வாழ்க்கை தான் பிறக்கும் போது சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து முடிக்கும் போது ஏதாவது ஒன்றை சாதித்து தனது பிறப்பின் அர்த்தத்தை நிரூபிக்க வேண்டும் என்பது அநேகம் பேருடைய எதிர்பார்ப்பு மற்றும் கனவு..,ஒரு சாதாரண மனிதன் எப்படி சாதனை மனிதனாவது?
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு முதல் தடை தயக்கம் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லை அதற்கு தகுந்த எந்த ஒரு தேவையான பொருட்களோ அல்லது வழிகளோ இல்லை எப்படி கனவுகளை நனவாக்கி நினைத்த இடத்தை அடைவது இது தான் ஒரு உயர்ந்த மனிதனாக உருவாகும் ஒவ்வொரு மனிதனுக்கு இருக்கும் மனத்தடை, மனதில் தைரியம் உண்டு ஆனால் ஏதோ ஒன்று தயக்கம் மனம் முன்னோக்கி செல்ல தடுக்கிறது
தயக்கமா? அல்லது பயமா? என்று நின்றிருந்த சமயம் சரி நம்ம வாழ்க்கை தானே நம்ம முடிவுதான் என்று தன் திறமையின் மீது வைத்த நம்பிக்கையில் முதலடி எடுத்து வைத்தார் அந்த மனிதர்.
"நாம் எடுக்கும் முடிவில் தொடர்ந்து கவனமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பது அவருடைய முதல் யுக்தி"..,
ஏதோ ஒன்று கிடைக்க வேண்டும் என்றால் ஏதோ ஒன்றை இழந்துதானே ஆக வேண்டும்.
சரி ஆனால் நம்மிடம் தான் இழக்க ஒன்றுமில்லையே நம் உழைப்பை தவிர என்று முதல் படி எடுத்து வைக்க சரியான வாய்ப்பு காத்திருக்கிறது
முதல் வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைக்குபோது அதை தக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும் சற்று தடுமாறினாலும் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்திலே இருக்கும்.
"வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாம் யுக்தி"..,
கேப்டன் அத்தியாயம் அணியின் நிலை சற்று கவலைக்கிடமான நாட்கள் தோல்விகள் மட்டுமே நிரந்தரமான தருணம் சீனியர் வீரர்கள் எல்லாரும் தங்களுடைய சுய ஆட்டத்தில் கவனம் செலுத்த தலைவன் பொறுப்பை ஏற்க மறுத்த காலம் நிர்வாகத்திற்கோ ஒரு இளம் தலைவன் தேவை இந்த அணியை வழிநடத்த என்று சிந்தித்த போது அத்தனை தடைகளையும் உடைத்து கனவோடு அணியில் வலம் வந்த ஒரு இளம் அசுரனை தலைவனாக நிர்ணயித்தது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.
"உண்மையான உழைப்பினால் உருவான வாய்ப்பே தன் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று வாய்ப்பை நலுவவிடாத தைரியம் தான் தோனியின் மூன்றாம் யுக்தி"..,
தலைவன் நான் என்ற அகங்காரம், என் முடிவே அணியின் முடிவு என்ற தலைக்கனம் இல்லாத ஒரு தலைவன், மற்ற வீரர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த தலைவன், வீரர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வரிசைப்படுத்தி வெற்றியின் பக்கம் தன் அணியை வழிநடத்திய ஒரு சிறந்த தலைவன்.
