சூழ்நிலை வேறு காலம் வேறு
காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகள் மாறும் ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப காலம் என்றும் மாறாது.
புரிதல் இருந்தால் என்றும் சூழ்நிலைக்காக காலத்தை கடத்திக்கொண்டிருக்க மாட்டோம்
"காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது"
காலம் ஓடிக்கொண்டு மட்டுமே இருக்கும் காலத்தின் ஓட்டம் குறையாது மாறாது/ குறைக்கவும் முடியாது மாற்றவும் முடியாது,
நல்ல காலம் வரட்டும் அந்த வேலையை நாம் முடித்து சாதிப்போம் என்று காத்திருப்பதால் வெல்வது காலம் மட்டுமே நாமல்ல.
"காலம் வென்றவர்கள் ஏராளம் உண்டு ஆனால் காலத்தை வென்றவர்கள் என்று யாரும் இல்லை".
இவ்வுலகம்
காலத்திற்கு முன் செல்ல முடியாது ,பின் செல்ல அனுமதி தேவை இல்லை
"காலத்தோடு ஒன்றி எப்போது வாழ்க்கையை நடத்துகிறோமோ அப்போது தான் காலமும் நம் எண்ணமும், செயல்களும் சீரான வேகத்தில் செல்கிறது என்று அர்த்தம்".
காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணியும் நம் வாழ்க்கை பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது
காலம் நம்மோடு பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றை நமக்கு புகட்டிக்கொண்டே இருக்கும் புரிந்து கொண்டால் மட்டுமே நாம் காலத்தோடு காலத்திற்கு ஏற்றவாறு பயணிக்க முடியும், காலம் ஒருபோது மனிதர்களுக்காகவும் நிற்பதில்லை.
வாழ்க்கை பயணம் என்பது ஒரே சீரான வேகத்தில் காலத்திற்கு இணையாக செல்ல வேண்டுமே தவிர நேற்றைய வாழ்க்கையை இன்று வாழக்கூடாது, இன்றைய வாழ்க்கையை நாள் வாழவும் கூடாது.
வாழ்க்கை பயணத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள் நம்மோடு பயணிக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்தவராயின் வாழ்க்கை ஓடுகிறது என்ற பயத்தில் தன் வாழ்நாளை பயனுள்ளதாக முடிப்பர்
சில தோல்விகள் நமக்கு அனுபவத்தை கொடுக்கும், தோல்விகள் எல்லாமே நம் அனுபவம்தான் என்று புரியும் வரை காரியங்கள் வெற்றியாக முடிவதில்லை
தோல்விகளால் காலம் கடக்கிறது என்று சொல்பவர்களும் உண்டு
காலம் சரியில்லை அதனால் தான் நான் தோல்வியடைந்தேன் என்று கூறுபவர்களும் உண்டு ஆனால் காலம் ஒருபோது நம்முடைய செயலில் நுழைவதில்லை, "காலம் சரியாக இருந்திருந்தால் நான் வென்றிருப்பேன் என்று கூறுபவர்களுக்கு உங்கள் தோல்வி காலத்தால் ஆனது அல்ல இந்த காலத்திற்கு ஏற்ப உங்களின் செயல்பாடுகள் மற்றும் சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள்வில்லை என்றுதான் அர்த்தம்" ஆனால் காலத்தின் மேல் குறை கூறி என்ன பயன்?
இப்புவியில் காலம் என்பது நிலையில்லாத ஓட்டத்தில் நம்மை கடந்து கொண்டுதான் நீ எப்படி வாழ்ந்தால் என்ன உன் காலம் மட்டும் நகர்ந்துகொண்டே இருக்கும இந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப நம் செயல்வடிவங்களை மாற்றி நாம் நினைத்ததை முடிக்க வேண்டியது நம்முடைய கடமை.
கடந்து சென்ற பிறகு சென்றுவிட்டதென சிந்தித்து பயனில்லை
கவலை கொண்டு பயனில்லை
வாய்ப்புகள் என்பது வரும் அதுவரை அமர்ந்திருப்போம்
சூழ்நிலை என்பது வரும் அதுவரை அமைதி காப்போம்
இவைகள் எல்லாம் வாழ்க்கையின் ஓட்டத்தை பற்றி தெரியாமல் சொல்லும் வார்த்தைகள்
உங்களுக்காக ஒரு வாய்ப்பும்,சூழ்நிலையும் தானாக உருவாகி வராது
இன்று சற்று கடினமான காலம் நளை மாறும் என்பது நம்பிக்கை ஆனால் இன்றைய காலத்தை விட நாளைய காலம் மிகவும் கடனமாக வந்தால் என்ன செய்வது???
எதிர்மறை எண்ணங்கள் ஒரு சில நேரங்களில் நல்ல முடிவைத்தரும் அதுவும் காலத்தின் ஓட்டத்தை பொறுத்தது.
காலம் ஒருபோதும் நிற்காது
காலத்திற்காக நாம் நிற்பது பயனற்ற ஒரு மூடத்தனம்
சிந்திப்போம்
காலத்திற்கு ஏற்ப நம் சிந்தனைகளை செயல்படுத்துவோம்
வாய்ப்புகளையும், சூழ்நிலையையும் காலத்திற்கு ஏற்ப உருவாக்குவோம்
எண்ணம் காலத்திற்கு ஏற்ப சிந்தித்தால் நாமும் நம் வாழ்க்கையும் காலத்திற்கு இணையாகத்தான் செல்கிறோம் என்று அர்த்தம்
நம்பிக்கையோடு காலத்தை பயன்படுத்தி காலத்தோடு நம் கனவுகளையும் வெல்வோம்👍💪🏻

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக