சனி, 15 ஆகஸ்ட், 2020

"பெண் சுதந்திரமே உண்மையான தேசத்தின் சுதந்திரம்" 🇮🇳💪🏻👍🙏

 

        இந்தியா  சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட நாள் 1947 ஆகஸ்ட் 15, இன்று 74 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது சுதந்திர இந்தியா, இந்த 74 வருடத்தில் எத்தனை முன்னேற்றம் இந்த சுதந்திர இந்தியாவில்.., ஒரு நாட்டின் வளர்ச்சி ஒட்டு மொத்த மக்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ அரசியல் தலைவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

           சரி இன்றைய இந்தியாவில் தான் தலைவர்கள் என்பவர்கள் எல்லாம் அவர்களுடைய கொள்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  அரசியல் வளர்ச்சியில் தன் குடும்ப வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சுய வளர்ச்சிக்கு இந்த மக்களின் ஓட்டுக்களை பயன்படுத்துகிறார்கள் இதில் எங்கே ஓட்டு சுதந்திரம்? மீறினால் பணம் 1000 அதிகமாக கொடுத்தால் போதும் யாரென பாராது ஓட்டை வாரி வழங்கும் வள்ளல்கள் நம் குடிமக்கள். அது பழக்கப்பட்டதுதான் அரசியல்வாதியே லஞ்சம் வாங்கும் போது சாதாரண மக்கள் வாங்க கூடாதா???இந்த கேள்விய எத்தனை பேர் கேட்டிருபாங்க, ஒரு சுதந்திர இந்தியாவில் சுதந்திரமா ஒரு லஞ்சம் கூட வாங்க விடமாட்ராங்க சுதந்திர இந்தியாவின் சிறப்பு இதுதான்.

 அடுத்து நம் நாட்டில் பெண் மற்றும் ஆண் இருபாலருக்கும் இருக்கும் வேறுபாடுகள் தான் என்ன??? இன்றளவும் சில ஜென்மங்களுக்கு புரியவில்லை பெண்ணென்றால் போதைக்குப் பயன்படுத்தும் ஊறுகாய் போலும் காமத்திற்கு பயன்படுத்து உணர்வற்ற உயிர் கருவியாம்.., அவர்களின் எண்ணத்தில் பெண்மை உணராத சில காட்டுமிராண்டிகள் இங்கே நம் தேசத்திலே உலாவ விட்டு அவர்களுக்கும் அவர்கள் செய்யும் தவறுக்கும் துணை போவது தானே இன்றைய அரசியல்…

     இந்தியாவில் பெண்கள் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு  பிரச்சனைக்கு இதுவரையிலும் உயர்ந்த பட்ச தண்டனை கொடுத்துள்ளது என்று ஏதாவது உண்டா?? இல்லை...

நம் தமிழகத்தில் வாயில்லா மாட்டுக்கும் நம் பாரம்பரியத்தை காக்க போராடத் தெரிஞ்ச நமக்கு நம்ம நாட்டுல பெண்கள் பாலியல் பிரச்சனைக்கு எதிராப் போராடத் தோனலையே ஏன்??? இது சுதந்திரமா???

     உலக அளவில் இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள நாடு இந்தியா கடந்த ஒரு வருடத்தில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள் பெண்கள் இந்தியாவில் தான் அதிகம் மற்ற நாடுகளை விட இது சுதந்திர இந்தியாவா???


      காமம் போக்க விடியற்காலையில் 3 வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்தது கூடத்தெரியாமல் கற்பழிக்கப்பட்டாளே இது சுதந்திர இந்தியாவா??? 

நம் சுதந்திர நாட்டில் சட்டம் தன் கடமையை செய்யும் ஆம் மிகச்சரியான பணியை இந்த சட்டம் செய்து கொண்டே இருக்கிறது ஒரு பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் நடந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது சட்டம் செய்யும் கடமை தண்டனை அறிவிப்பது ஆனால் கருணை மனு என்ற பெயரில் தண்டனை தள்ளிபோவது இதுதான் சட்டமா??? அதே இன்னொரு தரப்பு மரண தண்டனை கொடிய ஒரு தண்டனை என்கிறார்கள் அடே மூடர்களா ஒரு பெண் அந்த பெண்ணின் அனுமதியின்றி அவளை தொடும்போதே ஒவ்வொருவனையும் கொன்றிருக்க வேண்டும் அதுவும் விட்டாச்சு கற்பழிப்பு நடந்துவிட்டது ஏனடா கொலை செய்தாய் என்றால் அவள் கத்தினால் கொன்றோம் என்றான் கொலையாளி இந்த பதில் எந்த நாட்டுச்சட்டம் எற்றுக்கொள்ளும் ஆனால் நம் சட்டம் ஏற்றுக்கொண்டது இதுதான் இந்திய சுதந்திரம்??