அணியின் மற்ற வீரர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் சுய முன்னேற்றத்தை பொருட்படுத்தாது அணியின் முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்த அணி வீரர்களின் செயல்பாடு என்று கருதி "திறமைக்கு முன்னுரிமை கொடுத்த தலைவன் இது தோனியின் நான்காம் யுக்தி"
நுணுக்கங்கள் என்பது நாம் செய்யும் வேலையை கடமைக்காக செய்யும் போது அறிவதில்லை
தவறுகள் சில சமயம் நுணுக்கங்களை நமக்கு கற்று தருகிறது..,
அது தான் தன் வாழ்க்கை என்றும் தன் எதிர்காலம் என்றும் தான் தேர்ந்தெடுத்த பாதையில் தெளிவான முயற்சியோடு கூடிய பயணத்தில் வெற்றிகள் எப்படி வரும் என்று சிந்திப்பதை விட தோல்விகள் எப்படி வரும் என்று முன் சிந்தனை கொண்டு செயல்படும் போது தோல்விகளின் விகிதம் குறையும் இதுதான் அந்த மாமனிதர் இன்றைய கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த ஒரு தலைவனாக இருக்கும் தோனியின் யுக்தி
"வெற்றி மட்டுமே கனவல்ல, வரும் தோல்விகளை முன் சிந்தனை கொண்டு அதற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுப்பது தோனியின் ஐந்தாம் யுக்தி"
வெற்றிகள் சிலரது கண்ணை மறைக்கும் என்பது உண்மைதான் ஆனால் எப்போது வெற்றி பெற்றாலும் வீரர்களை முன்னிறுத்தி தோல்வியில் தான் பொறுப்பேற்ற ஒப்பற்ற தலைவன் தோனி ..,
"தோல்விக்கு பிறரை காரணம் காட்டாமல் தன் வழிநடத்தலில் இருக்கும் குறைகளை மட்டுமே காரணம் காட்டி தோல்வியை (அனுபவத்தை) ஏற்ற தலைவன் இது தோனியின் ஆறாம் யுக்தி"..,
ஒரு நொடி பொழுதிலும் வெற்றி தோல்வி மாறும் வெற்றியின் கனவு ஒரு சில சமயங்களில் தோல்விக்கு வழிவகுக்கும், வேகமான செயல்பாடு நிச்சயம் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து யார் என்ன சொன்னாலும் விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் ஆட்டத்தில் நிதானமும் இறுதிவரையிலான் போராட்டமும் தான் ஒரு அணியை வழிநடத்தி வெற்றியடைய செய்ய முடியும் என்பதை உலகிற்கு சுட்டிக்காட்டிய தலைவன் ..
"இறுதி முடிவு தெரியும் வரை தோல்வி மற்றும் வெற்றி யாருக்கும் உறுதியல்ல இறுதி பந்து வரை விவேகமான முடிவும், நிதனமான ஆட்டமும், போராட்ட குணமுமே தோனியின் ஏழாம் யுக்தி"
அவரது வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தான் நினைத்ததை சாதித்த ஒரு மாவீரன் இந்திய அணிக்கு சரியான நேரத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம் உலகம் முழுவதும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளம் கொண்ட தலைவன், தன் வாழ்க்கையில் முடிவெடுப்பதில் பயம் இல்லாத வேகத்தை விட விவேகமான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு சிறந்த தலைவன் தோனி இவருடைய வாழ்க்கை நிச்சயம் பல பேருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை…
அவருடைய துறையில் வெற்றியை மட்டுமே பார்த்த நாம் அவருடைய ஆரம்ப கால தோல்விகளை பார்த்தால்தான் புரியும் நமக்கு உண்மை சாதனையாளனின் வாழ்க்கை வலிகள்…
வெற்றி என்பது நோக்கமாக இருக்கலாம் தோல்வியை சந்திக்க கூடாது என்பதில்தான் கவனம் தேவை இது தோனி அவர்களின் வாழ்க்கை மற்றும் அவருடைய துறையின் செயல்பாடு இவ்வுலகிற்கு உணர்த்தும்.
இன்றும் தோனியின் ஓய்வு அறிவிப்பு எதிர்கால இந்திய அணியின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது இளம் வீரர்களுக்கு இடமளித்து மூத்த வீரர்கள் விலகுவது என்பது கிரிக்கெட் உலகில் நடத்துகொண்டிருக்கும் ஒன்றுதான் ஆனால் தோனியின் ஓய்வு இன்றைய இளம் தலைமுறைக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தாலும் மீண்டும் தோனியை போன்ற ஒரு வீரன் நமது இந்திய அணிக்கு கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் நிச்சயம் இருக்கும்…
வேகத்தை விட விவேகம் தான் வெற்றியின் முதல் அறிகுறி..,
தோல்வி வரும் காலம் அறியாமல் போராட்டம் குணத்தை விடுவது உழைப்பிற்கான அர்த்தம் அல்ல..,
சிந்தனை சரியாக இருக்கும் போது செயல் நிச்சயம் வெற்றி பெறும்..,
தான் தேர்ந்தெடுத்த துறையின் மீதான உண்மை காதல் நிச்சயம் நம்மை திறம்பட செயபட வைக்கும்..,
மீண்டும் ஒரு தோனியை நம் இந்திய அணிக்காக எதிர்நோக்கி காத்திருப்போம்..,👍🏏💐🙏










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக