2020 புதுவருடம் தாயகத்தில் முகச்சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது ஒவ்வொரு சாதாரண மனிதன் முதல் சாதனை மனிதன் வரையிலும் 2020ல் நான் ஏதாவது ஒரு புதுஇலக்கை அடைய வேண்டும் என்று கனவோடு ஆரம்பித்த நாள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இந்த ஆண்டு வாழ்க்கை வாழ்வோமா இல்லை சாவோமா என்பது கேள்விக்குறியாகும் என்று.
கொரோனா சீன தேசத்தில் Dec 19 ல் ஆரம்பித்த போது பக்கத்து தேசம் தான் நமக்கெல்லாம் வராது என்ற தைரியம், அலட்சியமும் கூட ஆனால் கொரோனா அப்படீனா என்ன??? அதற்கு அர்த்தம் புரிவதற்குள் விமானம் மூலம் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் சென்றடைந்ததது. முதலில் அடுத்த நாட்டில் தான் உள்ளது என் நாட்டிற்கு வராது என்று தெனாவட்டாக காலரை தூக்கிக்கொண்டவர்கள் எல்லாம் இப்போது முகத்திம் முகமூடி போட்டு தோலில் முகமூடி தடம் பதியும் அளவிற்கு அடங்கிவிட்டார்கள்.
கொரோனா தொற்று பரவல் அதிகமாக ஆரம்பிக்க நம்முடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் எல்லாம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சிலரின் அலட்சியம் தான் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்தது பிறகு கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது போல தகவல்கள் பரப்பிய அரசு ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்தது ஊரடங்கு தளர்த்த ஆரம்பித்த நாள் முதல் இந்தியா முழுவதும் பரவல் அதிகரிக்க ஆரம்பித்தது இதனால் மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு ஊரடங்கு தளர்த்த ஆரம்பித்து ஒரு சில மாத காலம் மிகப்பெரிய அளவில் கொரோனா தொற்று பரவியிருப்பது புள்ளி விவரங்கள் காண்பித்தாலும் இப்படி பட்ட பரவல் அதிகமான சூழலில் ஊடங்கை தளர்த்த காரணம் என்ன?? சாதாரண ஒரே நிலைப்பாடுதான் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ளது என மக்கள் உணர ஆரம்பித்தனர் இதற்கிடையில் மாவட்டம் மற்றும் மண்டலம் என பல பிரிவுகளில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முயன்றது அரசு ஆனால் அரசின் ஒரு சில உண்மை நிலவரங்கள் அரசுக்கே தெரியாமல் வெளிவர மக்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் இப்படி எல்லா விதத்திலும் சாதாரண வியாபாரிகள் முதல் மிடில்கிளாஸ் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள்
கல்வி முறையில் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் மதிப்பெண் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை, குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியின் போது கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதளங்கள் தவிர்க்கப்பாடுபட்ட காலம் சென்று இன்று Online மூலம் மட்டுமே கல்வி கற்கப்படும் நிலை நம் தாயகத்தில் காரணம் கொரோனா பரவல், அப்படி என்ன செய்கிறது இந்த கொரோனா உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவு இருந்தால் மட்டுமே மீண்டும் பழைய உடல் நிலைக்கு திரும்ப முடியும் என்ற ஒரு நிலை, இல்லை என்றால் ஒன்று இறப்பு அல்லது வாழ்நாள் முழுவதும் உடல் நிலை குறைபாடு எப்படி தப்பிப்பது இதிலிருந்து என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது நம் தலைமுறை இந்த ஆண்டு தான் நம் நாடு வல்லரசாகும் என்ற கனவுகளை விதைத்தார் நம் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் ஆனால் இன்றைய நிலை??? நம் நாட்டையும் மக்களையும் காப்பதே மிகப்பெரிய ஒரு சவாலான நிலை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களின் இறப்பு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது... நமது இந்த தலைமுறைதான் இந்த அளவிற்கான ஒரு சவாலை எதிர் நோக்கியுள்ளது... இன்றைய தலைமுறை வாழ்நாள் சராசரி 60-65 வயது இதற்கு முன் தலைமுறை 80-100 இன்றைய அதிசயங்கள் பல உண்டு 90களின் ஆரம்பத்தில் பிறந்து இன்றும் 100 வயதை கடந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் உடல்நலம் பெற்று திரும்பிய நபர்களும் உண்டு இதே தலைமுறையில் பிறந்து ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறுதியில் இறந்த 23 வயது மனிதர்களும் இங்கே வாழ்ந்தருக்கிறார்கள் , காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இந்த கொரோனாவால் 100வயதை கடந்த நபருக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி 23 வயதடைந்த இளம் வயதினருக்கு இல்லை காரணம் வளர்ச்சியால் உண்டான உணவு பொருள் வகைகள்
"உணவே மருந்து அது அன்றைய சொல்
மருந்தே உணவு இது இன்றைய சொல்"
பழைய கால உணவுப் பொருட்களில் ஒவ்வொன்றிலும் இருக்கும் மருத்துவம் அறியாமல் பிறருக்காக வாழ்ந்து பிறர் பெருமை பேச உணவு உண்டதால்தான்... பாரம்பரிய உணவுப்பொருட்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்ததே இன்றைய இழப்புகளுக்கு காரணம்... பாரம்பரிய உணவுகளின் உண்மை சக்தி இன்றைய கொரோனாவில் தான் தெரிகிறது.
