால் அமர்ந்து பிச்சை எடுக்க முடியாது அதிலும் நான் அவனை விட அந்தஸ்தில் உயர்ந்தவன் என்றார் இது தான் உன் தவறு உன்னை விட தாழ்ந்தவனிடன் பார்க்கு இந்த தாழ்வு மனம் நிச்சயம் உன்னை விட உயர்ந்தவனிடமும் இதே தாழ்வு நிலை தான் உனக்கு வரும்.,


அந்த பிச்சைக்காரன் எப்போதும் உன் அளவிற்கு வளர வேண்டும் என்று நினைப்பதில்லை, அவன் தினம் ஆயிரம் பேரை சந்திக்கிறான் ஆனால் எல்லாரையும் போல வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை அப்படி அவன் எண்ணினால் அன்றைய வாழ்க்கை அவனிடம் இல்லை என்பதை அவன் நன்கு அறிவான்  காரணம் அவன் அன்றைய வாழ்க்கைக்கு தேவையானதை பெற்றுக்கொண்டால் போதும் அவன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பான் இதுதான் அவனுடைய தினசரி நிகழ்வு ஆனால் நீ உன் குடும்பத்திற்கு தேவையானதும் போதுமானதும் உன்னிடம் இருக்க பிறர் ஒருவரை பார்த்து அவனைப்போல் உயர என்னால் முடியவில்லை என்று அவனை நினைத்து உன்னை தாழ்த்திக்கொள்வதால் தான் உன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை 

போதும் என்ற மனம் ஒன்று இருந்தால் பிறருடன் ஒப்பிட்டுபார்க்கும் எண்ணம் வராது

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"..


பிறருடன் ஒப்பிடுகையில் அவர்களின் இடம், சூழ்நிலை, வாழ்க்கை வேறு என்பதை உணரும் போது தான் நம்முடைய வாழ்க்கையின் மதிப்பு உணர முடியும், எவரும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை அவரவர் வாழ்க்கையை சூழ்நிலைக்கேற்ப வாழ்ந்தாலே போது நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.


ஆசை, பொறாமை, தாழ்வு மனம் இது தான் நம் வாழ்க்கையின் எதிரியாக இருக்கும் அதுவும் நம்மிடமே இருக்கும்., உன்னால் முடியும் என்றால் முயற்சி செய் நிச்சயம் கிடைக்கும் ஆனால் பாகுபாடு எண்ணம் எப்போதும் முயற்சி செய்ய விடாது என்பதை உணர வேண்டும்"


வாழ்க்கையின் வாய்ப்பு எல்லோருக்கும் ஒன்றுதான்., சூழ்நிலை மட்டுமே வேறு..,

ஆனால் வாழும்போது தான் மதிப்பு ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்கிறார்கள் காரணம் நம்முடைய தேவைகள்.,


இது போன்ற பிற்போக்கு குணங்களால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்கள் தான் அதிகம், இந்த எண்ணங்கள் ஒரு போது நம்மை உயர விடாது என்பதை உணரும் வரை நம் வளர்ச்சி சாத்தியமில்லை…

"எண்ணம் போல் வாழ்க்கை"💪🏻💪🏻👍


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

"விதியும் சொல்லும் உனக்கென இருப்பது நிச்சயம் உண்டு"👍🌱💪🏻🌱

 

ஒரு நாட்டின் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டும் எனவும் இந்த பிறந்த நாளன்று தன்னுடை நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள் என யாரும் உண்ண உணவில்லாமல் பட்டினியாக இருக்க கூடாதென நல்லலெண்ணத்தில் ஒரு ஆலயத்தில் மக்களுக்கு அன்னதானம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அனைத்து மக்களுக்கும் அன்று முழு நாள் மூன்று வேளையும் உணவு வழங்க தொடங்கினார்கள் அரசர் முன்னிலை உணவு வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது


நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஆலயத்தில் கூடி வரிசையில் நின்று அரசரின் கையிலிருந்து உணவுகளை பெற்றுக்கொண்டனர் அந்த வரிசையில் எல்லா மக்களும் ஏழை எளியவர்கள் முதல் அனைத்து மக்களும் இந்த அன்னதான நிகழ்வில் பங்கு கொண்டனர்.


அந்த அன்னதான நிகழ்வில் ஒரு ஏழை உணவிற்காக வரிசையில் நிற்க வந்தார். அவர் அந்த நாட்டில் செருப்புதைத்து பிழைத்து வந்தார் அவருடைய ஏழ்மை நிலை மற்றும் தொழிலை  பார்த்து மற்றவர்கள் முகம் சுழித்தனர் அவரின் நிலையை பார்த்து அனைவரும் ஏளனம் செய்தனர். அந்த ஏழையோ அவர்களின் பார்வை மற்றும் சொல் கண்டு அந்த வரிசையில் நிற்காமல் சற்று விலகியிருந்தார்.

அனைவரும் வாங்கிக்கொண்ட பிறகு தனக்கு உணவு கிடைக்கும் என்று காத்திருந்தார் அனைவரும் உணவை வாங்கி அன்றைய பசியை தீர்த்துக்கொண்டனர். ஆனால் விதியின் விளையாட்டோ என்னவோ அந்த செறுப்பு தைக்கும் ஏழை மகனுக்கு இறுதிவரை உணவு கிடைக்கவில்லை.


அந்த ஏழை மகன் உணவு கிடைக்கவில்லையே என்ற விரக்தி மற்றும் பசியில் செய்வதறியாது அமைதி காத்து தன் தொழிலான செருப்பு தைக்க சென்றார்

பிறகு அரசன் உணவு வழங்கும் நிகழ்வை முடித்துவிட்டு தன் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக வலம் சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் அந்த ஏழை மகன் அமர்ந்து சற்று மனக்கவலையுடன் தன் கடமையில் கவனிப்போடு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதன் வழியாக வந்த அரசன் அந்த ஏழையை பார்த்து தாங்கள் இன்றைய உணவை வாங்கிக்கொண்டீர்களா? என்றார் அதற்கு அந்த ஏழை முகத்தை திருப்பாமல் வேலை செய்துகொண்டே இன்று என் விதி எனக்கு உணவு கிடைக்காதென்று உள்ளது ஐயா அதனால் கிடைக்கவில்லை ஏனென்றால் என் தோற்றமும், என் ஏழ்மைக்கும் எந்த விதத்திலும் நன்மை கிடைக்காது இது தான் என் தலைவிதி என்று சலித்துக்கொண்டு கூறிக் கொண்டிருந்தார் அந்த ஏழை.


அதற்கு அரசனோ இந்த தொழிலை விட்டு வேறு வேலை பார்க்கலாமே இந்த தொழிலுக்கு மதிப்புதான் கிடைக்கவில்லையல்லவா என்றார் அதற்கு அந்த ஏழை ஐயா இது என் தொழில் மட்டுமல்ல என் தெய்வம் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றார் போல் தெய்வத்தை மாற்றுபவன் உண்மையான பக்தன் அல்ல என் தொழில் என் தெய்வம் என்றார் 


அப்போது அந்த அரசனோ நம் பிறந்தநாளென்று யாரும் பட்டினி கடக்கக் கூடாதென நினைத்து உணவு வழங்கினோம் ஆனாலும் ஒரு ஏழை மகனின் உண்மை உழைப்பாளி பசியை தீர்க்கமுடியாமல் போய் விடுமோ என்று சரி மகனே நீங்கள் என்னோடு வருங்கள் என்று அழைத்தார் அதற்கு என் விதி போல் எல்லாம் நடக்கட்டும் நீங்கள் உங்கள் உணவை உண்ணுங்கள் என்று அரசன் என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ஆனால் அரசன் என் பிறந்தநாளன்று யாரும் பசியோடு இருக்க கூடாது என்று கூறியவுடன் அந்த ஏழை மகன் சட்டென திரும்பி பார்த்து எழுந்து நின்று ஐயா என்னை மன்னியுங்கள் நீங்கள் என தெரியாமல் உட்கார்ந்து நான் பேசிக்கொண்டிருந்தேன் என்றான்.

அரசனோ பரவாயில்லை என்னோடு வாருங்கள் என்று அவனை அரண்மனைக்கு அழைத்துச்சென்று உன் விதி மாறிவிட்டது இன்று எனக் கூறி நீ இன்று என்னோடும் நம் நாட்டின் ராணியோடும் உணவு உண்ணப்போகிறாய் என்று உன் இன்றைய விதியை நான் மாற்றி எழுதுகிறேன் என கூறி அன்று மூன்று வேளையும் உணவளித்து அவருக்கு ஒரு படி தங்க நாணயங்களும் வழங்கினார்., இனி நீ ஏழையாக இருக்க கூடாது உன் தொழிலை மறந்துவிடாதே என்று அனுப்பிவைத்தார்.


செய்யும் தொழிலே தெய்வம்,

நம் எண்ணங்களுக்கு ஏற்ப நம் நிலை மாறுபடும்,

நம் நோக்கமும் எண்ணமும் சரியாக இருந்தால் நிச்சயம் நம் விதி மாறும்,

நாளைய விதி என்பது யாரும் அறியாதது 

அதனால் வரும் விளைவுகளை, கஷ்டங்களுக்கு விதியின் மேல் பழியை போடாதீர்கள் ,

மாற்றம் என்பது நிச்சயம் நடக்கும்,

நம் கடமை தவறாமல் இருந்தால்!!!


சனி, 15 ஆகஸ்ட், 2020

"தோனியும், ஏழு அறிவுகளும்"🏏💐👍🙏


வாழ்க்கை தான் பிறக்கும் போது சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து முடிக்கும் போது ஏதாவது ஒன்றை சாதித்து தனது பிறப்பின் அர்த்தத்தை நிரூபிக்க வேண்டும் என்பது அநேகம் பேருடைய எதிர்பார்ப்பு மற்றும் கனவு..,ஒரு சாதாரண மனிதன் எப்படி சாதனை மனிதனாவது? 


ஒரு மனிதனின்  வளர்ச்சிக்கு முதல் தடை தயக்கம் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை அதற்கு தகுந்த எந்த ஒரு தேவையான பொருட்களோ அல்லது வழிகளோ இல்லை எப்படி கனவுகளை நனவாக்கி நினைத்த இடத்தை அடைவது இது தான் ஒரு உயர்ந்த மனிதனாக உருவாகும் ஒவ்வொரு மனிதனுக்கு இருக்கும் மனத்தடை, மனதில் தைரியம் உண்டு ஆனால் ஏதோ ஒன்று தயக்கம் மனம் முன்னோக்கி செல்ல தடுக்கிறது


தயக்கமா? அல்லது பயமா? என்று நின்றிருந்த சமயம் சரி நம்ம வாழ்க்கை தானே நம்ம முடிவுதான் என்று தன் திறமையின் மீது வைத்த நம்பிக்கையில் முதலடி எடுத்து வைத்தார் அந்த மனிதர்.


"நாம் எடுக்கும் முடிவில் தொடர்ந்து கவனமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பது அவருடைய முதல் யுக்தி"..,



ஏதோ ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் ஏதோ ஒன்றை இழந்துதானே ஆக வேண்டும்.

சரி ஆனால் நம்மிடம் தான் இழக்க ஒன்றுமில்லையே நம் உழைப்பை தவிர என்று முதல் படி எடுத்து வைக்க சரியான வாய்ப்பு காத்திருக்கிறது

முதல் வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைக்குபோது அதை தக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் சற்று தடுமாறினாலும் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்திலே இருக்கும்.


 "வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாம் யுக்தி"..,



கேப்டன் அத்தியாயம் அணியின் நிலை சற்று கவலைக்கிடமான நாட்கள் தோல்விகள் மட்டுமே நிரந்தரமான தருணம் சீனியர் வீரர்கள் எல்லாரும் தங்களுடைய சுய ஆட்டத்தில் கவனம் செலுத்த தலைவன் பொறுப்பை ஏற்க மறுத்த காலம் நிர்வாகத்திற்கோ ஒரு இளம் தலைவன் தேவை இந்த அணியை வழிநடத்த என்று சிந்தித்த போது அத்தனை தடைகளையும் உடைத்து கனவோடு அணியில் வலம் வந்த ஒரு இளம் அசுரனை தலைவனாக நிர்ணயித்தது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.


"உண்மையான உழைப்பினால் உருவான வாய்ப்பே தன் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று வாய்ப்பை நலுவவிடாத தைரியம் தான் தோனியின் மூன்றாம் யுக்தி"..,




தலைவன் நான் என்ற அகங்காரம், என் முடிவே அணியின் முடிவு என்ற தலைக்கனம் இல்லாத ஒரு தலைவன், மற்ற வீரர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த தலைவன், வீரர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வரிசைப்படுத்தி வெற்றியின் பக்கம் தன் அணியை வழிநடத்திய ஒரு சிறந்த தலைவன். 


