செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

இலவசமாக உயரும் விலை😒😔👌

 இலவசமாக உயரும் விலை😒😔👌

இன்றைய அரசியல் சூழலில் மக்களிடம் ஓட்டு வங்கியை சேகரிக்க மக்களிடம் மக்களின் சுய தேவைகளை தனிப்பட்ட முறையில் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது... திரைப்பட வசனங்களால் முன்னரே சுட்டிக்காட்டப்பட்ட வரிகள் படி "ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டனும்"இதே பாணியை தான் கடைபிடித்து வருகிறார்கள் இன்றைய அரசியல் சாணக்கியர்கள்... மக்களிடம் இருப்பது இரண்டு தேவை ஒன்று பொது தேவை மற்றொன்று சுய தேவை இந்த இரண்டு தேவையையும் மையமாகக் கொண்டுதான் உலக அரசியலே நடக்கிறது என்பதை விட நம் இந்திய அரசியல் நடக்கிறது... இன்றைய அரசியல் ஒரு வியாபாரம் ஒரு தொழில் முதலீடு போட்டு லாபம் பார்க்கும் ஒரு நஷ்டமில்லாத தொழில் ஒவ்வொரு அரசியல்வாதியின் முதலீடு பணம் செலவிடும் பணம் வட்டியும் முதலுமாக எடுக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் இன்றைய அரசியலே நடக்கிறது... இதை அறிந்தவர்கள் இல்லை என்பதை விட தெரிந்தும், புரிந்தும், அறிந்தும் கண்டும் காணாமல் இருப்பவர்கள் தான் 99% பேர் மீதம் உள்ளவர்கள் இதற்கான மாற்றை தேடி அழைகிறார்கள்... முதலீடான பணம் மக்களை வந்து சேரும் போது அது மக்களின் சுயநல தேவையை பூர்த்தி செய்ய அன்றைய தேவையை பூர்த்தி செய்து மக்களை தன் வழிக்குள் மடக்கி கொள்ளும் ஒரு தந்திரம் தான் இன்றைய அரசியல்...



"லஞ்சம் தவிர்போம் 

நெஞ்சம் நிமிர்வோம்"


ஊழல் அரசியல் வாதிகளிடம் இருந்து ஆரம்பிக்கிறது என்பது 100% பொய்யான வாக்கியம் அத்தனை ஊழலும் குடிமக்களான நம்மிடம் இருந்துதான் உருவாகிறது அந்த ஊழலை இலவசம் என்ற பெயரிலும், ஒரு கோட்டரும், கோழி பிரியாணியாகவும், ஒரு ஓட்டுக்கும் 5000ரூபாயாகவும் தான்  நாம் செய்கிறோம்... இந்த பணம் எல்லாம் அந்தந்த அரசியல்வாதிகளின் பணம்... 

ஒவ்வொரு ஓட்டும் நம் உரிமை, சுய மரியாதை, நம் எதிர்காலம் இத்தனை மதிப்பு மிக்க வாக்கினை 5000/-(அதிகபட்சம்) மதிப்பிற்கு விற்பதில் தான் முதல் ஊழல் ஆரம்பமாகிறது... இன்றைய நாளின் பசியை போக்கி நாளைய லட்சியத்தை உடைத்தெரிவது போல இன்றைய சுய தேவையை போக்கி நாளைய பொது தேவையை செய்யமால் காலம் கடத்துவது தான் இன்றைய அரசியல்... ஊழலை ஆரம்பிக்கும் நாம் பின்னாளில் அரசியல்வாதி  ஊழல் செய்கிறான் என்று குற்றம்சாட்டுவது முற்றிலும் தவறு... உங்கள் பார்வையில் அது ஊழல் ஆனால் அரசியல்வாதியின் பார்வையில் அது தொழில் முதலீடாக போட்டபணத்தை வட்டியும் லாபமுமாக எடுப்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் குறிக்கோள்...

நம் இன்றைய அரசியல் தேர்தலின் கொள்கைகள் பல உண்டு அதில் முதல் இடம் இலவசம்... மக்களிடம் ஆசையை தூண்டி அவர்களின் ஆசையை நம் வெற்றிக்கு காணிக்கையாக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறைதான் இலவசம்.. இந்த அரசே மக்களின் வரிப்பணத்தில் தான் இயங்குகிறது... இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லாமல் இறுதியில் மக்களின் பொதுநல தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது... பிறகு மற்ற அரசிடமிருந்தோ அல்லது மற்ற நாட்டிடமிருந்தோ கடன் வாங்குவது பிறகு நம் நாட்டின் கடன் இவ்வளவு அதிகரித்துள்ளது என்று ஒவ்வொரு குடிமகனின் மீதும் கடன் சுமை இவ்வளவு என்று கணக்கிட்டு சொல்வது இதிலும் பெருமையை எதிர்பார்ப்பது தான் அரசியல்... முதலீடு போடுவது நமக்கெல்லாம் ஓட்டு வாங்க பணம் கொடுக்க அந்த முதலீட்டு பணத்தை திரும்ப பெறவே ஆட்சியின் வெற்றிக்கு பின்  அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் 

ஊழல் ஆரம்பிக்கும் இடமே ஓட்டிற்கான பணமும், இலவசமும் தான்





இலவசமும், ஓட்டிற்கான பணமும் அதிகரிக்க அதிகரிக்க நம் நாட்டின் கடனும் அதிகரித்து கொண்டே தான் செல்லும்...நாட்டின் கடன் அதிகரிக்க நம் அன்றாட தேவைக்கான விலையும், வரியும் அதிகரிக்க8த்தான் செய்யும்... புரிந்து கொள் முயன்றால் உணர்ந்து கொள் 

உன் தேவை நீ மட்டுமல்ல 

உன் அடுத்த சந்ததி 

உன் மொத்த சமூகத்தின் மகிழ்ச்சி 

சுயநலம் கடந்து பொது நலம் காப்போம் 

நம் ஓட்டிற்கான பணமும் வேண்டாம் 

என்னை கடனில் சுமத்தும் இலவசமும் வேண்டாம் என்று எண்ணும் காலம் எதுவோ அதுவே ஒரு சிறப்பான ஆட்சிக்கு வழியாக அமையும்...

ஜெய்ஹிந்த்!!!


புதன், 3 பிப்ரவரி, 2021

அரசியல்(லா) சாக்கடை???👍🙏😔

 "அரசியல் தான் நம்மை வழிநடத்துகிறது"



அரசியல் என்பதன் அர்த்தம் என்ன என்று இன்றளவும் தெரியாத பலர் நம் வையகத்தில் படித்த மேதாவிகள்... ஆம் அவர்களின் கூற்றுப் படி "அரசியல் ஒரு சாக்கடை"

உண்மையில் அரசியல் என்பது புனிதத்துவம் வாய்ந்தது 

"மக்களின் ஒருவன்

மக்களால் ஒருவன் 

மக்களுக்காக ஒருவன்"

இந்த வசனம் அறிந்திருப்பீர்கள் ஆம் உண்மையில் இதுதான் அரசியல் 

மக்களின் தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்ய மக்களில் ஒருவனாய் மக்களால் இவனால் எல்லோருக்கும் நன்மை உண்டு என்று ஒரு தலைவனாக அல்ல மக்களுக்கு ஒரு சேவகனை தேர்ந்தெடுப்பது அரசியல்...

அப்போ அரசியல் என்றால் "முழு சேவை மக்களுக்கான சேவை" அதற்கு சம்பளம் மக்களின் வரிப்பணம் 

மக்களின் தேவையை பூர்த்தி செய்ய மக்களின் வரிப்பணம் 



இது தான் முழு அரசியல்..

நான் சேவகன் அல்ல தலைவன் என்று பலர் மார்தட்டிக்கொண்டு ஆளுக்கொரு கட்சிகளை ஆரம்பித்துக்கொண்டு, சாதி, மதம் என்று பிரிவினை வகுத்துக்கொண்டு., பெண்களை குறிவைத்து அரசியல் செய்து கொண்டு, சேவைக்காக ஒதுக்கிய வரிப்பணத்தில் ஒரு பகுதியை தன் தேவைக்காக ஒதுக்கிக் கொண்டு , மக்களின் தேவையை பூர்த்தி செய்யாமல் உயர்த்திக் கொண்டே செல்வது தன் இன்றைய அரசியல் அதற்கு தான் படித்த மேதாவிகள் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்று குமுறுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்...


"நடிப்பது தான் அரசியல் என்பதுவும் ஒரு பொருள் உண்டு"


தேர்தல் என்றால் மக்களின்  எண்ணம் நல்ல சேவகனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றிலிருந்து இன்று இலவசம் கொடுப்பவனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நிலையை மக்களின் மனதில் எண்ணங்களை விதைத்துவிட்டார்கள்.. "அந்த இலவசத்தின் மதிப்பு"= "ஒட்டும் மொத்த மக்களின் தேவையின் மதிப்பு" என்றாவது கணக்கிட்டு பார்த்துள்ளோமா??? இல்லை காரணம் அன்றைய தேவை ஆயிரமோ, அல்லது இரண்டாயிரமோ இன்று கொஞ்சம் அதிகரித்து (மக்களின் தேவைக்காக)ஐந்தாயிரம் வாங்கி நமது ஓட்டை விற்பனை செய்கிறோம்... 

 


"பசு இருக்கும் இடம் எல்லாம் புனிதம் தான் 

பன்றிகள் இருக்கும் இடம் எல்லாம் சாக்கடை தான்" 

இப்போ புரியும் அரசியல் ஏன் சாக்கடை என்று...,


அத்தனை அரசியல்வாதிகளும் உத்தமர்கள் அல்ல அத்தனை அரசியல்வாதிகளும் பாவிகள் அல்ல ஆனால் ஒன்றோடு இன்று கலக்கும் போது சர்க்கரையும் உப்பாக மாறும்😉



ஓட்டு பணத்திற்காக அல்ல 

நம் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய

ஒரு ஓட்டின் மதிப்பு 5000 அல்ல 

பல கோடி மதிப்புள்ள நம் தேவைகளுக்கு இணையானது 

விற்று பிழைக்க ஓட்டு ஒரு பொருள் அல்ல 

உரிமையை விற்று ஊமையாக வாழ்வதற்கு 


இது அரசியல் என்ற சாக்கடை அல்ல 


களம் கண்டவர்களின் கொள்கை சாக்கடையில் மூழ்கிய அரசியல் 


இது முழுக்க முழுக்க விவாதத்திற்கோ அல்ல தவறாக சித்தரிக்கவோ அல்ல 

சிந்திக்க மட்டுமே 

சிந்தித்து சுய விளக்கம் கொள்ள...💪


பணமும் அரசியலும் ஒன்றல்ல 



பணமற்ற அரசியல் என்ற கொள்கையை உருவாக்குங்கள் 

நம் தேசம் சாக்கடை கொள்கைகளை விட்டு வெளியே வரட்டும் 

ஜெய்ஹிந்த்💪👍💐😒

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...