சனி, 20 மே, 2023

மீண்டும் பணம் மதிப்பிழப்பு... 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் 30க்கு பின் செல்லாது - இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு



மீண்டும் பணம் மதிப்பிழப்பு... 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் 30க்கு பின் செல்லாது - இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு. 
 

இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை அழிக்க பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 2016 முதல் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து 6 ஆண்டுகளை கடந்துவிட்டோம். அன்று நிகழ்ந்து பணம் மதிப்பிழப்பு எத்தனையோ ஏழை எளிய மக்களை வங்கிகளில் காக்க வைத்தது. கையில் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள அவகாசமும் கொடுத்தது. இந்த பணம் மதிப்பிழப்பு அதாவது பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுக்களை பழக்கத்தில் விடுவதன் நோக்கம் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் மறைந்திருக்கும் கருப்பு பணம் வெளிவர வேண்டும் என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்திருந்தது. அந்த நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? இன்றளவும் அதற்கான புள்ளி விவரங்களை மத்திய மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக கொடுக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையாக 2000 ரூபாய் நோட்டுக்களும் இனி செல்லாது என்று பழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு செப்டம்பர் 30, 2023 வரை தான் மதிப்பு என்று புதிய அறிவிப்பை கொடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே அதிகபடியான பழக்கத்தில் இல்லை என்பதால் பெரிய அளவு பாதிப்பு மக்களுக்கு இருக்காது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 



இன்றைய தலைமுறையில் "டிஜிட்டல் இந்தியா" ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அதனால் இந்த 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் இந்த பணம் மதிப்பிழப்பிற்கான சரியான நோக்கம் மற்றும் அதனால் அடைந்த நல்ல விளைவுகளை பற்றி மத்திய அரசு மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இது ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக இருக்கும் என்பது தான் உண்மை.

இன்று கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக சித்தராமையா மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றுகொண்டிருக்க அனைத்து பா.ஜ.க எதிர்கட்சிகள் ஓரிடத்தில் ஒன்றுகூடி காங்கிரஸின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். கர்நாடகத்தில் பாஜக வின் தோல்வி ஆரம்பம் என்றும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக வை எதிர்க்க அனைத்து மாநில பாஜக வின் வெறுப்பு கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்க இன்று பாரத பிரதமர் திரு. மோடி ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றிருக்கிறார்.


இந்த பணம் மதிப்பிழப்பு கருப்பு பணத்தை அழிக்கத்தான் என்றாலும் தமிழ்நாடு ஆளும் கட்சி முதலமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் மீதும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சொத்து மதிப்புடன் கூடிய ஒரு பட்டியலை தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அது தொடர்பான மத்திய அரசு, வருமானவரி துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. அந்த பட்டியல் உண்மையா அல்லது ஆளும் கட்சியின் மீது அதிருப்தியை உண்டாக்க வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை. உண்மையான பட்டியலாக இருப்பின் கூடியவிரைவில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளவர்கள் மீது சட்டம் பாய்ந்தால் மட்டுமே தமிழக பாஜகயின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும்.

 

திரு.அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் பற்றி தங்களின் கருத்துக்களை பதிவிடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...