ஒரு நாட்டின் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டும் எனவும் இந்த பிறந்த நாளன்று தன்னுடை நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்கள் என யாரும் உண்ண உணவில்லாமல் பட்டினியாக இருக்க கூடாதென நல்லலெண்ணத்தில் ஒரு ஆலயத்தில் மக்களுக்கு அன்னதானம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அனைத்து மக்களுக்கும் அன்று முழு நாள் மூன்று வேளையும் உணவு வழங்க தொடங்கினார்கள் அரசர் முன்னிலை உணவு வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது
நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஆலயத்தில் கூடி வரிசையில் நின்று அரசரின் கையிலிருந்து உணவுகளை பெற்றுக்கொண்டனர் அந்த வரிசையில் எல்லா மக்களும் ஏழை எளியவர்கள் முதல் அனைத்து மக்களும் இந்த அன்னதான நிகழ்வில் பங்கு கொண்டனர்.
அந்த அன்னதான நிகழ்வில் ஒரு ஏழை உணவிற்காக வரிசையில் நிற்க வந்தார். அவர் அந்த நாட்டில் செருப்புதைத்து பிழைத்து வந்தார் அவருடைய ஏழ்மை நிலை மற்றும் தொழிலை பார்த்து மற்றவர்கள் முகம் சுழித்தனர் அவரின் நிலையை பார்த்து அனைவரும் ஏளனம் செய்தனர். அந்த ஏழையோ அவர்களின் பார்வை மற்றும் சொல் கண்டு அந்த வரிசையில் நிற்காமல் சற்று விலகியிருந்தார்.
அனைவரும் வாங்கிக்கொண்ட பிறகு தனக்கு உணவு கிடைக்கும் என்று காத்திருந்தார் அனைவரும் உணவை வாங்கி அன்றைய பசியை தீர்த்துக்கொண்டனர். ஆனால் விதியின் விளையாட்டோ என்னவோ அந்த செறுப்பு தைக்கும் ஏழை மகனுக்கு இறுதிவரை உணவு கிடைக்கவில்லை.
அந்த ஏழை மகன் உணவு கிடைக்கவில்லையே என்ற விரக்தி மற்றும் பசியில் செய்வதறியாது அமைதி காத்து தன் தொழிலான செருப்பு தைக்க சென்றார்
பிறகு அரசன் உணவு வழங்கும் நிகழ்வை முடித்துவிட்டு தன் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக வலம் சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் அந்த ஏழை மகன் அமர்ந்து சற்று மனக்கவலையுடன் தன் கடமையில் கவனிப்போடு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதன் வழியாக வந்த அரசன் அந்த ஏழையை பார்த்து தாங்கள் இன்றைய உணவை வாங்கிக்கொண்டீர்களா? என்றார் அதற்கு அந்த ஏழை முகத்தை திருப்பாமல் வேலை செய்துகொண்டே இன்று என் விதி எனக்கு உணவு கிடைக்காதென்று உள்ளது ஐயா அதனால் கிடைக்கவில்லை ஏனென்றால் என் தோற்றமும், என் ஏழ்மைக்கும் எந்த விதத்திலும் நன்மை கிடைக்காது இது தான் என் தலைவிதி என்று சலித்துக்கொண்டு கூறிக் கொண்டிருந்தார் அந்த ஏழை.
அதற்கு அரசனோ இந்த தொழிலை விட்டு வேறு வேலை பார்க்கலாமே இந்த தொழிலுக்கு மதிப்புதான் கிடைக்கவில்லையல்லவா என்றார் அதற்கு அந்த ஏழை ஐயா இது என் தொழில் மட்டுமல்ல என் தெய்வம் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றார் போல் தெய்வத்தை மாற்றுபவன் உண்மையான பக்தன் அல்ல என் தொழில் என் தெய்வம் என்றார்
அப்போது அந்த அரசனோ நம் பிறந்தநாளென்று யாரும் பட்டினி கடக்கக் கூடாதென நினைத்து உணவு வழங்கினோம் ஆனாலும் ஒரு ஏழை மகனின் உண்மை உழைப்பாளி பசியை தீர்க்கமுடியாமல் போய் விடுமோ என்று சரி மகனே நீங்கள் என்னோடு வருங்கள் என்று அழைத்தார் அதற்கு என் விதி போல் எல்லாம் நடக்கட்டும் நீங்கள் உங்கள் உணவை உண்ணுங்கள் என்று அரசன் என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ஆனால் அரசன் என் பிறந்தநாளன்று யாரும் பசியோடு இருக்க கூடாது என்று கூறியவுடன் அந்த ஏழை மகன் சட்டென திரும்பி பார்த்து எழுந்து நின்று ஐயா என்னை மன்னியுங்கள் நீங்கள் என தெரியாமல் உட்கார்ந்து நான் பேசிக்கொண்டிருந்தேன் என்றான்.
அரசனோ பரவாயில்லை என்னோடு வாருங்கள் என்று அவனை அரண்மனைக்கு அழைத்துச்சென்று உன் விதி மாறிவிட்டது இன்று எனக் கூறி நீ இன்று என்னோடும் நம் நாட்டின் ராணியோடும் உணவு உண்ணப்போகிறாய் என்று உன் இன்றைய விதியை நான் மாற்றி எழுதுகிறேன் என கூறி அன்று மூன்று வேளையும் உணவளித்து அவருக்கு ஒரு படி தங்க நாணயங்களும் வழங்கினார்., இனி நீ ஏழையாக இருக்க கூடாது உன் தொழிலை மறந்துவிடாதே என்று அனுப்பிவைத்தார்.
செய்யும் தொழிலே தெய்வம்,
நம் எண்ணங்களுக்கு ஏற்ப நம் நிலை மாறுபடும்,
நம் நோக்கமும் எண்ணமும் சரியாக இருந்தால் நிச்சயம் நம் விதி மாறும்,
நாளைய விதி என்பது யாரும் அறியாதது
அதனால் வரும் விளைவுகளை, கஷ்டங்களுக்கு விதியின் மேல் பழியை போடாதீர்கள் ,
மாற்றம் என்பது நிச்சயம் நடக்கும்,
நம் கடமை தவறாமல் இருந்தால்!!!
நிச்சயமாக... தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு உழைப்பவர்கள் ஒருநாளும் தோற்பதில்லை...
பதிலளிநீக்கு