வெள்ளி, 4 டிசம்பர், 2020

திறமை வளர வளர வாய்ப்புகளும் நம்மை நெருங்கும்... காத்திருக்க காத்திருக்க உழைப்பும் பல மடங்காகும்👍💪🏻🏏T நடராசன்

 

"வாய்ப்புகளால் உணர்ந்த திறமை" 

"திறமையால் கிடைத்த அதிர்ஷ்டம்"

இது இன்றைய வாழ்க்கையில் நிகழ்வது சாத்தியமா? என்றால் சாத்தியமற்ற ஒரு நிலைதான் காரணம் போட்டிகள்., போட்டிகள் இல்லாத இடம் இல்லை கல்வி, விளையாட்டு, தொழில், என எங்கு பார்த்தாலும் போட்டிகளால் மட்டுமே உண்மையான போராளியை காண முடிகிறது… ஓரிரு இடங்களுக்கு ஆயிரம் பேர் போராடுவார்கள் அந்த ஆயிரம் பேரின் போராட்டத்தில் எவனோ ஒருவனின் செயல்பாடு அந்த வெற்றிக்கான இடத்தை பிடிக்கும் அப்படி பட்டவர்கள் தான் உலகில் சாதனை என்று வெளியுலகிற்கு காட்டப்படுகிறார்கள் ஆனால் அந்த இடத்திற்காக போராடிய மீதம் பேரின் போராட்டம் யாருக்கும் தெரிவதில்லை காரணம் யாரும் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை… வெற்றி பெற்றவன் மட்டுமே போராடுகிறான் என்றால் உண்மையில் இல்லை அவனோடு போட்டியிட்ட தோல்வியடைந்த அத்தனை பேரும் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. அவரகளின் நிலை மட்டுமே வேறு வெற்றி தோல்வி… தோற்றவனுக்கும் அதே கனவுகள் தான் வென்றவனுக்கும் அதே கனவுகள் தான்.. அத்தனை பேரும் தன்னுடைய கனவோடு போட்டிகளை தேடித் தேடி என்றாவது வெல்வேன் என்று நம்பிக்கையில் போராடுகிறார்கள் உண்மையில் அந்த போராளிகளும் போற்றப்பட வேண்டியவர்கள் தான் காரணம் இருக்கும் ஒரு வாய்ப்பிற்காக ஆயிரம் பேரின் கனவும் போராடுகிறது… ஏதோ ஒருவரின் கனவு மட்டும்தான் நனவாகிறது… சரி இன்றைய உலகில் அதிகம் பேசப்படும் நபர்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அந்த ஆயிரம் பேருடன் போராடி தன்னை முன்னிலைப்படுத்தி வெற்றி கொண்டு தன் அடைந்த கனவோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்… அப்படிப்பட்ட ஒரு உண்மை போராளியின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரம் தான் இது தங்கராசு நடராசன்… சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய பின்புலம் கொண்டவர் இல்லை., இல்லை என்றாலும் போராடி பெற்றுக்கொள்ளும் ஒரு உழைப்பாளி வர்கத்தை சார்ந்தவர்… போராட்டங்கள் ஆயிரம், இழப்புகள் ஆயிரம், நிராகரிப்புகள் ஆயிரம், தேடிய வாய்ப்புகள் எண்ணிலடங்காதவை…அப்படி தேடித் தேடி ஓடிய ஒரு சில இடங்களில் அவரின் செயல்பாடுகள் தான் அவரின் உயர்விற்கு காரணம்.


       வாய்ப்புகள் கிடைப்பது அரிது அந்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது என்பது மிக மிக அரிது அப்படிப்பட்ட வாய்ப்பினை பயன்படுத்தி இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு தமிழ் பேசும் இளைஞன் இன்றைய கிரிக்கெட் உலகம் எங்கும் உச்சரிக்கும் ஒரு பெயர் தான் T நடராசன்… ஆயிரம் பேரில் ஒருவனாய் அமர்ந்து வாய்ப்பிற்காக காத்திருந்தான் இன்று அந்த ஆயிரம் பேரையும் தாண்டி தனி ஒருவனாய் உயர்ந்திருக்கிறான் என்றால் அது மிகையாகாது.. தமிழகத்தில் ஒரு எளிய தமிழ் வழி குடும்பத்தில் குழந்தையாய் பிறந்தவன் பள்ளி படிப்பு மற்றும் கல்லூரிகளில் தன் கனவை செதுக்க கிரிக்கெட் தான் உலகம் என்று உலகிற்கு சொன்னாலும் அதை உலகம் ஏற்கவில்லை




ஏன் என்றால்

" வெற்றி பெறுவேன் என்று சொன்னால் உலகம் நம்பாது அதே வெற்றி பெற்றவன் சொன்னால் உலகம் நிச்சயம் ஏற்கும்" என்பது எல்லோர் வாழ்விலும் இருக்கும் நியதி அப்படித்தான் நடராசனின் கனவும் பெரும்பாலோரிடத்தில் ஏற்கப்படவில்லை… பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த ஆட்டக்காரனாக வந்தவனுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் அதிலும் கிடைத்த முதல் வாய்ப்பில் அவரது பந்துவீச்சில் பிழை இருப்பதாக தடை செய்யப்பட்டார் ஓராண்டு உழைப்பினால் தன் பந்துவீச்சு முறையை மாற்றி மீண்டும் களம் கண்டார் நடராசன்…


அப்படி தன் உழைப்பால் முதலில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் அது தான் இந்த உலகம் ஒரு உண்மை உழைப்பாளியை ஒரு வெற்றியாளனை கண்டெடுத்த களம்… அந்த போட்டி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதால் IPL தொடரில் 2017 ல் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்., அப்போது வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் செயல்பாடுகள் சரிவர அமையவில்லை ஒரு வருடத்தில் அணி மாறினார் நடராசன்., மீண்டும் அடுத்த ஆண்டு 2018ல் அணி மாறினார் ஆனால் அவரை விட உலகத்தரம் வாய்ந்தவர்கள் அணியில் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு என்பது எட்டாகனியாகவே இருந்தது.. அந்த வாய்ப்பு எனும் கனியை பிடிக்க வேண்டும் என்று காத்திருந்த காலம் இரண்டு ஆண்டுகள் அந்த இரண்டு ஆண்டுகளில் இவரின் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டது இவரது அணி இறுதியில் 2020 லாவது வாய்ப்பு கைசேருமா என்று காத்திருக்க உலகை உலுக்கிய கொரோனாவால் தொடர் தள்ளிப்போனது.. அது இவருக்கு நல்ல ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது இந்த ஆண்டு தொடர் தொடங்கிய நாள் முதல் நடராசன் இடம் பெற்ற அணியின் அனுபவ வீரர்கள் சிலரின் உடல் குறைபாட்டால் நீங்கிச் செல்ல அடுத்த இடத்தில் வாய்ப்பு நடராசனை நோக்கி வந்தது.. திறமை இருக்கும் இடத்தை நோக்கி வாய்ப்பும் செல்லுமாம் என்று நடராசனை நோக்கி சென்றது வாய்ப்பு… யாருக்கும் தெரியவில்லை அனுபவ வீரர்கள் இருக்கும் இடத்தில் ஒரு புது வீரனை களம் இறக்குவது சாத்தியமாகுமா என்று ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி அவரின் செயல்பாடுகள் இருந்தது… அப்படி ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் நடராசன் யார் இல்லை என்றால் என்ன நடராசன் இருக்கிறான் இறுதியில் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை கொடுத்தார் நடராசன்… எத்தனையோ மூத்த தலைகள் கிரிக்கெட்டில் அங்கம் கொண்டாலும் நடராசனின் செயல் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களையும் மெய்சிலிர்க்கச் செய்தது…


இறுதியில் இவரின் ஆட்டம் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களை சிந்திக்க வைத்தது உடனடியாக நேரடி ஆட்டக்காரராக இறக்க முடியாமல் வலைப்பயிற்சி வீரனாக அணியில் ஒருவராய் நுழைந்தார்… வாய்ப்பு கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ எப்படியோ தேசிய அணியில் இடம் பெற்றுவிட்டார் என்ற மகிழ்ச்சியில் திளைக்க அடுத்தடுத்த மகிழ்ச்சி தமிழ் மக்களை சந்தோசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது இறுதியில் உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு எதிரே நடக்கும் போட்டியில் 11ல் ஒருவராய் இடம் கொண்டார் உலக மக்களின் அத்தனை ஆதரவிற்கும் இடையே தான் சேர்க்கப்பட்ட காரணத்தை உணர்ந்து அத்தனை எதிர்பார்ப்புகளையும் உண்மையாக்கினார்… திறமை வளர வளர வாய்ப்பு நம்மை நெறுங்குகிறது என்பது நடராசனின் வாழ்க்கையில் புரிகிறது..

நம்மில் ஒருவராய் வாழ்ந்த ஒரு மனிதன் நம் கண் முன்னே தான் நினைத்த இடத்தை அடைந்தால் இருக்கும் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லைகள் இல்லை அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தான் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது நம் தமிழகம்… வாழ்க தமிழ் 

வளர்க தாயகம் 

வெல்க நம் இலட்சியம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...