செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

"யாசகம் இல்லா நம் தாயகம் உருவாக்கிடுவோம்"👍💐


"யாசகம் இல்லா தாயகம் எங்கள் இலக்கு" 

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு இலக்கு உண்டு அது அவரவர் சுய முன்னேற்றத்தை மையமாகக் கொண்டது ,சரி என்னுடைய இலக்கு நான் மற்றும் என் குடும்பமும் சார்ந்த முன்னேற்றம் ஆனால் ஒரு கூட்டம் இருப்பவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோசங்களும், பலன்களும் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருகிறது

யார் அவர்கள்?

அணியில் எத்தனைபேர்??

அவர்களுடைய இலக்கு என்ன???

இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை என் தாய் என் தந்தை என் குடும்பம் என் நாடு எல்லாம் நம்முடையது எனும்போது என்னுடையைது என்று பிரிவினை எதற்கு?

இந்த உலகம் இருப்பவர்களையும், இல்லாதவர்களையும் வெவ்வேறு விதமான பார்வையில் தான் பார்க்கும் ஒவ்வொருவருடைய பார்வையும் வெவ்வேறு விதம் அவர்களுடைய சிந்தனைகளும் வெவ்வேறாகத் தான் இருக்கும்.

நம் தாயகத்தில் ஒரே பார்வை ஒரே சிந்தனை, ஒரே கொள்கை உடையவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை இனம்கண்டு ஒன்று சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல அப்படி நம்முடைய தாயகத்தில் யாசகர்கள் இல்லாத தாயகமாக உருவாக்க வேண்டும் என்று சில உள்ளங்களின் ஆசை.,

எப்படி இதை நடைமுறை படுத்துவது??? நம் நாட்டில்தான் பொது சேவை என்று இறங்கினால் அடுத்தவரின் எண்ணம் இவன் வீட்டில் இருப்பதை பார்க்க முடியல உலகத்தை திருத்துகிறார்களாம்!!! இந்த வசனங்கள் இல்லாத நம் பக்கத்து வீடே இல்லை சரி.., அவர்கள் பேசட்டும் அதனால் எனக்கு ஒன்றும் குறைந்துவிடவில்லை என் ஆசை என் இலக்கு நோக்கி நான் செல்கிறேன் அவ்வளவுதான் என்ற துணிந்த இதயங்களின் கூட்டம் இது.

யாருங்க அவங்க??? உங்கள் மனதில் இருக்கு எதிர்பார்ப்பு எனக்கு புரிகிறது அவர்கள் சாதாரண இரக்க குணம் கொண்ட இளைஞர் பட்டாளம் கொண்ட ஒரு அணி "அட்சயம் அறக்கட்டளை"

ஒவ்வொரு இலக்கிற்கும் ஏற்றவாறான கொள்கைகள் இருக்கும்

 இவர்களுடைய கொள்கை "யாசகர் இல்லாத தாயகம் உருவாக்குவோம்" இந்த இலக்கு இந்த கொள்கை எந்த அளவிற்கு சாத்தியம் என்று சாதாரண மனிதனாக சிந்தித்து பார்த்தால் மிகக்கடினம்.,

"யாசகம் கேட்பவர்களுக்கு யாசகம் வழங்குவது தவறு முடிந்தால் வாழ்க்கை கொடுங்கள் "

யாசகர்கள் என்றால் யார்??? நம் வீட்டைப்போல் அவர்களும் அவரவர் வீடுகளில் இருந்தவர்கள் தான் அவர்களுக்கு என குடும்பம் எல்லாம் இருந்தது தான் ஆனால் ஏதோ ஒரு காரணங்களால் அவர்களுடைய மன வேதனை, உயிர் வாழத்தேவை காரணமாக அவர்கள் யாசகர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

 நம் குடும்பத்தில், நம் வீட்டின் அருகில் உள்ளவர்களை சந்தோசமாக வைத்திருந்தாலே போதும் எதிர்காலத்தில் யாசகர் இல்லாம் நாடாக நம் தமிழகத்தையும் நம் இந்தியாவையும் மாற்றிவிட முடியும்

எதிர்காலத்தை உருவாக்குவது ஒவ்வொரு இளைய சமுதாயத்தின் கடமை ஆனால் கடந்த காலத்தில் உருவான யாசகர்களை அவர்கள் வாழ்நாள் வரை காப்பது எப்படி அதற்காகத் தான் உருவானது "அட்சயம்"

மனிதர்கள் பல ஆனால் நோக்கம் மற்றும் இலக்கு ஒன்றுதான்

யாசகர்கள் என்ற வார்த்தை ஒழிக்கப்பட வேண்டும்

இது எவ்வளவு ஒரு மிகப்பெரிய இலக்கு

"இலக்கு பெரியதாக வை

உன் பிறப்பு அர்த்தமாகும்"

முடியுமா என்று தயங்கி அவர்கள் விலகி நின்றிருந்தால் இந்த கொரோனாவின் போது எத்தனை உயிர்கள் பசியில் போயிருக்குமோ தெரியவில்லை.

இல்லாதவர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அத்தனை நாட்களும் மூன்று வேளை உண்ண உணவு அளித்து, பிறகு அவர்களுக்கென வேலை மற்றும் சிறு தொழில் ஏற்பாடு செய்து இறுதியில் இருக்க இருப்பிடம் கூட கொடுத்த ஒரு அமைப்பு அட்சயம் அறக்கட்டளை

"இருப்பது ஒரு வாழ்க்கை  இருக்கும் வரை பிறர் வாழ உதவிடுவோம்"

என்ற கொள்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நம் தமிழகம் முழுவதும் யாசகர் இல்லாத ஒரு தமிழகமாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இவர்களுடன் இணைவோம் நாம்., நாம் இயன்றால் நம் அருகில் நமக்கு தெரிந்த யாசகர்களுக்கு வாழ்க்கை வழங்க முடியும் என்பதை மனதில் கொண்டு அவர்களோடு கைகோர்த்து நம் தமிழகத்தில் யாசகம் என்ற வார்த்தையை ஒழிப்போம்.

இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற வாழ்க்கையை உருவாக்கிடுவோம்.

யாசகர் இல்லாத தமிழகம் உருவாக்குவது எளிய செயல் அல்ல இந்த இலக்கு என்பது நம் தலைமுறையின் ஒவ்வொரு இளைஞர்களின் கையிலும் உள்ளது என்பதை அறிந்து செயல்படுவோம்.

உங்களுடைய பகுதிகளில் யாசகர்கள் எங்கேனும் கண்டால் தயவு செய்து அவர்களுக்கு யாசகம் வழங்காதீர்கள் முடிந்த அளவு அவர்களுடையை வாழ்க்கை முறையை மாற்ற முயற்சி செய்யுங்கள் மாற்றம் என்பது நம்மிடம் தான் இருக்கிறது 

மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு நல்ல வாழ்வையும் தனது தேவையை நிவர்த்தி செய்ய நிரந்தர வழியும் கிடைக்கும்.

யாசகர்கள் உருவாக காரணம் என்ன??? மக்களால் கைவிடப்பட்ட தாய் அல்லது தந்தையர்கள், எந்த ஆதரவும் இல்லாத வயதானவர்கள் ஒரு சில பகுதிகளில் ஊனமுற்றவர்கள் என பல காரணங்கள், இதற்கு முதலில் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இன்றைய தலைமுறையினர் தன் சுயநல முன்னேற்றத்தை மட்டுமே பார்ப்பவர்கள், உதவுபவர்களையும் ஏசும் மூடர்கள் அடுத்த வீட்டில் நடப்பது எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டில் நடக்கும் என்ற அக்கறை இல்லாதவர்கள் இப்படி பலர் முக்கிய காரணமாக இருக்கிறார்கள் யாசகர்கள் உருவாக.

ஒரு சில நல்ல உள்ளங்கள் யாசகர்களுக்கும் வாழ்வு உண்டு என்று எண்ணிய சிலர் பாதுகாப்பு இல்லங்களையும், ஆதரவற்ற இல்லங்கள் மூலம் பல உயிர்களை காத்து வருகிறார்கள், அவர்கள் இல்லை எனில் பாதுகாப்பு இல்லங்கள்,ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் அனைவரும் யாசகர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

யாசகம் வழங்குவதை தவிருங்கள் முடிந்தால் அட்சயம் அறக்கட்டளையோடு இணைந்து நாமும் முயற்சிப்போம் யாசகர் இல்லாத தமிழகம் உருவாக… 

நினைத்தால் எதுவும் சாத்தியம்

உழைத்தால் எதுவும் நிச்சயம் 

ஒற்றுமையோடு செயல்பட்டால் இலக்கு என்றும் நம் கையில் 

"அன்பால் ஒன்றுபடுவோம் யாசகர் இல்லாத நம் தாயகம் உருவாக்குவோம்"


தொடர்புக்கு:-   Atchayam Trust office, Teachers colony, near JKKN college , vattamalai, komora palayam, Tamil Nadu 638183

 கைப்பேசி :-   +91 99439 08424

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...