        உனக்கு அடிபட்டால் உனக்கு மட்டும்தான் வலிக்கும் இது உன் உடல் உணர்வு பூர்வமான ஒரு அனிச்சைச் செயல் ஆனால் ஒரு பெண் கொல்லப்பட்டால் என்றவுடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஒரு சில வாரம் கொந்தளித்தது அடுத்த ஒரு பிரச்சனை முன்னெடுக்க அத்தனை மக்களும் அடுத்த பிரச்சனையை நோக்கி சென்றுவிட்டார்கள் உண்மையில் ஒரு பிரச்சனையை சமாளிக்க மற்றொரு பிரச்சனையை மக்களிடையே கொண்டு செல்லும் ஆட்சியில் ஏது சுதந்திரம்??

     அந்த டெல்லி சம்பவத்தில் ஒரு 17 வயதுடைய சிறுவன் குற்றவாளி சட்டம் அவனை மூன்று ஆண்டுகள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிட்டது

அந்த குற்றவாளிகளுக்கு துணையாக வாதாட வந்த வக்கிலுக்கு குடும்பம் இல்லை போல பணத்திற்காக பாவங்களை  சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது அந்த புண்ணிய தொழில்..

பெண் சுதந்திரம் பெண் சுதந்திரம் அதற்கு என்ன அர்த்தம் தெரியாத சில ஜென்மங்களும் உண்டு, அரசு அலுவலகத்தில் தன் உயர் அதிகாரியை முகக்கவசம் அணிந்து வர கூறிய மாற்றுதிறனாளி பெண்ணை அந்தi உயரதிகாரி அடித்த அடி என்ன இதை வலைதளங்களில் பரவிட்ட பண்ணாடைகளும் உண்டு இதில் அந்த பெண்ணின் நிலையை பார்த்து பரிதாபப்படுவதா? இல்லை.., அந்த உயரதிகாரியின் கோழையான வீரத்தை பார்த்து கோபப்படுவதா?? அல்லது அத்தனை விஷயங்களையும் தனது கைப்பேசியில் படம் பிடித்த கேமராமேனை நினைத்து வெட்கப்படுவதா??? இது சுதந்திர நாடா????

   காமத்திற்கு அர்த்தம் புரியாமல் சிலபேர் திரிகிறார்கள் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணின் உடை விலகுமா? என்று ஒரு இச்சைக்காக எதிர்பார்க்கும் காமவாதிகளுக்கு தெரியவில்லை தன் பிறப்பு ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து என்று., பேருந்தில் செல்லும் போது சிலர் பின் படிகட்டில் ஏறுவதை விட முன் படிக்கட்டி ஏறுவதுதான் பிடிக்கும் ஏன் பெண்களை உரச வேண்டும் என்ற காரணம் ஒரு சிலரது மனதில் உண்டு .., இ்ந் பெண் என்ன உயிரா அல்லது காட்சிப் பொருளா பார்ப்பவனெல்லாம் தொட்டுப்பார்க்க??? இது சுதந்திர நாடாம்???  பெண்மை ஒரு உணர்வுள்ள உயிர்  பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் நாள் தான் உண்மை சுதந்திர நாள், பெண் தெய்வமாக போற்ற வேண்டாம் ஒரு உயிராக நினைத்தால் பொது அவர்களில் வலி உணர முடியும்.

பெண் என்பவள் காம பொருளல்ல தொட்டுணர..

பெண்ணின் உயர்வுக்கு ஏற்ப அவர்கள் மீதான வன்புணர்வு தொந்தரவுகள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது நம் நாட்டில், பெண்மைக்கு பாதுகாப்பும், பெண்மைக்கு முக்கியத்துவமும், பெண்மையை போற்றும் நாள் எதுவோ அதுவே உண்மை சுதந்திரம் கொண்டாடும் நாள்

   2018 ஆண்டு அரசு வெளியிட்ட குற்ற நிலுவையின் படி ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்.

