கண்ணுக்குத் தெரியாத ஒரு தொற்று, தொற்றிவிட்டால் உயிரைக் கொல்லும் அளவிற்கு பாதிக்கும் தொற்று, அருகில் நெருங்க நெருங்க நம்மையும் பதம் பார்த்துவிடுமோ என்ற பயத்திலே உடலில் உள்ள அவ்வளவு வலிமையும் கரைந்துவிடுகிறது.,
இந்த தொற்றினால் வரும் வலியை விட மக்களின் பயம் தனிமை படுத்துவதால் இருக்கும் அவமானத்திற்காகத்தான், சில பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் வெளியே வரமுடியாமல் உயிரை மாய்த்தவர்களும் உண்டு
இது ஒரு வைரஸ் காய்ச்சல் தொற்று போலத்தான் சில அறிகுறிகள் வந்து போகும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முற்கால மருத்துவம் மட்டுமே இதற்கு சரியான தீர்வு சரி இந்த வைரஸை அழிக்க எந்த மருந்தும் இல்லை ஆனால் எப்படி மக்கள் பல லட்சம் பூரண குணமடைந்து விட்டார்கள் என்று வீடு திரும்புகிறார்கள்??? மருந்தே இல்லாத நோயிலிருந்து எப்படி மக்கள் குணமடைந்து திரும்புகிறார்கள்??? சாதாரண காய்ச்சலுக்கு மருந்து, விட்டமின் மாத்திரை, சளிக்கு சாதாரண மாத்திரை, தலைவலிக்கும் நன்றாக உறங்க சாதாரண மாத்திரை இப்படி மக்கள் முன்னரே தன் வீடுகளில் பயன்படுத்திய மருத்துவ முறைதானே தனிமை படுத்தப்பட்டுள்ள இடங்களிலும் மருத்துவர்கள் வழங்குகிறார்கள் சரி எல்லாம் நம்மிடமே உண்டு அப்படியும் ஏன் சில உயிர்கள் மாண்டுவிட்டனர் காரணம்?? ஒரு சாதாரண மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு தான் இந்த வைரஸின் தாக்கம், சிலர் இறந்து போக காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் வைரஸுன் தாக்கம் சற்று அதிகம் அவ்வளவுதான்
ஆனால் என்னை தனிமை படுத்துகிறார்கள் என்ற ஒரு பயம், மற்ற மக்களால் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம், எதிர்காலத்தில் தன்னை கொரோனா தாக்கியவர்கள் என்று மக்கள் ஏசுவார்கள் என்ற அச்சம் இப்படி நம்முடைய இந்த கொரோனா தொற்றிற்கும் அதனால் இறப்பிற்கும் முக்கிய காரணம் மனிதனின் உடல் நிலை மற்றும் மனநிலையும்தான்
முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகளை தான் இன்று மாத்திரை என்ற பெயரில் மருந்தாக கொடுக்கிறார்கள் ஆனால் இந்த கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பில் தோற்கும் நம் மருத்துவம் தான் இன்று பல லட்சம் பேரை குணப்படுத்தி வருகிறது..,
மக்களின் மனநிலையில் மாற்றம் தேவை "தனிமைப்படுத்துவதால் நாம் தீண்டத்தகாதவர்கள் அல்ல நம்மால் பிறருக்கு இது பரவ கூடாதென ஒரு நற்சிந்தனை என்பதை உணருங்கள்"
கொரோனாவை உணவால் மட்டுமே வீழ்த்த முடியும், உண்ணும் உணவில் மாற்றம் தேவை
இன்றைய மக்கள் மருந்தை அல்லவா உணவாக எடுத்துக்கொள்கிறோம்
உணவில் உப்பு இல்லாமல், சர்க்கரை இல்லாமல், வேக வைத்து வேறு எந்த சுவையும் இல்லாமல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நம்மில் பலர் காரணம் உடல் நிலை இப்போது உணவையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது… உணவில் சுவை வந்தால் இறந்துவிடுவோம் என்று தினம் தினம் பயந்து பயந்துதான் உணவையும் உண்ணுகிறார்கள் பலர்… எது எப்படியோ இன்று முதல் மருந்தை உணவாக உட்கொண்ட நாம் உண்ணும் உணவையே மருந்தாக எடுத்துக்கொள்வோம் என்பதில் தீர்மானம் தேவை
உணவே மருந்து என்ற பழைய நிலைக்கும் திரும்பும் வரை கொரோனா நம்முடன் தான் வாழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...
உணவால் உடலை பலப்படுத்துவோம்!!!
முன்னோர்கள் வழி நடப்போம்!!!
கொரோனாவை எதிர்கொள்வோம்!!!😷👍💪🏻



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக