கண்ணாடி கண்ணுக்குள் இரண்டு விழி வைத்து
அந்த விழிகளிலே அவளின் மொழி வைத்து
என்னோடு பேசிய காதல் வசனங்கள் என்னுள் அவளின் நினைவை மூழ்கச்செய்து
நான் காதல் கவிதை எழுதச்செய்து
என் காதலை அவளுக்கு விளக்கச்செய்து
காதலோடு காதலை எதிர்பார்க்கச்செய்து
அவள் சொல்வாளா காதலை அல்லது கொல்வாளா என் காதலை என்று ஏங்கச்செய்து
ஒற்றை கண் சிமிட்டலில் உணரச்செய்து காதலை சொல்லிச்சென்றவள் என் காதலி
அன்பே என்று எழுத ஆரம்பித்து பல கோடி வார்த்தைகள் உவமை கொடுத்தவளின் அழகை, புன்னகையை, காதலை எழுதி என் எதிர்காலமவளோடு என்று நினைத்து நினைத்து மனம் உறுகி உறுகி காதலித்தேன் அவளை
என் காதல் கவியே என்னோடு சேர்வாயாக என் உயிரை எடுத்து உன் நினைவுகளை என்னுள் புதைத்து காத்திருக்கிறேனடி ஆருயிரே காதல் செய்வாயா????😍🌹💐
யுவன் தமிழ்


Super
பதிலளிநீக்கு