இயற்கையும், அறிவியல் கோட்பாடுகளும் மனித வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகித்துக்கொண்டுதான் இருக்கிறது, மனித வளர்ச்சி அதற்கான அர்த்தம் "கஷ்டப்பட்டு செய்யக்கூடிய ஒரு செயலை எந்த அளவிற்கு எளிய முறையில் செய்ய முடியும் என்பதற்கான வழிமுறையே வளர்ச்சி/முன்னேற்றம்" இன்றைய நிலைக்கு இந்த வார்த்தைகள் நிச்சயம் பொருந்தும்.
மனித சமுதாயம் இந்த 20ஆம் நூற்றாண்டில் அடைந்த வளர்ச்சி நூற்றாண்டும் வளர்ச்சியில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஓரளவு நல்ல முன்னேற்றம்தான், வளர்ச்சியின் மாற்றங்களுக்கு மக்களின் ஆதரவும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் விரைவில் வந்துவிடுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
19ஆம் நூற்றாண்டை ஒப்பிடும்போது 20ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது, வளர்ச்சியடையாத துறை என்பது இல்லை நம் தாயகத்தில் குறிப்பாக கல்வியில் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்று வளர்ச்சியின் முகம் தான் இப்படிபட்ட வளர்ச்சியில் நம் நாடு நிச்சயம் 2020ல் வல்லரசாகிவிடும் என்று எதிர்பார்த்திருப்போம் நிச்சயம்.
மனித எதிர்பார்ப்புகள் எல்லாம் அளவு கடந்ததாகவல்லவா இருக்கும் சரி அது இருக்கட்டும் வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் அந்த வளர்ச்சியினால் நாம் பல கண்ணுக்குத் தெரியாத பகைவர்களை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்பது இன்று தான் எல்லாருக்கும் புரிந்திருக்கும்... எதிரி என்பவன் கண் முன்னே நேருக்கு நேர் நின்று போரிடுபவன் ஆனால் வளர்ச்சியால் வளர்ந்த பகைவன் எங்கே இருக்கிறான் என்று இன்றளவும் தெரியவில்லை.
அப்படி பட்ட எதிரி யார்??? எங்கே இருக்கிறான்??? யோசிக்கிறோமா???
என்றாவது யோசிப்போம் அந்த எதிரி வேறெங்கும் இல்லை நம்முள்ளே தான் பயணித்துக்கொண்டே இருக்கிறான் அவன்
அறிவியல் கோட்பாடு:
"ஒரு வளர்ச்சி இருந்தால் அந்த வளர்ச்சிக்கு இணையான ஒரு எதிர்ப்பு நிச்சயம் இருக்கும்" ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பது போல எத்தனை எதிர் வினைகள் வந்தாலும் வளர்ச்சியின் பாதையில் மிகவும் அழுத்தமாக இருக்கும் இந்த சமுதாயம்
குறிப்பாக அன்று நடந்தும், மிதிவண்டியிலும் தனது அன்றாட தேவைக்கும் சென்ற மக்கள் இன்று அந்த நடையையும், மிதிவண்டியையும் உடல் நல மேம்பாட்டிற்காக உபயோகிக்கிறார்கள்
வளர்ச்சிக்கு முன் மனிதனின் வாழ்நாள் 90 முதல் 100ஐ கடந்தும் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்று 25 வயதில் மாரடைப்பு வருகிறது - உணவு வளர்ச்சி
அன்று படிப்பாளர்கள் எல்லோரும் தன் அறிவை பிறருக்கு பகிர பாடுபட்டார்கள் இன்று அடுத்தவரிடம் இருக்கும் அறிவை சம்பாத்தியத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம் - அறிவு வளர்ச்சி
அன்று வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்மணியும் மருத்துவம் பார்ப்பார்கள் மருத்துவமனை இல்லாத நாட்களில் ஏது பிள்ளை பெற அறுவைசிகிச்சை? ஆனால் இன்று அறுவை சிகிச்சை இன்றி பிள்ளை பிறந்தால் உலக அதிசயம் - மருத்துவ வளர்ச்சி
அன்று நேரடி சந்திப்பு மட்டுமே இருந்தது அதனால் எப்போது வேண்டுமானாலும் வேண்டியவர்களை நேரில் சென்று பார்க்க முடிந்தது ஆனால் இன்று ஒரே வீட்டில் இருந்து கொண்டு அலைப்பேசியில் video call மூலம் பேசும் அவலம் எங்கே பாசம்???- தொழில் நுட்ப வளர்ச்சி
இயற்கையால் மனிதன் வாழ்ந்த நாட்கள் கடந்து மனிதனால் இயற்கையை காக்க வேண்டிய நிலை - அரசியல் வளர்ச்சி
உணவே மருந்து 90களில்
மருந்து இல்லாத உணவே இல்லை 20களில் - உணவுத்துறை முன்னேற்றம்
தீய பழக்கமாகக் கூட்டாதென தவிர்க்கப்போராடிய சமூக வலைதளங்கள் இன்று கல்வி கற்கும் உபகரணங்கள் - கல்வி வளர்ச்சி
மண் வாசனையோடு உணவுண்ட காலம் போய் இன்று பிளாஸ்டிக் அரிசி சாப்பிடும் அவலம் - விவசாய வளர்ச்சி
இப்படி எத்தனை வளர்ச்சி வந்தாலும் பின்னாளில் நம் வாழ்நாள் வளராது என்று தெரியாமல் பிறர் நம்மை நம் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என பிறகுக்காக வாழ மக்கள் நாம் - சுயநல வளர்ச்சி
வளர்ச்சி என்பது தன் நிலையில் வளர்ச்சி காண்பிப்பது தவறல்ல தேவைகளை அதிகரிப்பதுதான் வளர்ச்சி என்ற மூடத்தனத்தால் தன் தலைமுறை எதிர்காலம் கேள்விக்குறியாகும் அளவிற்கு வளர்ச்சியை தேடிக்கொடுத்திருக்கும் தலைமுறை நம் தலைமுறை
இந்த ஒற்றை கிருமி உலகம் முழுவதும் ஊரடங்கை ஏற்படுத்தினாலும் சாப்பிட அரிசியை, காய்கறிகளை தேட வைத்திருப்பது நம் முந்தைய வளர்ச்சியில் தேர்ச்சிபெறாதது தான்
இருப்பது ஒரு வாழ்க்கை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறல்ல வளர்ச்சியினால் நம் வாழ்க்கை முறை மாறலாம் ஆனால் வாழ்நாள் மாறா வண்ணம் தன் அடுத்த தலைமுறை வளர்ச்சியால் நம்மை போல் பாதிக்கக்கூடாத வண்ணம் வளர்ச்சியை பின்பற்றுவோம்
என்று மாறாதது முற்கால மகத்துவம் எத்தனை தலை முறை வந்தாலும் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்து வாழ்க்கையை பெருமைபட பேச வைத்த நிலைப்பாடு நம் தலைமுறையை பற்றி யோசிக்க கூட முடியாத வளர்ச்சியை நாம் கொடுத்திருக்கிறோம்
இனியேனும் முற்கால கொள்கைகளை பின்பற்றி பாரம்பரியம் போற்றி நம் நிலையில் முன்னேற்றம் காண முயற்சிப்போம் 🌱😷


Good
பதிலளிநீக்கு