மனித பிறவி என்றால் மனதில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும் இந்த குழப்பம் பணம் , பதவி என்றெல்லாம் பாராது அனைத்து மனிதர்களுக்கும் ஒரு சில எதிர்பார்ப்புகள், கடமைகள், ஆசைகள் இப்படி அவர்களின் தேவையை வைத்து மனதில் குழப்பமானது எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த குழப்பம் "நம்மிடையே இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே என்பது பல முன்னோர்களின் கருத்து"
சரி நம் எண்ணத்திற்கும் குழப்பத்திற்கும் என்ன சம்பந்தம்?? அடுத்த கேள்வி நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும் கெட்டதை எண்ணினால் கெட்டது நடக்கும் இதில் என்ன குழப்பங்கள் வேண்டி இருக்கு??? அந்த எண்ணங்களின் நோக்கம் தான் மனதில் ஒரு விதமான குழப்பத்தை விதைப்பது...
பணம் இல்லாதவருக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்று முடிவெடிப்பதில் குழப்பம், பணம் இருப்பவர்கள் அந்த பணத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் குழப்பம்...
அடுத்தவர் வாழ்க்கை நன்றாக உள்ளது நம் வாழ்க்கை எப்போது அப்படி மாறும் என்ற குழப்பம்,
அதற்கு தகுந்த முடிவெடுப்பதில் குழப்பம்.,
படிக்கும் போது படிப்பதை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்,
அப்படி தெர்வு செய்துவிட்டால் முன்னேற்றம் வருமா என்ற குழப்பம்,
பக்கத்து வீட்டுகாரன் சந்தோசமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் முதல் இன்று நடக்கும் கிரிக்கெட்டில் யார் வெல்லப்போகிறார் என்ற குழப்பம் வரை ஆயரமாயிரம் இத்தனை குழப்பத்திலும் நாம் சரியான பாதையில் செல்ல சரியான நேரத்தில் முடிவெடுக்க வேண்டும்..
எதிர்கால நோக்கம் சரியாக இருக்க வேண்டும்... இதற்கான வழி தெரியாமல் தான் பலருடைய வாழ்க்கை தடம் மாறிச்செல்கிறது, ஒரு சிலரது வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் வாழ்வது கடமைக்காக என்பது போல செல்கிறது.
என்ன பிரச்சனை என்றே தெரியாது ஆனால் சோர்வாக இருப்பார்கள், மனதில் நாளை எப்படி இருக்கப்போகிறது என்ற குழப்பம், ஒரு சிந்தனை மனதில் தோன்றும்போது அது சரியாக இருக்கும் என்று எண்ணுவதை விட அது தவறாகி விடும் என்ற எதிர்மறை எண்ணம் ஆயிரம் மடங்கு மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்...அந்த எதிர்மறை எண்ணங்களால் உருவாகுவதே இந்த குழப்பம்... நம் வாழ்க்கையை நம்மைதவிர வேறு யாரும் வாழப்போவதில்லை., நம் வாழ்க்கையில் நம்மைத் தவிர வேறு யாரும் பொறுப்பேற்பதில்லை.., அருகில் இருப்பவனை ஒரு போதும் நம்பாதே!! அவர்களுல் சிலர் துரோகிகளாக வலம் வந்துகொண்டிருப்பார்கள்., ஆயிரம் நல்லவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் ஒரு துரோகியை கூட உடன் வைத்திருக்ககூடாது என்பதில் பல மடங்கு சிந்தித்து செயல்பட வேண்டும்., எப்படியோ நம் மனதின் குழப்பங்கள் நம் எண்ணங்களையும் அதற்கு ஏற்ப எடுக்கும்
முடிவையும் மையமாகக் கொண்டது., சூழ்நிலைகள் இந்த நிலைப்பட்டிற்கு நிச்சயம் எதிர்ப்பாகத் தானே இருக்கும், சூழ்நிலைக்கு ஏற்ப நம் எண்ணங்களை மாற்ற முயற்சிக்காமல் எண்ணங்களின் செயல்பாடுகளில் மாற்றங்களை கொடுத்தால் எண்ணங்களும் நிறைவேறும், நம் முடிவும் குழப்பம் இல்லாத நிலையான முடிவாக இருக்கும்...
ஒரு குரு மரத்தின் அடியில் அமர்ந்து தன் சீடர்களுக்கு வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொண்டிருந்தார் அப்போது அவருடைய சீடர் ஒருவர் எழுந்து குருவே எனக்கு ஒரு வினா எழுகிறது கேட்கறேன் என்றார் அதற்கு அந்த குரு சரி கேளுங்கள் என்று கூற சீடனோ நான் என் வாழ்வில் எல்லா நேரங்களிலும் சரியான முடிவை எடுக்கிறேனா? என்பதில் சந்தேகம் மற்றும் என் முடிவு பற்றிய குழப்பங்கள் எப்போதும் என்னை சரியான ஒரு நிலைப்பாட்டை விட்டு தள்ளிவைக்கிறது, மனம் எப்போது குழப்பமான நிலையிலே ஒரு நிம்மதி இல்லாத நிலையாக உணர்கிறேன் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றார். அதற்கு குரு நாம் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது அதன் நிலை இப்போது எந்தவித கலங்களும் இன்றி தெளிவாக இருக்கிறது அதன் அடியில் இருக்கும் மண்ணைக்கூட நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது இல்லையா இது தான் உங்கள் மனம் எப்போதும் தெளிவாக இருக்கும் என்பது உறுதியல்ல., அதனருகில் அவர் சென்று ஒரு பெரிய கல்லை தூக்கி உள்ளே வீசினார் உடனே அந்த குளத்தில் இருந்த நீர் முழுவதும் கலங்கி ஒரு தெளிவான நீரைக் காட்டிலும் நன்றாக கலங்கி இருந்தது அப்போது அந்த குரு கூறினார் இந்த குளத்தில் உள்ள கலங்கல்கள் எதையும் நான் நினைத்தாலோ அல்லது பிறர் நினைத்தாலோ தெளிவு படுத்த முடியாது அந்த குளத்தைத் தவிர அதேப்போலத் தான் உன் மனமும் தேவை இல்லாத ஏதோ ஒரு சில செயல்களால் கலங்கி குழப்பத்தோடு இருக்கும் மனதை தெளிவுபடுத்த உன்னைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்படு என்று கூறினார் அந்த குரு...
குழப்பங்கள் என்பது தேவையான விஷயத்தை பற்றி தேவை இல்லாத கோணத்தில் சிந்திப்பது தான் அதற்கு நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதில் இருக்கும் குழப்பத்திற்கும் தீர்வு சொல்ல முடியாது.. பிறரால் உன் மனம் குழப்பத்தை தீர்ப்பது என்பது கலங்கிய நீரை சுத்தம் செய்வது போல ஆழம் இறங்க இறங்க குழம்பிக் கொண்டே தான் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் பிறர் முடிவை நாடாமல் நம் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.,
"எண்ணம் போல் வாழ்க்கை"
எண்ணம் பற்றிய குழப்பம் கொள்ளாமல் எண்ணிய நல்லனவற்றை நல்ல முறையிலே செயல்படுத்தினால் வாழ்க்கை நல் வழியில் செல்லும்...




Super
பதிலளிநீக்குNice nd true
பதிலளிநீக்குNice bro..
பதிலளிநீக்கு