  "பெண்ணை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் பிறந்ததல்ல என்று" இந்த வார்த்தகள் உண்மையிலும் உண்மை ஆனால் அத்தனை ஆண்களுக்கும் அல்ல

   2019 ஆம் ஆண்டு எட்டு மாதத்தில் 1537 வழக்குகள் பெண் பாலியல் வன் கொடுமை என்ற பெயரில் பதிவாகியுள்ளது நமது அண்டை மாநிலமான கேரளாவில்.

      2017 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 17 வயிதிற்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 17553 வழக்குகள் நிலுவையில் உள்ளதென NCRB(National Crime Report Bureau) தெரிவித்துள்ளது

 இது எல்லாம் வழக்குகள் தொடரப்பட்டதால் கிடைத்த எண்ணிக்கைகள் நாடு முழுவதும் இன்னும் எத்தனையோ பெண்கள் அவர்களின் விருப்பம் இல்லாமல் ஏதோ ஒரு நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டு தான் இருக்கிறார்கள் காரணம்??? 

இத்தனை தவறுகளுக்கும் பொதுவாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அதாவது ஒரு பெண்ணின் மேல் அவளின் அனுமதி இன்றி தவறான எண்ணத்தில் அவளை தொட நினைக்கும் அத்தனை பேருக்கும் பொதுவான தண்டனை எப்போது அரசால் இயற்றப்படுகிறதோ அது தான் முதல் பெண் சுதந்திர நாள்

      அந்த சட்டமும் தண்டனையும் இந்தியாவில் எந்த இடத்தில் பெண்மைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாலும் இந்த சட்டமும், தண்டனையும் செல்லும் நாள் எதுவோ அதுதான் உண்மையான பெண் சுதந்திர நாள்..,

      சாலையில் தனியாக செல்லும் ஒரு பெண் ஒரு ஆணை கண்டு அவன் மேல் எந்த வித அச்சமும் இல்லாத தைரியம் உருவாகும் நாள் எதுவோ அதுவே உண்மையான சுதந்திர நாள்..,

      பெண்மையை தெய்வமாக நினைக்க வேண்டாம் ஒரு காமப்பொருளாக நினைக்காமல் இருந்தால் போது உண்மை பெண் சுதந்திரம் பிறந்துவிடும்.

          பெண்களின் வளர்ச்சியை போற்ற வேண்டாம் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தாமல் இருந்தாலே உண்மை பெண் சுதந்திரம் பிறந்துவிடும்.

          "பெண்ணின் வலி ஒரு பெண்ணுக்குத்தான் புரியும் ஆனால் அத்தனை ஆண்களுக்கும் தன் தாயின் வலி புரியும் அந்த தாயின் வலியை எல்லா பெண்களும் உணருவார்கள் என்று எல்லா ஆண்களுக்கும் புரிந்துவிட்டால் பெண் சுதந்திரம் பிறந்துவிடும்".,


       "ஒரு பெண் தன் பிறப்பால் பெருமைப்படும் நாள் எதுவோ அது தான் உண்மையான பெண் சுதந்திர நாள்"

          பெண்மை ஒரு வரம் இது ஆண்கள் உணரும் நாள் எதுவோ அது தான் உண்மையான பெண் சுதந்திர நாள் 

        மொத்தத்தில் நம்முடைய இத்தனை ஆண்டு சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கென சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக கூறினாலும் பெண் என்பவள் ஏதோ ஒரு காரணத்திற்காக அடிமையாகத்தான் நடத்தப்படுகிறாள். இந்த அடிமைத்தனம் அழியும் நாள் எதுவோ அதுவே உண்மையான பெண் சுதந்திர நாள்…

    பெண்ணின் வலி உணர தாயின் வலியை உணருங்கள் 

       நம் சுதந்திர இந்தியா என்று சொல்லும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கென மிகக்கடுமையான சட்டமும், தண்டனையும் இயற்றப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொரு நாளும் போராடுவோம் 

       பெண் சுதந்திரம் கிடைத்தால் தான் நம் இந்திய சுதந்திரம் முழுமையடையும் என நம் சந்ததிகளுக்கு உணர்த்துவோம் 

        பெண்ணும் ஒரு உயிர், உணர்வு பெண்ணில்லா உலகம் இல்லை என்பதை உணர முயற்சிப்போம் 

            முழு சுதந்திர இந்தியாவை உருவாக்குவோம், மிக விரைவில் பெண் சுதந்திரம் மூலம் நம் இந்திய சுதந்திரம் முழுமையடையும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சாதாரண இந்திய குடிமகன்!!!

  ஜெய்ஹிந்த்!!!!🇮🇳💪🏻👍🙏

1 கருத்து:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...