வெற்றி என்பது அழகுதான் வெற்றிக்கான வழிகளும் செயல்முறையும் அழகானது அல்ல!!!
வாழ்க்கையில் அடுத்தவர் வெற்றியை தள்ளி நின்று பார்க்கும் போது அழகாகத்தான் தெரிகிறது அனைவருக்கும், அந்த வெற்றியை அனைவரும் ஒரு எடுத்துக்காட்டாக வைத்து நாமும் நம் வாழ்வில் அவரைப்போன்றே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் இது மனித இயல்பு ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த வெற்றியாளன் அடைந்த வெற்றியோடு சேர்த்து அவர் அடைந்த இன்னல்கள், தோல்விகள் மற்றும் தடைகளையும் அதை கடந்து வந்த பாதையையும் பார்ப்பார்கள் அவர்களால் மட்டுமே வாழ்வில் விரைவில் வெற்றிபெற முடியும்...
ஒரு நாட்டின் ராஜாவிற்கு ஓவியம் என்பது மிக விருப்பம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டோடு நட்புறவையும் சேர்த்து அந்த நாட்டில் உள்ள விலை உயர்ந்த ஓவியங்களை தன் அரண்மனையில் சேர்த்து வைப்பது அவரது வழக்கம்.. அந்த ராஜாவிற்கு ஒரு யோசனை உலகிலே மிக அழகிய யாரும் எங்கும் பார்க்காத ஒரு ஓவியம் வரைந்து தன்னுடைய அரண்மனையில் மத்தியில் அனைவருக்கும் தெரியும் வகையில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் நாட்டில் ஒரு தலைச் சிறந்த ஓவியரை தன் அரண்மனைக்கு அழைத்து தன்னுடைய கற்பனைக்கு ஏற்ப ஒரு அழகிய ஓவியம் தன் அரண்மனையில் இடம்பெற வேண்டும் என்று கூறி அந்த ஓவியரை ஓவிய வரைய பணித்தார்., அந்த ஓவியரும் தன் ஓவியத்திற்கான இடத்தை தேர்வு செய்து முதல் கட்ட ஓவியப் பணியை ஆரம்பித்தார், நாட்கள் நகர்ந்தன அந்த ஓவியரும் ராஜாவின் கற்பனைக்கு ஏற்ப வரைந்து கொண்டிருந்தார் ஒரு சில வாரங்கள் கழித்து பார்வையிட சென்றார் தன் கற்பனைக்கு ஏற்ப ஓவியமாக அவருக்கு தெரியவில்லை மேலும் சில வாரங்கள் கழித்து மீண்டும் பார்வையிட சென்றார் அப்போதும் ராஜாவிற்கு அந்த ஓவியர் வரையும் ஓவியம் தன் கற்பனைக்கு ஒன்றியதாக இல்லை அதனால் மூன்றாம் முறை மீண்டும் பார்வைக்கு சென்று ஓவியத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் அந்த ஓவியரை தன் அரண்மனைக்கு அழைத்து பேசினார்., ஓவியரே நீங்கள் வரையும் ஓவியம் என்னுடைய கற்பனைக்கு ஏற்ப இன்னும் அமையவில்லை, உங்களின் ஓவிய பயிற்சிக்கு நான் என் நேரத்தையும், பணத்தையும் செலவிட விரும்பவில்லை என்று கூறி நீங்கள் எனக்காக ஓவியம் வரைவதை நிறுத்திவிடுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார்.
சில ஆண்டுகள் கழிந்தது ராஜாவின் எதிர்பார்ப்பு ஓவியம் அவருக்கு கிடைக்கவே இல்லை எனவே நட்பு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ராஜா அந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை காண விரும்பி அங்கு சென்றார், அந்த கண்காட்சிக்கும் சென்ற உடனே கண்காட்சியின் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஓவியம் ராஜாவின் கண்ணில் பட்டதும் ராஜா அந்த ஓவியம் வரைந்த ஓவியரை அழைத்து வாருங்கள் என்றார் அந்த ஓவியரும் வந்தார் இவரைப்பார்த்து ராஜா நீங்கள் தான் இந்த ஓவியம் வரைந்தவரா??? மிகச்சிறப்பாக ஓவியம் வரைய கற்றுக்கொண்டீர்கள் போல என்று கூறினார்., அந்த ஓவியர் வேறு யாரும் இல்லை ராஜாவின் கற்பனையை வரைய ஆரம்பித்து ராஜாவால் நிராகரிக்கப்பட்ட ஓவியர் தான் அவர்.,
அந்த ஓவியரோ ராஜா இந்த ஓவியரை நன்றாக பாருங்கள் இந்த ஓவியம் எங்கோ பார்த்தது போல இல்லையா என்றார், இந்த ஓவியம் உங்களுக்காக வரைய ஆரம்பித்தது தான் ராஜா இந்த ஓவியம் முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது மேலும் இந்த ஓவியம் பல நாடுகளில் கண்காட்சிகளில் பங்கு பெற்று சிறப்பு வாய்ந்த ஓவியம் என்றார்... இந்த ஓவியம் உங்களுக்காக வரைந்த ஓவியம் தான் ராஜா என்றார்.
ராஜாவின் மனதில் ஏமாற்றத்தோடு சந்தோசமும் கொண்டு அந்த ஓவியத்தை வாங்கிச் சென்றார், அந்த ஓவியம் ராஜாவால் முழுமையடையாமல் நிராகரிக்கப்பட்ட போது ஓவியர் மிகுந்த மன உளைச்சலோடு அமர்ந்திருந்தபோது அந்த ஓவியம் ஓவியரைப்பார்த்து நான் உன்னால் ஆரம்பிக்கப்பட்டவன் நீ என்னை பாதியில் விட்டுவிட்டால் நான் முழுமையடைய மாட்டேன், என் முழுமையால் உன் வெற்றி நிச்சயம் பாராட்டப்படும் என்று கூறியதாக எண்ணி இந்த ஓவியத்தை இரண்டு ஆண்டுகள் முயற்சியில் முடித்ததாக ராஜாவிடம் கூறினார் அந்த ஓவியர் இறுதியில் ராஜாவின் கற்பனை ஓவியம் அதே ஓவியரால் முழுமையடைந்து அரண்மனையில் மீண்டும் இடம் பெற்றது அந்த ஓவியம்...
வெற்றி என்பது முழுமையடைந்த ஓவியம் போல பார்க்க அழகாகத்தான் இருக்கும் ஆனால் வெற்றிக்கான முயற்சியும் அதன் செயல்பாடுகள் பார்க்க அழகானதாக இருக்காது, மன உளைச்சலைக் கொடுக்கும், மனம் தளர்ந்தால் வெற்றிக்கான பாதை மறைக்கப்படும், மனம் என்பதே வழி அந்த வழியினை சரியாக மேற்கொண்டால் நிச்சயம் நினைத்த இடத்தை அடைய முடியும் என்பது தான் ஒரு ஓவியத்தின் வெற்றி... வெற்றியை மட்டுமே அழகாக பார்த்தும் அதன் பாதையில் இருக்கும் வலிகளையும், வேதனைகளையும் அழகாகவே இருக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்...🌱👍💪🏻














