திங்கள், 24 ஜூலை, 2023

இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை உயர்வு, உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமா?

இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை உயர்வு, உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமா?
 

உணவின் முக்கியத்துவம் இப்போது தான் உணர ஆரம்பிக்கிறது உலகம். உணவு, உடை, இருப்பிடம் மனித உலகின் அன்றாட தேவை. அதாவது பழங்காலம் முதல் இக்காலம் வரை மனிதனின் அன்றாட தேவைக்கான பொருளில் மாற்றம் உண்டாகியுள்ளதே தவிர அன்றாட தேவையில் எந்த மாற்றமும் இல்லை. பழங்காலத்தில் மர இலையும், காடும் தான் உடையும், இருப்பிடமுமாக இருந்து வந்தது. காலம் மாற மாற உடையும், இருப்பிடமும் நிராகரிக்க முடியாத தேவையாக மாறியுள்ளது காரணம் மனித இனத்தின் முன்னேற்றம். எக்காலமானாலும் ஒரு தேவை மட்டும் எந்த நிலையிலும் மாற்றமே இல்லாத தேவையாக இருப்பது உணவு. மனிதனுக்கும், உயிரினத்திற்கும் இருக்கும் வேறுபாட்டில் ஒன்று உணவு. அதாவது பழங்கால மனிதன் காடுகளில் வாழும்போது உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதது போல மிருகங்களின் மாமிசமும், இலை தலைகளையுமே உண்டு வாழ்ந்து வந்தாம். காலம் மாற மாற, இயற்கை உணவை இயற்கையாக உருவாக்கி உண்ண ஆரம்பித்தான். இன்றும் இயற்கை உணவு இல்லையேல் ஏது இந்த பிரபஞ்சம்? 
 
ஆதனால் தான் இன்றளவும் உணவு என்பது மனிதனின் எக்காலத்திற்கும் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உணவை உருவாக்க இயற்கை முறையை தவிர வேறு முறை என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இது வரை இருந்த நிலையில் இந்தியாவில் உணவு பொருளுக்கு என்று எந்த தட்டுப்பாடும் வந்தது கிடையாது. ஆனால் இந்தியாவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது என்று FSSAI (Food Safety and Standards Authority of India) கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. வீணடிக்கப்படும் இந்த உணவு இருந்தால் இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. உணவு கிடைத்தும் இவ்வளவு உணவை வீணடிக்க ஒவ்வொரு தனிமனிதனும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். 
 
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் உணவு உற்பத்தி கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் குறைந்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். உலகில் ஒரு பொருளின் தேவை அதிகரிக்கும் போது தான் அந்த பொருளின் மதிப்பும் உயரும். அதுபோலத்தான் தங்கத்தின் மதிப்பு. ஆனால் இன்றைய நம் உணவின் தேவை எளிதில் பூர்த்தியாவதால் உணவிற்கான மதிப்பு தங்கத்தை விட மிக எளிமையாகத்தான் கருதப்படுகிறது. எல்லா உணவுப்பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு முறையாவது தட்டுப்பாடு உருவாகும் தக்காளியை போல. இன்றைய நிலையில் தக்காளியின் விலை உயர்ந்ததால் அரசியல் நோக்கத்தில் போராட்டம் எல்லாம் நடக்கிறது. 
 

தக்காளி வாங்காமல் விட்டுவிட்டால் ஓரிரு வாரத்தில் விலை குறைந்துவிடும் என்பது ஒரு சிலருடைய கருத்து. தங்கம் விலை ஏற ஏற தானே அதிகம் விற்பனையாகிறது. தக்காளி எளிதில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் இப்படியான யோசனைகள் வருகிறது எல்லோருக்கும். உணவகங்களில் அதிக பணம் கொடுத்து உணவு சாப்பிட சிந்திப்பதில்லை. வெளிநாட்டு உணவு வகைகளை Online order செய்து சாப்பிடும் போது பணத்தின் அருமை தெரியவில்லை. தக்காளி விலை உயர்ந்தவுடனே அதிக பணம் கொடுத்து தக்காளி வாங்குவதற்கு பயம். பணத்தின் அருமை தக்காளியில் தான் தெரிகிறது. இப்போது அரிசியின் விலை அதிகரித்துள்ளது. அதனால் சிறிது காலம் அரிசி உணவை தவிர்க்க முடியுமா? விவசாயம், விவசாயிக்கு என்றால் நம் சுயநலம் தான் முக்கியமாகத் தெரிகிறது.
 
ஆனால் இதே தக்காளி சில மாதங்களுக்கு முன் விலை இல்லாமல் விதைத்த விவசாயியே நஷ்டத்தில் அழித்த போது எந்த போராட்டமும் இல்லை எந்த அரசும் விவசாயியை காப்பாற்ற முன் வரவில்லை. தக்காளியின் மேல் உள்ள பற்று விவசாயின் மீது இல்லை. அதே தங்கம் விலை உயர்விற்கு போராட்டம் நடக்குமா? சரி தக்காளி விலை உயர்வு ஒரு கட்டத்தில் குறைந்துவிடும் ஆனால் இதே போல் எல்லா உணவும் தட்டுப்பாடானால் எதை உணவாக உண்ணப்போகிறோம்? நாம் உணவுத்தட்டுபாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கும் புரிகிறது? ஆம், உணவுப் பொருளை விளைவித்த விவசாயி 100 சதவிகிதத்தில் இன்று 20 சதவிகிதம் பேர் தான் உணவுப்பொருளை விளைவிக்கிறார்கள். காரணம் விளைபொருள் விலை ஏற்றம், ஆட்கள் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாகுறை, அரசு நிவாரணம் இல்லை, விளைவித்த பொருளுக்கு மலிவு விலை விவசாயிக்கு லாபம் இல்லை, தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற மாயை இப்படி பல பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை உற்றுநோக்கினால் மட்டுமே விடை உண்டு. 
 

விவசாயினுடைய இந்த கஷ்டம் வெளி உலகிற்கு தெரிவதில்லை. நிறுவனங்களுக்கு கோடியில் கடன் ஆனால் விவசாயிக்கு நூற்றுக்கணக்கில் கடன், நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கினால் அதை மாற்று முறையில் லாபம் பார்க்கிறார்கள் (Insurance) ஆனால் பயிர் அழிந்தால் விவசாயிக்கும் ஆயிரகணக்கில் பயிர் காப்பீட்டுத்திட்டம். அந்த ஆயிரம் பணம் மதிப்பு அழிந்த பயிரை விட பல மடங்கு குறைவு. தண்ணீர் பற்றாக்குறை ஒன்று மிகப்பெரிய பிரச்சனை அது விவசாயிக்கு மட்டும் தான் பிரச்சனை ஆனால் அரசியல்வாதிக்கு அது அரசியல் தேவை. இயற்கையான நதிநீரை கடலில் கலக்கவிட்டு விவசாயத்திற்கு நதிநீர் இணைக்க விவசாயிடமே பேரம். இது தான் இன்றைய நிலை. உணவுப் பற்றாக்குறை உண்மையில் இன்று தான் ஆரம்பித்திருக்கிறது. 100ல் 20 விவசாயி மட்டும்தான் விவசாயம் செய்கிறார் என்றால் மீதம் 80 பேரின் பங்கு இல்லாமல் மொத்த இந்திய மக்களின் உணவு தேவையை எப்படி பூர்த்தி செய்வது? இறக்குமதி செய்தால் கூட இப்போது இருக்கும் விலையை விட பல மடங்கு விலை கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கும்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசு அமெரிக்காவிற்க்கு பாஸ்மதி தவிர்த்து மற்ற அரிசி ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. அதாவது உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40%.வியப்பான ஒன்று தான் எத்தனை நாடுகளுக்கு இந்தியா உணவுப்பொருளை ஏற்றுமதி செய்திருக்கிறது என்பது பெருமையாக இருந்தாலும் இன்று போட்டுள்ள தடையில் இந்தியா அரிசி விளைவிப்பில் கடும் சரிவை கண்டுள்ளது. காரணம், சில பகுதிகளில் பருவமழை இல்லாமல் போனது, சில பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தது. இந்த காரணங்களினால் இன்றைய நிலையில் ஏற்றுமதி செய்ய இந்தியாவிடம் போதுமான அளவு அரிசி இல்லை என்று அரசு தரப்பில் இருந்து அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது. 
 

 
இன்று ஆரம்பித்துள்ள இந்த தட்டுப்பாட்டால் இந்தியாவில் அரிசியின் விலையும் அதிகமாகியிருக்கிறது. அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாட்டால் அங்கேயும் அரிசி விலை உயர்வு கண்டுள்ளது. அமெரிக்கவிற்கு ஏற்றுமதியை நிறுத்தியுள்ள இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு நிச்சயம் உருவாகும் எனவும் அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
உணவு உண்ணும் போது அதனை விளைவித்த விவசாயின் நிலை பற்றி யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அரிசி மட்டுமல்ல தக்காளி, வெங்காயம் போல மற்ற உணவுப்பொருளிலும் தட்டுப்பாடு உருவாகும் என கருதப்படுகிறது. 
 
 
விவசாயி இல்லையேல் விவசாயம் இல்லை 
விவசாயம் இல்லையேல் நாளைய உணவு இல்லை 
 
உணவுப்பொருளுக்கும் விளைவித்தவன் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை எனில் விவசாயத்தின், விளைவித்த பொருளின் மதிப்பு உயரப்போவதில்லை. 
 
விவசாயத்தின், விளைவித்த பொருளின் மதிப்பு உயரவில்லையெனில் "விவசாயிகள்" அழிந்து தான் போவார்கள். ஒவ்வொரு விவசாயின் அழிவும் நாளை நம் உணவுத் தட்டுப்பாட்டிற்குத் தான் வழிவகை செய்யும். சிந்தியுங்கள் இல்லையேல் நாளை உணவின்றி நம் அடுத்த தலைமுறை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி வாழ்க்கையை வாழ நேரிடும். 

வாழ்க பாரதம்...
வளர்க விவசாயம்...

#யுவன்தமிழ்...

வெள்ளி, 21 ஜூலை, 2023

மணிப்பூரில் கசங்(க்)கிய பெண்மை😢

 

 மணிப்பூரில் கசங்(க்)கிய பெண்மை😢


பெண்ணானவள் யார் இவள்?

உருவத்தில் என்ன வித்தியாசம் கண்டாய்?

உள்ளத்தில் என்ன வேற்றுமை கண்டாய்?

உயிரை கொடுத்தவளின் உணர்வை கசக்கியவன் நீ ஆண் மகனா?

கங்கையாய் புனிதமானவளும் இங்கே தான்,

அப்புனிதத்தை அம்மணமாக்கியதும் இங்கேதான்,

நான் என்ற கர்வம்,

நடைபிணமாய் பெண்ணை வதைத்தது,

உடையை கிழித்து 

தோழுரிந்த உடலாய் 

தன்னவன் மட்டும் பார்க்கும் உடலை 

தீய எண்ணம் கொண்டவன் புசித்திட செய்தாயே நீ ஆண்மகனா?

பச்சிழம் பசி போக்கிய மார்பகங்களை 

வஞ்சகன் ருசி பார்த்திட செய்தாயே உன் தாயும் பெண்தானே?

அவள் யாராக இருந்தால் என்ன?

எந்த ஊராக இருந்தால் என்ன?

எந்த மதமாக இருந்தால் என்ன?

எந்த சாதியாக இருந்தால் என்ன?

அவளின் உணர்வு உன் தாயின் உணர்வுக்கு இணைதானடா...

இதற்கு பதில் அவள் உயிரை கொன்றிருக்கலாம் 

அவள் உணர்வை வதைத்து 

அவளை உயிரோடு விட்டாயே தினம் தினம் வாழ்ந்தே சாகவா???

உன் கைபட்ட தேகம் 

ஆயிரம் ஆண் கண்பட்டு பாழாகியதே!

தவறில்லா அவள் மனதை 

இனி தேற்றுவது எப்படி?

நீ தூக்கில் தொங்கினாலும் 

தினம் தினம் உன் செயல் அவளை வதைத்து கொல்லுமே!

எதுவும் கடந்து யோசித்து என்ன பயன்?

எத்தனை எத்தனை பாவங்கள்?

அழுது அழுது இந்த புனிதமான பெண்மை  கோழையாகிவிட்டதே!- என் வையகத்தில்,

உயிரை கடந்து உணர்வுகளை கொன்றவனை பெண் தெய்வமும் தண்டிக்குமா?

பெண் அவ்வளவுதான் அப்படித்தானே அந்த எண்ணம்?

சத்தமாய் அழவும் முடியாத சுதந்திரமற்ற உலகில் 

பெண் வாழ தகுதியற்றவளா?

பின்பு எப்படி நீயும்? நானும்?

முட்டாள் உலகமே

அவள் இல்லாமல் இங்கு யாரும் இல்லை...

புரிந்து கொள்,

இல்லையேல் மடிந்து மாண்டுபோவாய்....

#யுவன்தமிழ்

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...