ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

Has happened, so what?What next?நடந்துவிட்டது,அதனால் என்ன? அடுத்தது என்ன??👍💪🏻🙏

 

நாளை என்னவென்று எண்ணுவதால் கவலை நிச்சயம் எல்லோருக்கும் உண்டு., மனிதனாக பிறந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்ற கனவும் கற்பனைகளும் நிச்சயம் உண்டு, அந்த கனவுகளால் மனதில் ஒரு வித பயம் நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சம், ஏமாற்றம் அதெல்லாம் நடப்பதற்கு முன்பே நம்மை ஆட்கொண்டு ஒவ்வொரு நாழிகையும் ஏதோ ஒரு வித பயத்தை மனதில் விதைத்து மகிழ்ச்சியில்லாத ஒரு சூழலை நம்மில் ஏற்படுத்தி  நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ முடியாமல் செய்கிறது . ஒரு சிலருக்கு இது புரிகிறது காரணம்,? என்ன வலியானாலும் தாங்கலாம், அப்படி நடக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சிப்போம் என்ற நம்பிக்கையில் போராட தயாரானவர்களுக்கு அந்த பயம் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. 


ஆனால் இன்று வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர்  மனதில் ஒரு வித பயம் அவர்களை ஆட்கொண்டு எதிர்காலத்திற்கான சிந்தனையிலே ஒரு மீளா பயத்தினை உருவாக்கி வைப்பது தான் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகம்...


ஒரு மனிதனின் விருப்பம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான கனவு, பிறருடைய கனவையும் சிந்தனைகளையும் ஒருவர் மீது திணிப்பதனால் சில பல எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 


ஒருவருடைய வாழ்க்கையில் அவருக்கான எதிர்காலம் என்ன என்பதை அவரை தவிர மற்றவர்கள் தீர்மானிப்பது தான் முந்தைய தலைமுறையின் போக்கு ஆனால் இன்று அந்த உரிமையும் முழுமையாக அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது என்றாலும் கல்வி போன்ற தேவைகளுக்கு பிள்ளைகளின் விருப்பம் தான் முன்வைக்கப்பட்டு அவர்களின் எண்ணம் போல அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டுக்கிறார்கள் பெற்றோர்கள், ஆனாலும் இந்த சுதந்திர உரிமை காலத்தில் மாணவர்களின் குறைகள் என்னவென்பதை விரைவில் அறிந்து கொள்ள முடிவதில்லை அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தாலும் அவர்கள் அந்த வாய்ப்பிற்கு உரியவர்களா? என்பதில் தான் அவர்களின் எதிர்கால வெற்றி அமைகிறது


மனிதன் உருவளவில் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கிறான். ஆனால் மனதளவில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை காரணம் மனதளவில் வலிமையாக சிலர், மனதளவில் இலகுவாக சிலர் என்று ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். இப்படி பட்ட வேற்றுமையால் ஒருவன் எந்த அளவிற்கு போட்டிகளை சமாளிக்க முடியும், ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளை ஏற்கப்போகிறான் என்பது அவரவர் மனதை பொறுத்து என்பது தான் உலவியல் உண்மை.

இன்றும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அரசியல் விளையாட்டாகத்தான் இவ்வுலகம் கருதுகிறது ஆனால் மனதளவில் அந்த மாணவர்களின் வலியினை எண்ணிப்பார்க்க இறைவனால் மட்டுமே முடியும் ஏன்???

என் வலியை உணர என்னால் மட்டுமே முடியும் பிறரால் முடியாது இது உடல் சார்ந்த வலியோ அல்லது வேதனையோ, பயமோ அல்ல மனம் சார்ந்த வேதனை மற்றும் பயம்.,

ஒரு செயலை எதிர்கொள்ளும் போது நான் அதற்கு சரியானவனா என்று யோசித்து கைவிட வேண்டும் என்பது சரியான பொருள் அல்ல நான் அந்த செயலுக்கு சரியானவன் அல்ல என்று தெரிந்ததும் அந்த செயலை செய்ய உடலளவிலும், மனதளவிலும் என்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழி.. உன்னால் முடியாது என்று சொல்ல பத்து பேர் இருந்தால் உன்னால் முடியும் என்று சொல்ல குறைந்தது ஒருவராவது இருப்பார்கள் என்பது இன்றைய உண்மை ஏனென்றால், நம்மைப்போல் போராடும் மனம் இவ்வுலகில் ஏராளம், ஆனாலும் நம் மாணவர்களின் எண்ணம் நாளைய நாள் என்னவாகுமோ என்று சிந்திக்க தொடங்குவதும், அவர்களின் மன வலிமையை சார்ந்து அவர்களின் முடிவுகள் இருக்கும் அதாவது மனதளவில் அவன் நாளை நடக்கும் போட்டியை சந்திக்க தயாராகிறானா?? அல்லது நாளை நடக்கும் போட்டியின் முடிவினை பற்றி சிந்திக்கிறானா??  தோற்றாலோ அல்லது வென்றாலோ நம் வாழ்க்கை எப்படி மாறும் என்று நேர் எதிர் எண்ணங்களை சிந்திக்கிறானா? என்பது அந்த மாணவனின் மனவலிமையை அடிப்படையாகக்கொண்டது.


அப்படிப்பட்ட சிந்தனைகள் அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல உலகில் இருக்கும் அத்தனை மனிதருக்கும் உண்டு 

இன்றும் சிலர் நமக்கு நாளை கொரோனா வந்துவிட்டால் இறந்து விடுவோமா என்ற பயத்திலே உடல் நிலை பாதிப்பில் உயிரை விடுவதும் ஒரு சில இடங்களில் நடக்கிறது.

நாளைய நாள் கனவு என்பது நம் முன்னேற்றத்திற்காகத்தானே தவிர நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதற்காக அல்ல என்பதை தயவு செய்து உணருங்கள்.

அந்த நேர்மறை எண்ணங்களுக்கு ஏற்ப நம்முடைய செயல்முறையில் நிச்சயம் மாற்றம் தேவை என்பதை உணருங்கள்.



மணவர்களின் வயது மதில்மேல் பூனைப்போல நிச்சயம் அனுபவ சிந்தனைகள் அவர்களுக்கென உருவாவது என்பது ஆயிரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ தான்., அதனால் நிச்சயம் மாணவர்களின் எண்ணங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழி நடத்தலை மையமாகக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது மனவியல் நிபுணர்களின் கருத்து... 





ஒவ்வொரு மாணவனின் மனதிலும் நற்சிந்தனைகளை விதைப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை... 

"உன்னால் முடியும் முயற்சி செய் என்று கைகொடுக்க வேண்டுமே தவிர.. உனக்கு இதை விட வேறு வழியில்லை இதில் வென்றால் மட்டுமே உன் வாழ்க்கை "என்ற ஒரு கருத்தை அவர்களுக்குள் விதைப்பதால் தான் இன்று மாணவர்களின் எண்ணம் ஒரு வித பயம் கலந்த எதிர்கால சிந்தனையாக வலுவிழந்து நிற்கிறது...



 வாய்ப்புகள் நிச்சயம் வரும் தோற்றால் அந்த வாய்ப்பு மீண்டும் வருவதற்குள் இப்போது தோற்றதற்கான காரணம் அறிந்த உன்னைத் தயார்படுத்திக்கொள் என்று ஒரு சிந்தனையை மாணவர்களின் மனதில் விதைத்தாலே போது அவர்களுக்கு நாளைய போட்டி பற்றிய பயம் அழிந்து நிச்சயம் வெல்வேன் என்ற நேர்மறை எண்ணம் பிறக்கும்...

இந்த சமுதாயம் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது எனது கருத்தல்ல இந்த தலைமுறைக்கு நம் சமுதாயம் கற்றுக்கொண்டுக்க வேண்டியது நிறைய இருக்கிறது அதை காலம் கடத்தாமல் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் போட்டிக்கு பயந்து தற்கொலைக்கு முயலும் எண்ணம் வராது...

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணங்களின் வெளிப்பாடே இந்த இழப்புகள் இனியும் இது போன்ற இழப்புகள் நேராமல் காக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் பொறுப்பு...



போட்டிகள் மீதான பயத்தை அழித்து 

வாய்ப்பிற்காக அவர்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விடாமுயற்சியை இளைஞர்கள் மனதிலில் விதைத்தால் போதும் நாளைய நாள் அவர்களுக்கு பிரகாசமாகும்…


நாளை தோற்றுவிடுவேனோ? என்ற பயம், தோற்றுவிட்டேன் என்ன செய்வது என்ற குழப்பம் தான் நம் முன்னேற்றத்திற்கான முதல் எதிரி, அந்த எதிரி வேறெங்கும் இல்லை நம் எண்ணங்களாக நமக்குள்ளேத்தான நடமாடிக்கொண்டிருக்கறது… அந்த எண்ணத்தை அழித்து நடந்து விட்டது அடுத்து என்ன செய்யலாம் என்று எப்போது சிந்திக்கிறோமோ அன்று தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக நம் எதிர்கால இலட்சியத்தை நோக்கி செல்லும்...👍💪🏻🌱💐🙏


"Has Happened, so what??

what next???"


2 கருத்துகள்:

  1. அருமைங்க மாப்ள... அருமையான கருத்துக்கள்...ஆனால் மாணவர்கள் மீது எந்தவித தவறுமில்லை... இந்த சூழலுக்கு முற்றிலும் பெற்றோர்களே காரணம்... பிள்ளைகளுக்கேற்ற கல்வியை தேர்ந்தெடுக்க உதவலாமே தவிர திணிக்கக்கூடாது....

    பதிலளிநீக்கு

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...