இலவசமாக உயரும் விலை😒😔👌
இன்றைய அரசியல் சூழலில் மக்களிடம் ஓட்டு வங்கியை சேகரிக்க மக்களிடம் மக்களின் சுய தேவைகளை தனிப்பட்ட முறையில் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது... திரைப்பட வசனங்களால் முன்னரே சுட்டிக்காட்டப்பட்ட வரிகள் படி "ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டனும்"இதே பாணியை தான் கடைபிடித்து வருகிறார்கள் இன்றைய அரசியல் சாணக்கியர்கள்... மக்களிடம் இருப்பது இரண்டு தேவை ஒன்று பொது தேவை மற்றொன்று சுய தேவை இந்த இரண்டு தேவையையும் மையமாகக் கொண்டுதான் உலக அரசியலே நடக்கிறது என்பதை விட நம் இந்திய அரசியல் நடக்கிறது... இன்றைய அரசியல் ஒரு வியாபாரம் ஒரு தொழில் முதலீடு போட்டு லாபம் பார்க்கும் ஒரு நஷ்டமில்லாத தொழில் ஒவ்வொரு அரசியல்வாதியின் முதலீடு பணம் செலவிடும் பணம் வட்டியும் முதலுமாக எடுக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் இன்றைய அரசியலே நடக்கிறது... இதை அறிந்தவர்கள் இல்லை என்பதை விட தெரிந்தும், புரிந்தும், அறிந்தும் கண்டும் காணாமல் இருப்பவர்கள் தான் 99% பேர் மீதம் உள்ளவர்கள் இதற்கான மாற்றை தேடி அழைகிறார்கள்... முதலீடான பணம் மக்களை வந்து சேரும் போது அது மக்களின் சுயநல தேவையை பூர்த்தி செய்ய அன்றைய தேவையை பூர்த்தி செய்து மக்களை தன் வழிக்குள் மடக்கி கொள்ளும் ஒரு தந்திரம் தான் இன்றைய அரசியல்...
"லஞ்சம் தவிர்போம்
நெஞ்சம் நிமிர்வோம்"
ஊழல் அரசியல் வாதிகளிடம் இருந்து ஆரம்பிக்கிறது என்பது 100% பொய்யான வாக்கியம் அத்தனை ஊழலும் குடிமக்களான நம்மிடம் இருந்துதான் உருவாகிறது அந்த ஊழலை இலவசம் என்ற பெயரிலும், ஒரு கோட்டரும், கோழி பிரியாணியாகவும், ஒரு ஓட்டுக்கும் 5000ரூபாயாகவும் தான் நாம் செய்கிறோம்... இந்த பணம் எல்லாம் அந்தந்த அரசியல்வாதிகளின் பணம்...
ஒவ்வொரு ஓட்டும் நம் உரிமை, சுய மரியாதை, நம் எதிர்காலம் இத்தனை மதிப்பு மிக்க வாக்கினை 5000/-(அதிகபட்சம்) மதிப்பிற்கு விற்பதில் தான் முதல் ஊழல் ஆரம்பமாகிறது... இன்றைய நாளின் பசியை போக்கி நாளைய லட்சியத்தை உடைத்தெரிவது போல இன்றைய சுய தேவையை போக்கி நாளைய பொது தேவையை செய்யமால் காலம் கடத்துவது தான் இன்றைய அரசியல்... ஊழலை ஆரம்பிக்கும் நாம் பின்னாளில் அரசியல்வாதி ஊழல் செய்கிறான் என்று குற்றம்சாட்டுவது முற்றிலும் தவறு... உங்கள் பார்வையில் அது ஊழல் ஆனால் அரசியல்வாதியின் பார்வையில் அது தொழில் முதலீடாக போட்டபணத்தை வட்டியும் லாபமுமாக எடுப்பது தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் குறிக்கோள்...
நம் இன்றைய அரசியல் தேர்தலின் கொள்கைகள் பல உண்டு அதில் முதல் இடம் இலவசம்... மக்களிடம் ஆசையை தூண்டி அவர்களின் ஆசையை நம் வெற்றிக்கு காணிக்கையாக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறைதான் இலவசம்.. இந்த அரசே மக்களின் வரிப்பணத்தில் தான் இயங்குகிறது... இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லாமல் இறுதியில் மக்களின் பொதுநல தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது... பிறகு மற்ற அரசிடமிருந்தோ அல்லது மற்ற நாட்டிடமிருந்தோ கடன் வாங்குவது பிறகு நம் நாட்டின் கடன் இவ்வளவு அதிகரித்துள்ளது என்று ஒவ்வொரு குடிமகனின் மீதும் கடன் சுமை இவ்வளவு என்று கணக்கிட்டு சொல்வது இதிலும் பெருமையை எதிர்பார்ப்பது தான் அரசியல்... முதலீடு போடுவது நமக்கெல்லாம் ஓட்டு வாங்க பணம் கொடுக்க அந்த முதலீட்டு பணத்தை திரும்ப பெறவே ஆட்சியின் வெற்றிக்கு பின் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்
ஊழல் ஆரம்பிக்கும் இடமே ஓட்டிற்கான பணமும், இலவசமும் தான்
இலவசமும், ஓட்டிற்கான பணமும் அதிகரிக்க அதிகரிக்க நம் நாட்டின் கடனும் அதிகரித்து கொண்டே தான் செல்லும்...நாட்டின் கடன் அதிகரிக்க நம் அன்றாட தேவைக்கான விலையும், வரியும் அதிகரிக்க8த்தான் செய்யும்... புரிந்து கொள் முயன்றால் உணர்ந்து கொள்
உன் தேவை நீ மட்டுமல்ல
உன் அடுத்த சந்ததி
உன் மொத்த சமூகத்தின் மகிழ்ச்சி
சுயநலம் கடந்து பொது நலம் காப்போம்
நம் ஓட்டிற்கான பணமும் வேண்டாம்
என்னை கடனில் சுமத்தும் இலவசமும் வேண்டாம் என்று எண்ணும் காலம் எதுவோ அதுவே ஒரு சிறப்பான ஆட்சிக்கு வழியாக அமையும்...
ஜெய்ஹிந்த்!!!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக