ஞாயிறு, 11 அக்டோபர், 2020

Daughter's Love- மகளின் அப்பா (இழந்துவிட்ட உயிரோவியம்)🖋️💐

 

உலகில் தாய்க்கு நிகர் எவருமில்லை 

என் தாயின் வயிற்றின் ஈரைந்து மாதம் 

பொக்கிசமான காலங்கள் எல்லாம் அவள் என்னைச் சுமந்தாள் 

தாயின் அரவணைப்பு மட்டும் சூழ்ந்த ஒரு சில காலம் 

நான் யாரென புரியும் வரை அன்பு என்பது ஒரு தேவையாகவே உணர்ந்தேன் 

நான் என்னை உணர்ந்த நாள் முதல் 

தந்தையும் தாயும் ஒன்றென அன்பை அனுபவித்து வாழ்ந்தேன் சில காலம் 

எல்லாம் நல்ல நாட்களாக சிரிந்து வாழ்ந்த நான் 

அழுகையின் போது உடல் விலியை மட்டுமே உணர்ந்திருந்திருந்தேன்

நாட்கள் நன்றாக நகர்ந்தன

இறைவனின் சாபம் போன்றொரு நிமிடங்கள்

எதிர்பாராத சூழ்நிலை 

இழப்பு என்றால் ஒட்டு மொத்த வாழ்க்கையும் இழப்பான நாள் அது 

அப்பா நீங்கள் இறந்தாக வந்த செய்தி

உலகமே வெறுமையான நிமிடங்கள்

இறப்பை தேடிய நிமிடங்கள் 

வலிகளால் மனம் நிறைந்த நிமிடங்கள் 

அன்பு மொத்தமும் ஆவியான நிமிடங்கள்

தனிமை என்று சிறையால் அடைபட்ட நிமிடங்கள் 

யார் உடன் நின்றார் 

யார் விட்டு சென்றார் என்று புரியாத நிமிடங்கள் 

அத்தோடு சாவை தேடிய நிமிடங்கள் 

தேடித் தேடி பார்த்தும் என்னுலகில் என் வாழ்வை தொலைத்த நிமிடங்கள் 

உறவுகள் எல்லாம் பொய்த்த நிமிடங்கள் 

ஒரே ஒரு உயிர் இழப்பு 

என் உலகையே ஆட்டிப்படைத்த நிமிடங்கள்

என் எதிரிக்கும் வரக்கூடாத நிமிடங்கள் அது 

என்னைச்சுமந்த இரண்டு உயிரில் ஓருயிரை காணாமல் தவித்த நிமிடங்கள் 

தந்தை பாசம் அன்றோடு என்னை விட்டு விலகிய நிமிடங்கள் 

ஆயிரம் யானைவந்தாலும் என் தந்தை இருக்க நான் அஞ்சேன் என நினைத்தேன் 

ஆயிரம் யானைகளால் மிதிபட்ட வலியை உணர்ந்தேன் உம் இழப்பால் 

சொந்தங்கள் என்று கூறிய உறவுகள் முன் பாவப்பட்டு நிற்கும் வாழ்க்கை வாழ்த்தொடங்கினோம் நாங்கள் 

ஓருயிரை இழந்த மூன்று உயிரும் அனாதையானோம் , உறவுகள் இருந்தும் 

மனவலியை விட கொடியதில்லை இவ்வுலகில் - என அனுபவித்து வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் 

நீயில்லா உலகம் எங்களுக்கு எதிரானதாக உணர்கிறோம் ஒவ்வொரு நிமிடமும்

எத்தனை அன்பு புதிதென வந்தாலும் தந்தைக்கு இணையாக எதுவும் ஆகாதென்பதை உணர்ந்தோம் 

நீ இல்லா ஒவ்வொரு வருடமும் புதிதாக பிறக்கையில் உம்மை விட்டு தொலைவாக செல்கிறேன் நான் 

எங்கு சென்றாலும் மனதில் உன் நினைவுகளால் என் கண்களில் கண்ணீர் கசிகிறது அப்பா 

வலியால் இந்த வார்த்தைகளை கொட்டுகிறேன் 

இப்பிறவியில் சாத்தியம் என்றால் மீண்டும் வா என் பிள்ளையாக

உன்னை பார்க்க 

உன்னை சுமக்க 

உன்னை நேசிக்க 

உன்னை சுவாசிக்க 

எத்தனை வலியானாலும் கடவுளிடம் பிச்சை கேட்கிறேன் என் கடவுளை திருப்பிக்கொடு என்று என் குழந்தையாக.,

மீண்டு வா அப்பா!!!

மீண்டும் வா அப்பா!!!

உனக்காக காத்திருக்கிறேன்!!!

உன்னைச் சுமக்க!!!🌱😢💐🙏

4 கருத்துகள்:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...