அணியின் மற்ற வீரர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் சுய முன்னேற்றத்தை பொருட்படுத்தாது அணியின் முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்த அணி வீரர்களின் செயல்பாடு என்று கருதி "திறமைக்கு முன்னுரிமை கொடுத்த தலைவன் இது தோனியின் நான்காம் யுக்தி"



நுணுக்கங்கள் என்பது நாம் செய்யும் வேலையை கடமைக்காக செய்யும் போது அறிவதில்லை 

தவறுகள் சில சமயம் நுணுக்கங்களை நமக்கு கற்று தருகிறது..,

  

 அது தான் தன் வாழ்க்கை என்றும் தன் எதிர்காலம் என்றும் தான் தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவான முயற்சியோடு கூடிய பயணத்தில் வெற்றிகள் எப்படி வரும் என்று சிந்திப்பதை விட தோல்விகள் எப்படி வரும் என்று முன் சிந்தனை கொண்டு செயல்படும் போது தோல்விகளின் விகிதம் குறையும் இதுதான் அந்த மாமனிதர் இன்றைய கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த ஒரு தலைவனாக இருக்கும் தோனியின் யுக்தி


"வெற்றி மட்டுமே கனவல்ல, வரும் தோல்விகளை முன் சிந்தனை கொண்டு அதற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுப்பது தோனியின் ஐந்தாம் யுக்தி"



வெற்றிகள் சிலரது கண்ணை மறைக்கும் என்பது உண்மைதான் ஆனால் எப்போது வெற்றி பெற்றாலும் வீரர்களை முன்னிறுத்தி தோல்வியில் தான் பொறுப்பேற்ற ஒப்பற்ற தலைவன் தோனி ..,


   "தோல்விக்கு பிறரை காரணம் காட்டாமல் தன் வழிநடத்தலில் இருக்கும் குறைகளை மட்டுமே காரணம் காட்டி தோல்வியை (அனுபவத்தை) ஏற்ற தலைவன் இது தோனியின் ஆறாம் யுக்தி"..,





ஒரு நொடி பொழுதிலும் வெற்றி தோல்வி மாறும் வெற்றியின் கனவு ஒரு சில சமயங்களில் தோல்விக்கு வழிவகுக்கும், வேகமான செயல்பாடு நிச்சயம் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து யார் என்ன சொன்னாலும் விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் ஆட்டத்தில் நிதானமும் இறுதிவரையிலான் போராட்டமும் தான் ஒரு அணியை வழிநடத்தி வெற்றியடைய செய்ய முடியும் என்பதை உலகிற்கு சுட்டிக்காட்டிய தலைவன் ..


"இறுதி முடிவு தெரியும் வரை தோல்வி மற்றும் வெற்றி யாருக்கும் உறுதியல்ல இறுதி பந்து வரை விவேகமான முடிவும், நிதனமான ஆட்டமும், போராட்ட குணமுமே தோனியின் ஏழாம் யுக்தி"



அவரது வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தான் நினைத்ததை சாதித்த ஒரு மாவீரன் இந்திய அணிக்கு சரியான நேரத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் உலகம் முழுவதும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளம் கொண்ட தலைவன், தன் வாழ்க்கையில் முடிவெடுப்பதில் பயம் இல்லாத வேகத்தை விட விவேகமான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு சிறந்த தலைவன் தோனி இவருடைய வாழ்க்கை நிச்சயம் பல பேருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை…

அவருடைய துறையில் வெற்றியை மட்டுமே பார்த்த நாம் அவருடைய ஆரம்ப கால தோல்விகளை பார்த்தால்தான் புரியும் நமக்கு உண்மை சாதனையாளனின் வாழ்க்கை வலிகள்…


வெற்றி என்பது நோக்கமாக இருக்கலாம் தோல்வியை சந்திக்க கூடாது என்பதில்தான் கவனம் தேவை இது தோனி அவர்களின் வாழ்க்கை மற்றும் அவருடைய துறையின் செயல்பாடு இவ்வுலகிற்கு உணர்த்தும்.


இன்றும் தோனியின் ஓய்வு அறிவிப்பு எதிர்கால இந்திய அணியின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது இளம் வீரர்களுக்கு இடமளித்து மூத்த வீரர்கள் விலகுவது என்பது கிரிக்கெட் உலகில் நடத்துகொண்டிருக்கும் ஒன்றுதான் ஆனால் தோனியின் ஓய்வு இன்றைய இளம் தலைமுறைக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் தோனியை போன்ற ஒரு வீரன் நமது இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும்…



வேகத்தை விட விவேகம் தான் வெற்றியின் முதல் அறிகுறி..,

தோல்வி வரும் காலம் அறியாமல் போராட்டம் குணத்தை விடுவது உழைப்பிற்கான அர்த்தம் அல்ல..,

சிந்தனை சரியாக இருக்கும் போது செயல் நிச்சயம் வெற்றி பெறும்..,

தான் தேர்ந்தெடுத்த துறையின் மீதான உண்மை காதல் நிச்சயம் நம்மை திறம்பட செயபட வைக்கும்..,

மீண்டும் ஒரு தோனியை நம் இந்திய அணிக்காக எதிர்நோக்கி காத்திருப்போம்..,👍🏏💐🙏


உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...