உலகமே ஒரு நாள் இந்தியாவை திரும்பி பார்க்கும், உலகில் உள்ள அத்தனை துறைகளிலும் இந்தியனின் பங்கு மிக அதிகமாக இருக்கும், உலக ஒற்றுமையில் இந்தியா ஒரு மாபெரும் புள்ளியாக விளங்கும், உலகம் சார்ந்த முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கு பல மடங்காகும், கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உலகளவில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்து உலக அளவில் வல்லரசான ஒரு அதிசக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகும்
இவை எல்லாம் கதைகள் அல்ல தான் பிறந்த நாட்டை இப்படி எல்லாம் ஒரு உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு தன் பிறப்பின் பொறுப்பை உணர்ந்து தான்னால் முடிந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட துறையில் உலகளவில் இந்தியாவின் தரத்தை உயர்த்திய ஒரு மாமனிதர்,இந்திய அறிவியலின் தந்தை முன்னால் குடியரசு தலைவர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகள்..
ஒவ்வொரு குடிமகனும் கனவு காண வேண்டும் என்பதை வலியுறுத்திய தலைவர்,
"கனவு என்பது உறங்கும் போது வருவதல்ல எந்த ஒரு செயல் உன்னை உறங்கவிடாது செய்து முடிக்க தோன்றுகிறதோ அதுவே உண்மையான கனவு"என்று கனவின் அர்த்தத்தை இந்திய இளைஞர்களின் மனதில் பதித்த ஒரு மாமனிதர்...
உலகை வெல்ல வேண்டும் என்பதல்ல நோக்கம் உலகில் ஒரு வெற்றியாளனாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.,
மாணவர்கள் தான் நம் நாட்டின் முதுகெழும்பு, அவர்களை நல்வழிப்படுத்தி நம் நாட்டிற்காக சிந்திக்க முற்பட்ட ஒரு ஈடுஇணையில்லா ஆசிரியர்...
சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனதிலும் எடுத்துக்காட்டு வாழ்க்கை வாழ்ந்து சென்ற ஒரு சாதனையாளன்..
மாணவர்களின் சிந்தனைகளை தன் வாழ்க்கையால் செதுக்கிய சிற்பி இவர்
இவருடைய கனவு இந்தியா 2020 ஆம் ஆண்டு வல்லரசாகும் அன்றைய அரசியல், மற்றும் பொருளாதரத்தை வைத்து அன்றே கனவு கானத் தொடங்கிவிட்டார் அப்துல் கலாம் ஐயா..
அவருடைய கனவு எப்போது நிறைவேறும்??? ஒரு சமுதாயம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் கூட்டமைப்பே, இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒரே சிந்தனைகளை கொண்டிருப்பதில்லை ஒவ்வொரு மனிதனுக்கு ஏற்ப அவனுடைய தேவைகளுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடுகிறது
அப்துல் கலாம் ஐயா அன்றே கூறிய சில முக்கிய வார்த்தைகள் நமக்கு மறந்திருக்கலாம் ஒரு சமுதாய முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை வைத்து ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் இருக்கும் திறமையை வெளி கொண்டுவர ஒவ்வொருவரையும் கனவு காணுங்கள் என்று அறிவுறுத்தினார்...
அரசியல், பணம், தகுதி இவை எல்லாம் சரியான திறமை வாய்ந்தனை நிச்சயம் பாதிக்கும் என்று அன்றே வெளி உலகிற்கு எடுத்துகூறியவர் அப்துல் கலாம் ஐயா
அவருடைய இழப்பு இல்லை என்றால் நம் நாடு வல்லரசு ஆயிருக்குமா என்று தெரியாது அடுத்த தலைமுறையின் கனவு நிச்சயம் நிறைவேறி இருக்கும்.,
நமக்குள் இருந்த ஒரு உள்ளுணர்வை தட்டி எழுப்பிவிட்டவரின் கனவை அடுத்த தலைமுறையினரை முன்னேற்றிவிட்டு நம் நாட்டினை அடுத்த தலைமுறையிலாவது வல்லரசாக்கிக் காட்டுவோம் என்று ஐயா அவர்களின் பிறந்தநாளான இன்று சபதம் ஏற்போம்
ஒரு தனிப்பட்ட மனிதனின் வளர்ச்சி அவனுடைய திறமையையும், முயற்சியையும் சார்ந்தே இருக்க வேண்டுமே தவிர பணமோ , அரசியலை சார்ந்ததாக இருக்க கூடாது... ஒருவனுடைய உயர்வு மட்டுமே சமுதாய உயர்வை கொடுத்திடாது
ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியும் தான் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அடித்தளம்...
நாமும் முன்னேறுவோம் நம்மை சார்ந்தவர்களையும் முன்னேற்றுவோம் இதுவரை இல்லை என்றாலும் இனியாவது
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவு அவர் ஒருவரை மட்டுமே சார்ந்தது அல்ல ஒவ்வொரு இந்தியனையும் சார்ந்தது , இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையிலாவது நிறைவேற்றுவோம்
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அதற்கான சூழலையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்போம்
ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியே நம் இந்தியாவின் வளர்ச்சி என்று உலகிற்கு காட்டுவோம் அதுவே நம் லட்சியம்...
வாழ்வோம் இந்தியனாக
வளர்வோம் இந்திய குடிமகனாக!!! ஜெய்ஹிந்த்🇮🇳💐💐🌱🙏👍
Awesome yuvi... So many lines n this blog r very inspiring Nd also remind us to do our citizenship duty ... Really nice
பதிலளிநீக்கு
நீக்குThank u
Semaaaa sirrr
பதிலளிநீக்கு
நீக்குThank u
Super 🔥🔥
பதிலளிநீக்கு
நீக்குThank u