மேலும் இந்த ஆண்டு நம் பிள்ளைகளின் கல்விக்கு கண் திறக்கும் நாள் எப்போது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. கொரோனாவோடு வாழப்பழக வேண்டும் இனி எல்லாம் மக்களின் கையில் என்று அரசால் கைவிடப்பட்ட போதே தெரிய வேண்டும் நாம் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளோம் என்று... அன்றாட தேவைக்கான அத்தியாவசியங்களை கூட பெறமுடியாத நிலையில் பல்வேறு குடும்பங்கள் இருந்துள்ளது என்பது தான் கொரோனாவின் அவதாரம்
எது எப்படியோ இனி கொரோனா இல்லாமல் வாழ்வது என்பது அதிசய உலகம் தான்
அதை உருவாக்க கடவுளாலும் முடியாது, அரசாங்கத்தாலும் முடியாது
ஏன்??? என்ற கேள்வியா??? இதை படிப்பவர்கள் எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறோம்???
எத்தனை பேர் முகக்கவசம் அணிகிறோம்???
எத்தனை பேர் கிருமி நாசினி பயன்படுத்துகிறோம்???
2021 ஆம் ஆண்டில் நாம் அடி எடுத்து வைக்கும் போது புது ஒரு வருடம் நிம்மதியான ஒரு ஆண்டாக அமைய வேண்டும் என்றால் மாற வேண்டியது நாம் தான் கடவுளோ அல்லது அரசாங்கமோ இல்லை பொருளாதாரம் வளர்த்திய பிறகு உயிரை காப்பாற்ற முடியாது ஆனால் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் போது பாதுகாப்பான செயல்பாடுகளால் நிச்சயம் நம் சுற்றாரையும் நம்மையும் தொற்றிலிருந்து காக்க முடியும்... 2020 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டாக மீண்டும் மீண்டு வர வேண்டும்
அதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும்
அதற்கு நம்மை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
நம்முடைய சுற்றுபுறத்தையும் மனிதர்களையும் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும்
பழைய உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்
2020 ஆம் ஆண்டு இன்றும் நம் கையில் தான் இருக்கறது
அதை கைவிடுவதும் 2021 சிறப்பாக தொடங்குவதும் மக்களாகிய நம் செயலில் தான் இருக்கிறது
கொரோனாவை எதிர்த்து போராட வேண்டாம் அதனிடமிருந்து தள்ளி இருந்தாலே போதும் நாம் தப்பி விடலாம்
கொரோனாவிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட வேண்டாம் தனியாக நின்றாலே போதும் நம்மை நெருங்காது
ஆயிரம் வழிகள் எல்லாம் அல்ல இதற்கு ஒரு சில வழிமுறைகள் தான் அதை கடைபிடித்தாலே போது கொரோனாவை வெல்லும் நம் கனவு நனவாகும்
2020 வல்லரசு கனவு சென்று இன்று 2020 எப்படி உயிரோடு இருக்கலாம் என்ற கனவு தான் வருகிறது
காலங்கள் மாறலாம் நம் எண்ணம் மாற கூடாது
கொரோனாவை எதிர்கொண்டு வெல்லும் கையோடு நம் ஐயாவின் கனவான நம் தாயகத்தையும் வல்லரசாக்கும் கனவை மீண்டும் தொடருவோம் தனித்து ஒன்றுபட்டு செயல்படுவோம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக