மனிதனாகப் பிறந்தால் ஆயிரம் கனவுகள்
ஆயிரம் ஆயிரம் எத்தனை ஆயிரம் கனவுகள்
எத்தனை முறை வாழ்வோம் என்று தெரியாது
எத்தனை நாள் வாழ்வோம் என்று தெரியாது
யாருடன் வாழ்வோம் என்றும் தெரியாது-ஆனால்
தன் வாழ்க்கையை பற்றிய கனவுகள் எண்ணிலடங்காது
சாதாரண மனிதன் தான் வலிகள், சந்தோசங்கள் எல்லாம் ஒன்று தான்
உடலமைப்பைத் தவிர
ஆணுடன் பெண் வேறுபட்டிருப்பது உலக நியதி
உலகிற்கே தேவையான மாற்றங்கள் இது
இம்மாற்றங்கள் இல்லை என்றால் ஏது நமக்கு உலக வளர்ச்சி, மனித வளர்ச்சி??
எம்மாற்றமானாலும் மனிதன் முதல் விலங்கு வரை அந்த ஆண் பெண் மாற்றம் என்பது பொதுவானது மேலும் தேவையானதும் கூட
பிறப்பு முதல் இறப்பு வரை இந்த ஆண் பெண் வேறுபாட்டால் மட்டுமே இயங்குகிறது இவ்வுலகம்
சிந்தனைக்கு சற்று இடமளித்து உலக நியதி, தேவை என்னவென்று புரிந்தால் ஆண் பெண் பிறப்பின் சிறப்பம்சம் புரியும்
நான் ஆண்
நான் பெண்
இதில் என்ன பாகுபாடு என்ன வேறுபாடு என புரியவில்லை
ஆனால் உடலால் வேறுபட்டிருப்பது
ஈர்ப்பிற்காகத்தானே தவிர வேறு எதற்கு???
ஆண் பெண்ணால் ஈர்க்கப்பட வேண்டும்
பெண் ஆணால் ஈர்க்கப்பட வேண்டும்
இது தான் உலகின் இனவளர்ச்சிக்கு தேவை
ஒரு ஈர்ப்பு எப்படி உலக வளர்ச்சியை நிர்ணயிக்கும்???
இந்த இடத்தில் சிந்திக்கத்தான் வேண்டும்
உடலளவில் ஆண் பெண் வேறுபாடு என்பது சுய தேவைக்கத்தான் என்ற எண்ணம் சிலருக்கு
சில இடங்களில் சரிதான் அதனால் இழந்த இழப்பின் மதிப்பே வேறு
சரி அந்த வேறுபாடு இல்லை என்றால் நான் எங்கே?? நீ எங்கே?? நம் முன்னோர் எங்கே??
நினைத்துப்பாருங்கள்
உலக வளர்ச்சியின் முதல் அடிப்படை தேவை இன வளர்ச்சி
இந்த இன வளர்ச்சிக்கு தேவை ஆண் மற்றும் பெண்
இருவருக்கும் சம பங்கு உண்டு இன வளர்ச்சிக்கு
அதற்குள் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு???
உலகின் தேவைக்கான இரண்டு தேவைகளுக்குள் எத்தனை பாகுபாடு
மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள பாகுபாடு குறைந்து
ஒரு மனிதனிக்கு இன்னொரு மனிதன் மேல் ஏற்றத்தாழ்வு நிலை
காரணம் சுய தேவை
ஒருவரை அடிமையாக்கி தன் தேவையை நிவர்த்தி செய்துக்கொள்ளும் யுக்தி மனிதனை தவிற வேறு எவருக்கும் வராது
அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி
உலகில் பிறந்த பிறப்புகள் எல்லாம் சமம்
இது ஒரு சில இடங்களில் பணம், கல்வி, ஆள்பலம், உயர் நிலை, ஏழ்மை, ஆண் மற்றும் பெண் இப்படி ஏற்றத்தாழ்வு என்பது இல்லாத இடமில்லை…!
மனிதன் உயர்ந்தால் உயருகிறான் என்பான்
தோற்றால் தாழ்ந்துவிட்டான் என்பான்
நின்றால் சோம்பேறி என்பான்
ஆனால் வாழ்வில் நம் நிலையை திரும்பி பார்க்க நமக்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ
நம் அருகில் இருப்பவனுக்கு நிறைய நேரம் இருக்கிறது
அவன் அவனுக்காக சிந்தித்த நேரத்தை தவிர நமக்காக யோசித்த நேரம் தான் அதிகமாக இருக்கும்
வாழ்வில் போட்டியிட்டு தோற்றவனை விட
பொறாமை பட்டு தோற்றவன்தான் அதிகம்
அடுத்தவனின் நிலை
அடுத்தவனின் வெற்றி
அடுத்தவனின் தோல்வி
இப்படி அடுத்தவனின் பிரச்சனைக்கு சிந்தித்த நேரத்தை நம்முடைய வளர்சிக்கு சிந்தித்திருந்தால் நாமும் வளர்ந்திருக்கலாம்,.
உனக்காக மட்டும் சிந்திக்கப்பழகு
உன் வளர்ச்சிக்கான நோக்கம் போட்டியாக இருக்கலாம்
ஆனால் பொறாமையாக இருக்க கூடாது
எண்ணம் என்ற ஒரு சொத்து நம்மிடம் உண்டு அதை நல்ல விதத்தில் பயன்படுத்துவதும் தவறாக பயன்படுத்துவது நம் செயல்பாட்டில் உலகிற்கு தெரியும்
எண்ணம் என்பது ஒரு கோவில்
நல்ல எண்ணங்களை மனதில் விதைத்தால் நல்லதையே உலகம் நமக்கு கொடுக்கும்
தீய எண்ணங்கள் என்றும் நிலையாகாது
நல்ல எண்ணங்களையே விதைப்போம்
நல்லதொரு உலகற்கு வழிவகுப்போம்!!!
எண்ணம் போல் வாழ்க்கை!!!
நம் வாழ்க்கை நம் எண்ணம்!!!👍✍️💪🏻😉

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக