செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

Why Fear.??? நம் மனமிருக்க பயமேன்???


கடவுளே நான் நினைப்பது எதுவுமே நடக்கலயே!நடப்பது எதுவுமே நான் நினைப்பது இல்லையே!! ஒரு சாமானிய மனிதனின் எண்ணம்... ஒரு சில நாட்கள் நகரத்தொடங்கியது அந்த மனிதனும் தனக்கு பிடித்ததை தன்னுடைய கனவை எதிர்கால நோக்கமாக சேமித்து வைத்திருந்தான், ஆனால் மனதில் ஒரு அச்சம் நாம நினைத்தது எதுவுமே நடக்கல இது மட்டும் எங்க நடக்கப்போகுது?? என்ற மூட எண்ணம் எதிர்மறை எண்ணம் அவனுள்ளே பரவிக்காணப்பட்டது.

அதனால் அவன் எதிர்கால நோக்கத்திற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை காரணம் தோற்றுவிடுவேன் என்ற பயம்... 

சித்தர் ஒருவர் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்த நேரம் அவரது சீடனும் அவருடன் தியானத்தில் இருந்தான் தியானம் முடிந்த பிறகு அந்த சித்தரும் அவருடைய சீடரும் வேறு ஒரு இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர் செல்லும் வழியில் ஒரு பாம்பு ஒன்று அவர்களது குறுக்கே வந்து நின்றது அதை பார்த்த சீடனுக்கோ பயத்தால் உடல் நடுங்க ஆரம்பித்தது அந்த பாம்பு இறை சாப்பிட்டதால் செல்ல முடியாமல் சென்று கொண்டிருக்க அதை பார்த்து பயந்த சீடன் சித்தரைப்பார்த்து ஐயா நாம் இப்படியே திரும்பி விடலாம் இது பாம்புகள் நிறைந்த வனம் போலும் நாம் மேலும் நடந்தால் நிச்சயம் பாம்புகளால் தான் இறப்பு என்று கூறி சித்தரிடம் திரும்பி சென்றுவிடலாம் என்று கூற அதற்கு அடே மூடனே!!! ஒற்றை பாம்பு சாலையில் செல்ல முடியாமல் அது அதனுடைய பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் உன்னால் அதற்கோ அல்லது அதனால் உனக்கோ எந்த தொந்தரவும் இல்லை அந்த பாம்பும் உன் வழியை மறைத்தாலும் உன் வழியில் செல்ல கூடாது என்று கூறவில்லை ஆனாலும் உன்னால் செல்ல முடியவில்லை ஏன் காரணம் உன்னுள் இருக்கும் பயம்.

அந்த பாம்பினால் உனக்கு எந்த தடையும் அல்ல , உன் மனதில் இருக்கும் பயம் தான் உன்னை தடுத்துள்ளது,

பயம் என்ற அரக்கன் இருக்கும் வரை உன் பாதையிலும் உன்னால் பயணிக்க முடியாது 
பாதை எப்போது சீராக இருக்காது 
சித்தரின் பாதை போன்ற மனித பிறவிகளின் தடைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.
அதுதான் உன்னை உருவாக்குவதற்கான சில அனுபவ கல்வி 
சீரானபாதையில் ஒரு நாள் செல்லலாம் ஆனால் வாழும் வரை சீரான பாதை என்பது சாத்தியமில்லாதது

வாழ்க்கை பயணத்தில் தடைகள் இல்லாத பயணம் வாழ்வதன் அர்த்தம் இல்லாமலே போகும்,
பயம் என்ற உட்கொல்லி வெளியில் தெரியாமலே உன் வளர்ச்சியை தடுக்கும்
உன் மனதை பலவீனப்படுத்தும் பலமான உன்னை பலவீனமாக சித்தரிக்கும்!
சிறய தடையையும் பெரியதாக சித்தரிக்கும் பயம்!
எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்களை மட்டுமே விதைக்கும் இந்த பயம்!
ஏன் இந்த பயம்?
எதனால் இந்த பயம்?
எது வந்தாலும் உன்னை வெல்ல யாரும் இல்லை என்பதை உணராத வரை 
பயம் என்பது உணர்வால் ஒன்றுபட்டும் நம்முள்ளே வாழும்.!

பயத்தால் எல்லாம் பலவீனமாகும்,
சிந்தனைகள் அத்தனையும் அழுகிப்போகும், 
பயம் இல்லா வாழ்க்கை வாழ மனதினில் நம்பிக்கை வைக்க வேண்டும்

எறும்பு ஊற ஊற கல்லும் தேயுமாம்!
பயத்தை கொல்ல கொல்ல தைரியம் பிறக்கும் மனதில்!

எல்லாவற்றுக்கும் எண்ணம் மட்டுமே மூலதனம்,
எண்ணம் நேர்மறையாக இருந்தால் எண்ணம் போல் வாழலாம்!

வாழ்வது ஒரு வாழ்க்கை 
எண்ணம் போல் வாழ நம்பிக்கை விதைப்போம் மனதில் 
பயத்தை ஒழிப்போம் மனதினில்...

நேர்மறை எண்ணம் விதைத்து நம் வாழ்வை பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ முயற்சிப்போம்👍💪🏻😉

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...