மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது???
இன்று காலையில் எழுந்தவுடன் செய்திகளில் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிந்திருப்பர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணைக்கை அழைத்துச் செல்லும் போது திடீர் நெஞ்சுவலியால் துடித்து போனார் அதனால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவருடைய உடல்நிலை சரியான உடன் அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கண்டறியபட்ட விவரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையின் பிண்ணனி என்ன?
செந்தில்பாலாஜி 1994 ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்து மதிமுக, திமுக, அதிமுக, தினகரன் அணி மற்றும் திமுக என்று சில கட்சித்தாவல்களை கடந்து இன்று திமுக சார்பில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கரூரை பூர்வீகமாக கொண்ட செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் முக்கிய பகுதியான கோவை மாவட்டம் உட்பல சில பகுதிகளில் இன்று திமுக வின் கை ஓங்கி நிற்க முக்கிய காரணமாக திகழ்பவர். சிறப்பாக அரசியல் செய்யக்கூடியவர் தனக்கென ஒரு எதிர்கால குறுக்கோள் கொண்டு அரசியல் செய்பவர் செந்தில் பாலாஜி. கடந்த சில ஆண்டுகளில் பாஜக மாநில தலைவரான திரு.அண்ணாமலையோடு அரசியல் போர் நடைபெற்று வந்தது. திரு. அண்ணாமலை அவர்கள் செந்தில் பாலாஜி மீதும், திமுகவின் முக்கிய புள்ளிகள் மீதும் அதிகபடியான சொத்துகுவிப்பு புகாரையும் முன்வைத்தார். இன்று நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை சோதனை அண்ணாமலையின் குற்றிச்சாட்டின் பின்னணியா? அல்லது அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கொடுக்கப்பட்ட வழக்கின் பின்னணியா? என்று அமலாக்கத்துறை விசாரணைக்குபின் தான் தெரியும்.
நேற்று (13.06.2023) காலையில் ஆரம்பித்த அமலாக்கத்துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பும் தருவேன் என்று உறுதியளித்தார் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி. அடுத்த 15 மணி நேர சோதனைக்குப் பின் கைபற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவரங்கள் பற்றிய விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது மாண்புமிக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. அதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துளார்கள். திமுக மற்றும் தமிழக முதல்வர் உள்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் மாண்புமிகு அமைச்சரின் உடன் பக்கபலமாக மருத்துவமனையிலே காத்திருக்கிறார்கள்.
திடீர் சோதனையா?
1.)அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டதா? இந்த சோதனைக்குப் பிண்ணனியில் பாஜக யின் அரசியல் பலிவாங்குதல் நடவடைக்கையாக இருக்குமோ?
2.)பல ஆண்டுகளாக மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சொத்துகுவிப்பு, மணல் கொள்ளை, மதுபான விற்பனை விலை மோசடி என்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் மீது இந்த நடவடிக்கையா?
3.)முதல்வர் உட்பட சில முக்கிய திமுக தலைவர்கள் மீது திரு.அண்ணாமலை சுமத்திய சொத்துகுவிப்பு புகாரின் பிண்ணனியா?
4.)திடீரென மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்க காரணம் என்ன?
5.)இந்த சோதனை அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திமுக மீது அவப்பெயரை சுமத்த நிகழ்த்தப்பட்டதா?
6.) மாண்புமிகு அமைச்சர் மட்டுமல்ல சில அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீதும் அதிக சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று கொண்டிருக்க அடுத்தடுத்து சில பல முக்கிய புள்ளிகள் மீது சோதனை நடத்தப்படுமா?
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அமலாக்கத்துறையினரிடமே உள்ளது.
இன்றைய தமிழக அரசியலில் மத்திய அரசின் முக்கிய தலையீடல் இது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைத்து பாஜக வின் எதிர் தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
அரசியல் ஒரு சாக்கடை என்று கருதியவர்கள் அரசியலை விட்டு விலகி நிற்கிறார்கள். அந்த அரசியலே ஒவ்வொரு குடிமக்களை வைத்துதான் நடக்கிறது மக்கள் இல்லை என்றால் ஏது அரசியல்? இதை உணர்ந்தால் அரசியல் நம் அன்றாட வாழ்வின் முக்கியதுவம் என்பது புரியும். அரசியலின் ஆதாயமான குடிமக்களாகிய உங்களின் கருத்து என்ன? என்பதை உங்கள் சுதந்திர கருத்தாக இந்த அமலாக்கத்துறை சோதனை மற்றும் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி குறிப்பிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக