புதன், 5 ஆகஸ்ட், 2020

இல்லாமையை விட இயலாமையே முதல் தடை!!! - பூரண சுந்தரி (286ஆவது இடம் 2019 IAS தேர்வு)

















இல்லை என்பது தடையுமல்ல! குறையுமல்ல!
எல்லாம் இருந்து சாதித்தவனுக்கு மத்தியில் இல்லாததை தடையாகவோ! அல்லது குறையாகவோ !எண்ணாமல் இருப்பதை வைத்து தேவையானதை வளர்த்துக்கொண்டு சாதிப்பவர்கள் இவ்வுலகில் உண்மையான எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள். 

நம்மிடம் இல்லாத ஒன்று நம் செயலுக்கு தடையாகுமா???  ஒருசில மூடர்களின் எண்ணம் என்னிடம் குறையிருக்கிறது நான் நினைத்ததை என்னால் அடைய முடியவில்லை என் எண்ணம் நிறைவேறவில்லை இந்த எதிர்மறை எண்ணம்தான் தான் அவர்களது வாழ்க்கையின் அர்த்தமில்லாத முடிவிற்கு காரணம்.

உடல் ஊனம் என்பது குறையாக பார்க்கபடும் இந்த காலகட்டத்தில் எத்தனையோ உடல் (குறைகளை)மாற்றங்களை கொண்டவர்கள் தங்களின் இந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்திற்காக அதாவது தேவையே இல்லாத ஒரு காரணத்தை சுமத்தி தன் எதிர்கால லட்சியத்தை கனவோடு கரைப்பவர்கள் அல்ல,
என்னிடம் குறை இல்லை இதை குறையாக நினைக்கும் மனதில் தான் குறை இருக்கிறது என்பதை ஆணித்தரமாக தன்னுடைய உழைப்பால் தன் லட்சியத்தை அடைந்து காட்டுகிறார்கள் பலர்.
 
தன்னுடைய 5 வயது முதல் நரம்பு பிரச்சனையால் கண் பார்வையை இழந்து தன்னுடைய லட்சியங்கள் எல்லாவற்றையும் ஒன்றொன்றாக அடைந்து இறுதியில் எல்லா வளமும் உடையவர்கள் கூட எட்ட முடியாத ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறார் ஒரு கண் பார்வையற்ற பெண். கண்பார்வை கோளாறு தன் பார்வை முழுவதுமாக இழந்த 5 வயது முதல் பள்ளி படிப்பில் எல்லாம் முதல் மாணவியாக தேர்வு பெற்று இறுதியில் தன் வாழ்நாள் கனவான IAS தேர்வில் இந்திய அளவில் 286 ஆவது இடம் பெற்ற தமிழ் பெண் பூரண சுந்தரி.

பொதுவாக நாம் சாதிக்க தடைகள் என்றால் நிறைய உண்டு பணம், பலம், ஆதரவு, சூழ்நிலை, காலம், அலட்சியம் இப்படி பல காரணங்களாக நம் தோல்விக்கு சுட்டிக்காட்ட முயற்சிப்போம் அந்த தடைகள் அல்லது குறைகள் எல்லாம் நம்மால் மாற்ற முடியாது என்ற ஒரு மூட நம்பிக்கை காரணமாக தன் முயற்சிக்கென ஒரு தடையாக அமைகிறது இந்த குறைகள்.

பூரண சுந்தரியின் வெற்றிக்கு முக்கிய முதல் காரணம் அவருடைய அந்த பார்வை குறைபாடுதான் அவரை இந்த அளவிற்கு முன்னேறி தன் கனவை நனவாக்கியுள்ளது. இந்த குறைபாடு இல்லை என்றால் இப்படி ஒரு சாதனையை அந்த பெண் நிகழ்த்தி இருக்க மாட்டார் போலும். குறையில்லாத மனிதர்களே சாதிக்க முடியாத இந்த போட்டிகள் நிறைந்த உலகில் பார்வை குறைபாடு உடைய ஒரு பெண் தன் படிப்பிற்கு நிச்சயம் ஒரு மூலதனமாக இருந்த கண் பார்வை கோளாறு படிப்பை எந்த அளவிற்கு பாதித்தாலும் இந்த தடையை உடைத்தெரிந்து லட்சியத்தை அடைந்தவர்தான் இந்த பூரண சுந்தரி.

எண்ணம் சரியான வழியில் இருந்தால் நம் செயலும் சரியானதாகத்தான் இருக்கும். பூரண சுந்தரியின் மனமும் தன் லட்சியத்தின் மேல் மட்டுமே இருந்ததே தவிர தடைகளையோ தன் குறைபாடுகளையோ ஒரு பொருட்டாக்கூட நினைக்காமல் தான் எண்ணம் என்னவோ அதையே தற்போது சாதித்துக்காட்டியுள்ளார்

எந்த ஒரு செயலுக்கும் உடல் குறைகள்/மாற்றம் பிரச்சனையாகவும், தடையாகவும்        இருக்காது  என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு்  இந்த தமிழ் பெண்மணி பூரண சுந்தரி 
"தோல்விக்கு காரணங்கள் ஏராளம் கூறலாம் ஆனால் காரணங்களுக்காக தன்னிடம் இல்லாமையை கூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல"

"தடைகளும் தடங்கல்களும் இல்லாமையால் ஒருபோதும் நிகழ்வது இல்லை "
இருப்பதை வைத்து நினைத்ததை சாதிக்கும் இவர்களை போன்றவர்கள் வாழ்வதால் தான் இவர்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது

என்னிடம் இல்லாத ஒன்றை நான் எனக்கு தடையாக ஏற்கமாட்டேன் என்ற அப்பெண்ணின் நம்பிக்கை தான் இன்று பாரதமே போற்றும் ஒரு உயர் அதிகாரியாக மாறப்போகிறார்.

இல்லை என்பது தடையல்ல நம் கனவிற்கு
 
இல்லை என்றால் உருவாக்க முயலுங்கள் 

எல்லாம் இருந்து வெல்பவனை காட்டிலும் இல்லாததை உருவாக்கி வெல்பவனே உண்மையான வீரன்.

இல்லாத ஒன்றை நினைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பதை விட்டு தேவையானதை உருவாக்கி நினைத்ததை அடைவது தான் மனித தன்மையின் அழகு 

இல்லாததை மறந்து இருப்பதை வைத்து 
தேவையானதை உருவாக்கி 
நினைத்ததை அடைவோம் இவ்வுலகில் எல்லாம் சாத்தியமே!

எண்ணம் சரியாக இருந்தால் 
IAS தேர்வில் வெற்றியடைந்த வெற்றிப் பெண்மணியை நமக்கெல்லாம் ஒரு உதாரணமாக கொண்டு நம் எதிர்காலத்தை உருவாக்குவோம்!

"எண்ணம் போல் உயரலாம்"!!!👍💪🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...