மாறாக என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு முறை நான் யார்? நான் ஏன் இப்பிறவியில் பிறந்தேன்? என்று சிந்தித்தது உண்டா? என்றால் நிச்சயம் சிலம் சிந்தித்திருப்போம் சிலர் சந்திக்க வாய்ப்பே இல்லை இந்த கேள்வி நம்முடைய சூழ்நிலையை பொறுத்தது.
ஒரு சிலருக்கு பிறருடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்கவே நேரம் சரியா இருக்கு பிறகெப்படி நம்மை பற்றி சிந்திக்க நேரம்?? அப்படி ஏன் நான் சிந்திக்க வேண்டும் அதுதானே?? எனக்கென ஒரு முகவரி, அடையாளம் இருக்கையில் எனக்குள் நான் ஏன் நான் யார் என்று கேட்க வேண்டும்??
ஆனால் நமக்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டதுண்டு இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று அடுத்தவர்களை பற்றிய சிந்தனைகளும் கேள்விகளும் மனதிற்குள் இருக்கையில் நிச்சயம் நம்மை பற்றி எந்த கேள்வியும் வராது.
நாம் நம்மை யார் என்று கேட்பதற்கான காரணம் நம்முள் இருக்கும் மனதின் நிலை என்ன என்பதனை உணர இந்த கேள்வி நிச்சயம் வேண்டும்.
நீ யார் என்று கேட்பதையும்,கேட்டுக்கொண்டவர்களை விட நான் யார்? என்று தன்னுள்ளே கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்த செயல்களில் ஈடுபட்டவர்களின் நிலை தான் நிச்சயம் உயரும். இந்த கேள்வி தனக்குள்ளே இருக்கும் தன்னை பற்றி தானே சிந்திக்க ஒரு வாய்ப்பு நான் ஏன் பிறந்தேன்? இவ்வுலகில் என்னுடைய பணி என்ன? நான் யார்? என்று தன்னுள் கேட்பவனே தனக்கான அடையாளத்தை இவ்வுலகில் பதிக்க முடியும்.
தன்னை தானே புரிந்து தெரிந்து கொள்ள காலம் சில கடந்து தான் ஆக வேண்டும். நான் யார் என்ற கேள்விக்கான பதிலைத்தேடி நம் வாழ்க்கையை நகர்த்தும்போது தான் நம்முடைய வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதாக மாற ஆரம்பிக்கிறது. நாம் இருந்தாலும் அல்லது இறந்தாலும் நம் பெயரைச்சொல்லும் போது நம்மை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் முக்கிய அடையாளம் அந்த அடையாளத்தை உருவாக்குவதுதான் இந்த கேள்விக்கான விடை. முதலில் உன்னை உன் மனதிடம் நான் யார் என்ற கேள்விக்கு விடை காணுங்கள் இவ்வுலகம் உங்களை தானாக அறிந்து கொள்ளும்.
நான் யார்??? Who am I???
இந்த கேள்விக்கான விடையை தேடத் தொடங்குவோம்...💐👍💪🏻

பதிலளிநீக்குThank you friends
நம்மை பற்றிய தேடல் தொடங்கி விட்டால் தேவையற்ற விடயங்களில் மனம் செல்லாமல் தெளிவு பிறக்கும் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தம்பி