கர்நாடகத்தில் தடம் புரண்ட பா.ஐ.க?
இன்றைய நாளை வெற்றி கனவோடு தொடங்கிய பாரதிய ஜனதா கட்சியாளர்களுக்கு இந்நாளை மறக்க வேண்டிய நாளாக மாற்றிய கர்நாடக மக்கள். கடந்த மே10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் அமோக முன்னிலையுடன் வெற்றி அறிவிப்பிற்கான நிமிடங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் பாரதிய ஜனதா கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இன்றைய தேர்தல் முடிவுகள்.
2018-ல் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக இந்த ஆண்டும் தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இந்த தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் ஏன் இந்த வீழ்ச்சி? எதனால் இந்த வீழ்ச்சி? கடந்த 5 ஆண்டு ஆட்சிக்கு மக்களின் பதில் இதுதான் என்று ஊடகங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தாலும் ஒரு அணி வெற்றி மற்றும் மற்றொரு அணி தோல்விக்கு காரணம் என்ன என்பதை நிச்சயம் பாஜக ஆலோசிக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் பல மாற்றங்கள் கர்நாடக அரசியலில் நடந்தேறியது. அதில் முக்கியமான ஒன்று கடந்த ஒன்றறை ஆண்டிற்கு முன்பு முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை. அதற்கு முன் முதலைமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. 2018 வெற்றிக்குப்பின் 6 மாத காலம் எடியூரப்பா, 1 ஆண்டுக்கு மேல் குமாரசுவாமி, மீண்டும் 2 ஆண்டுகளாக எடியூரப்பா இறுதியாக 1.5 ஆண்டுகளாக பசவராஜ் பொம்மை. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் நிலையான ஒரு முதல்வர் இல்லாதது ஒரு பெரிய பின்னடைவாகத்தான் கருதவேண்டும் இன்றைய தோல்வியின் மூலம்.
அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம். இந்தியா முழுவதும் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி அவ்வபோது எழுந்தவண்ணம் தான் உள்ளது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று மார்தட்டிக்கொண்டாலும் சாதியும் மதமும் அரசியலில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது கர்நாடகத்திலும் பிரதிபலித்துள்ளது. இஸ்லாமிய பாரம்பரிய உடை பிரச்சனை கர்நாடக தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மோடி அலை இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும் இந்த வெற்றி காங்கிரசாருக்கு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது. விழுந்து கிடந்த காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த வெற்றி எழுந்து ஓட ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் பாஜக அவ்வளவு பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் கடந்த மாநில கட்சி தலைவர்களை ஒப்பிடும்போது திரு. அண்ணாமலை அவர்களின் போக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தாலும் அண்டை மாநில தோல்வியால் தமிழக பாஜகவில் அவரகளில் தேர்தல் வியூகத்தில் மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
2024 நாடாளுமன்ற தேர்தல் ஒரு பெரும் எதிர்பார்ப்போடு இன்று முதல் பார்க்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாற்றம் மட்டுமே உண்மை என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது அரசியலுக்கும் உண்டு.
திரு.ராகுல்காந்தி அலையா அல்லது திரு. மோடி அலையா என்பதற்கு கூடிய விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள்.
கர்நாடக தேர்தல் முடிவு: https://www.google.com/search?client=firefox-b-d&q=karnataka+election+results+2023
கர்நாடகத்தில் பாஜக தோல்விக்கு வேறு காரணங்கள் இருப்பின் தங்கள் கருத்தினை பதிவிடுக.



சிறந்த அலசல்..
பதிலளிநீக்குஇது சட்ட பேரவைத் தேர்தல் என்பதால், இதன் தாக்கம் 2024-ல் எதிரொலிக்குமா என்பதனைப் பார்ப்போம்!