👎சுவாரஸ்யமான கர்நாடக முதல் மந்திரி பதவி இறுதியில் யார்?
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 அன்று நடைபெற்று தேர்தல் முடிவு மே13 அன்று வெளியானது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போல மாநில ஆட்சியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திரு.மோடி அலை பாதி திரு.அண்ணாமலை அலை பாதி இரண்டையும் வைத்து பாஜக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் தேவை கடந்த ஆட்சியை கழட்டிவிட்டு புதிய ஆட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள். ஏன் இந்த மாற்றம்? எதற்கு இந்த மாற்றம்? இதற்கெல்லாம் விடை காங்கிரஸ் ஆட்சி செய்யும் விதத்தில் தான் புரியும். சரி அது ஒரு புறம் இருக்க ஆட்சியை வென்ற காங்கிரஸிலிருந்து மாநிலத்தின் முதல் மந்திரி யார் என்று மே13 அன்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றபோதிருந்தே கேள்வி எழும்ப ஆரம்பித்துவிட்டது.
வீட்டிற்கு வெளியே நாம் கைகோர்த்து இருந்தாலும் வீட்டிற்குள்ளே சில போட்டிகள் இருக்கத்தானே செய்யும் அது போலத்தான் சித்தாராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. அதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்படிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.
கடந்த ஆட்சிக்கும் முந்தைய ஆட்சியில் முழுவதுமாக 5 ஆண்டு ஆட்சி செய்து முழு அனுபவத்தோடு இருக்கும் சித்தராமையாவை முதலமைச்சராக்கியிருப்பது கூடுதல் பலம் ஆனாலும் டி.கே.சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிப்பார் என்றும் காங்கிரஸ் தலைமை கூறியிருப்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பின் அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.
கர்நாடக சட்டசபை தோல்விக்குப்பின் பாஜகயின் செயல்பாடு எப்படி இருக்கும்? எதிரி நிழைகுலைய ஆரம்பித்திருக்கிறார் என்று பாஜக எதிர்க்கும் மாநில பெரும்பான்மை ஆதரவு உள்ள கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு வலுவான கூட்டணிக்கும் காத்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாநில கட்சிகளின் தலைமையில் கூட்டணி வைத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை உருவாக்கும் எண்ணத்துடன் அனைத்து மாநில கட்சிகளும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இதை பார்க்கும் போது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
தமிழகத்தில் திரு.அண்ணாமலை அணியின் செயல்பாடு எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது என்பதுவும் அடுத்த ஆண்டு தேர்தலில் தெரிந்துவிடும்.
மத்தியில் 10 ஆண்டு ஆட்சிக்குப் பின் மாற்றம் வருமா? அல்லது திரு.மோடி அவர்களின் ஆட்சியே தொடருமா? என்று தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக