சூழ்நிலை மாற்றம் காலத்தின் கட்டாயம், காலத்தின் பிடியில் பயணிக்கும் நாம் எதிர்பார்க்காத சூழ்நிலைகளை எதிர்பார்க்காத சமயத்தில் எதிர்கொள்வது தான் வாழ்வியல் உண்மை..
ஒரு மனிதனின் செயல்பாட்டை சூழ்நிலை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதனை ஒரு மூன்றாம் மனிதனாக நின்று வேடிக்கைப் பார்த்தால் புரியாது இதிலும் அனுபவம் தான் முக்கியம்... எப்போதும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சூழ்நிலைகள் அமைவது இல்லை தேவையான நேரத்தில் செய்ய வேண்டியதை கண்டிப்பாக செய்தாக வேண்டும் எதற்காக என்றால் வாழ்வின் பயணத்திற்காக..,
வாழ்க்கை எப்போதும் நேரான பாதையாக அமையாது மேடு பள்ளங்கள், வளைவுகள் இப்படி பலதரப்பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடும் இவைகளால் கற்பதை விட்டு காலத்தை குறை சொல்பவர் எப்போதும் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாது., எந்த சூழ்நிலைகளில் எந்த விஷயத்தை தொடர வேண்டும்,?? நாம் செய்யும் செயலுக்கு ஏற்றச் சூழ்நிலை அமையவில்லையா அந்த செயலை விட முயற்சிக்கும் எண்ணம் இருக்கும் வரை வாழ்வியல் வெற்றி தாமதம் தான்... சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறி செயல்படுவது அல்லது எந்த சூழ்நிலையானாலும் நம் செயலுக்கு ஏற்ப திரித்து செயல்படுவது உலகில் அபூர்வமான செயல்., அனுபவம் மட்டுமே அது போன்ற மாற்றத்தை கொடுக்கும்...
ஒரு கொடியவன் பல தவறுகளை செய்து தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் அவன் வாழ்வில் செய்யாத தவறுகள் இல்லை... அந்த தவறுகளுக்கு எல்லாம் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் அல்ல ஆனால் சிறையிலே தன் தவறுகளை உணர்ந்து சாகும் வரமாக ஆயுள் தண்டனை விதக்கப்பட்டது. அந்த கொடியவனை சிறையில் அடைத்தார்கள்.. நாட்கள் நகர்ந்தன சிறையில் அந்த கொடியவனின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்தான்... தனிமை அவனை வதைத்தது.. என்ன செய்வது என்று புரியாமல் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தான்... தன் வாழ்நாள் முழுவதும் இப்படியே கடந்துவிடும் என்ற பயம் அவனை வாட்டியது... அவன் மீதான கோபத்தால் ஆவனையே தண்டித்துக் கொண்டான்...இப்படியே நாட்கள் நகர ஒரு நாள் அந்த சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க ஒரு துறவி வந்திருந்தார் அவ்வபோது அந்த சிறைக்கு சென்று கைதிகளுக்கு வாழ்க்கை பற்றிய கருத்துக்களை வழங்கி வந்தார் அப்படி ஒருநாள் அந்த துறவி சிறைக்கு சென்றிருந்த போது முதன்முதலாக அந்த துறவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அந்த கொடியவனுக்கு., துறவி கைதிகளின் மத்தியில் தனது ஆன்மீக மற்றும் வாழ்க்கை தத்துவ நெறிகளை வழங்க ஆரம்பித்தார் அந்த பேச்சினை சரிவர கவனிக்காமல் அந்த கொடியவன் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான் துறவியின் பேச்சும் முடிந்தது அந்த கருத்து பகிர்தலின் போது கொடியவனின் செயலை நன்கு உற்றுநோக்கிய துறவி இறுதியில் அந்த கொடியவனை நேரில் சந்திக்க அவனுடைய சிறைக்கு சென்றார் அங்கு அந்த கொடியவனை சந்தித்து அவனுடன் கலந்துரையாடலை தொடர்ந்தார்.,
அந்த கொடியவனோ நான் பல தவறுகளை செய்தவன் தண்டனை என்ற பெயரில் இந்த ஒரு சூழ்நிலையை ஏற்க முடியவில்லை, மரண தண்டனையை விட கொடியதாக இருக்கிறது இந்த தண்டனை... பறந்து, விரிந்த மனதினை ஒற்றை அறையில் அடைத்துவிட்டார்கள் இதற்கு தூக்கு தண்டனையே உயரிய விடுதலை என்று புலம்பிக்கொண்டிருக்க அந்த துறவி மகனே உன் இடம் தவறல்ல, உன் சூழ்நிலை தவறல்ல, உன் காலம் தவறல்ல உன் எண்ணம் தான் தவறு... .
உனக்கான இந்த சிறை உன்னை தண்டிக்க என்பது ஒரு மூடர்களின் எண்ணம் இந்த சிறை உன் தனிமையில் உன் வாழ்க்கைக்கான உண்மையை உணர்வதற்கானதே தவிர உன்னை தண்டிக்க அல்ல... எப்போது உன் சூழ்நிலை சரியில்லை என்று சிந்திக்க ஆரம்பிக்கிறாயோ அப்போது உன் வாழ்க்கை உன் கட்டுப்பாட்டில் இல்லை... எந்த ஒரு சூழ்நிலையும் நம் வாழ்க்கை பயணத்தை தடுத்து நிறுத்தாது என்று எண்ணி வாழ்க்கையை பற்றி சிந்துக்கிறாயோ அப்போது தான் உன் வாழ்க்கை உன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அறிவுரை கூறினார்...
அறிவுரைகளால் சற்று தெளிந்த கொடியவன் தன் வாழ்க்கை பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறான் நாட்கள் ஓடின, ஆண்டுகள் நகர்ந்தன., கொடியவனின் செயலில் ஏதோ ஒரு மாற்றம் அவனது உடல் மற்றும் மனதளவில் ஒரு உண்மையான வாழ்க்கையை நேசிப்பவனாக பிறருக்கு உதவி செய்யும் முனைப்புடன் சிறையில் ஒரு நேர்மையானவனாக நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டான்...
ஒரு கொடியவனின் மனம் மாற்றத்தை எந்த சூழ்நிலையும் பாதிக்கவில்லை காரணம் துறவியின் சந்திப்பிற்கு பிறகு தன் வாழ்க்கையில் அன்றைய சூழ்நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார், சூழ்நிலை எப்போதும் நம் செயலுக்கு முட்டுக்கட்டை போடுவதில்லை நம் எண்ணம் தான் தவறாக இருக்கும் பட்சத்தில் நம் வாழ்க்கை பயணம் அத்தோடு நிறுத்தி வைக்கப்படுகிறது... நம் வாழ்க்கை மாற்றத்திற்கு சூழ்நிலை மாற்றம் எப்போதும் ஒரு தடையாக இருக்காது அந்த மாற்றத்தை நம் வாழ்க்கை பாதைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.., நிலையில்லா சூழ்நிலை காரணம் காட்டி நிலையான சந்தோச வாழ்க்கையை இழந்து விடாதீர்.,



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக