வெள்ளி, 16 ஜூன், 2023

மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வைத்துள்ள புகார் உண்மையா? விசாரணைக்குப்பின் பல முக்கியப்புள்ளிகளின் பெயர்களும் வெளியிடப்படுமா?

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்???" - சிலப்பதிகாரம்...

கடந்த 13/06/2023 அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம்,  அலுவலகங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை 15மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அமலாக்கத்துறை. அதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முற்பட்ட போது திடீரென நெஞ்சுவலி காரணமாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது அமலாக்கத்துறை. தீவிர சிகிச்சைக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி இதய இரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ய காரணமாக அவரது வங்கிக் கணக்கில் 1 கோடியே 34 லட்சமும், அவரது மனைவி வங்கி கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் இருப்பதாகவும் இந்த பணம் வருமானவரிக்கு தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுக்கு கூடுதலாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்கள். அதனால் செந்தில் பாலாஜி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை 8 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரண்டு நாளில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் பொறுப்பு இலாக்காவான மின் துறையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்பாக ஆளுநர் அவர்களுக்கு பரிந்துரையை தமிழக அரசு அனுப்பியிருந்தது.

அத்துடன் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரவும் பரிந்துரை அனுப்பியது. ஆனால் ஆளுநர் சார்பில் இலாக்கா பிரித்து கொடுக்க அனுப்பிய பரிந்துரையை ஏற்ற அளுநர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர தமிழக அரசு செய்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

1.)15 மணி நேர சோதனையின் போது அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியதாகவும், அவரை வலுகட்டாயமாக இழுத்து செல்ல முற்பட்டதாகவும் அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2.)செந்தில் பாலாஜி மீதான குற்றங்கள் நிரூபிக்கபாடுமா? அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓரிரண்டு நாளில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பட்டுகள் நடைபெறும் நிலையில் விசாரணை நடக்குமா? செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

3.)அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருப்பது விசாரனையிலிருந்து தப்பிக்க நாடகம் ஆடுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

4.) தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கட்சி மாறி வந்தவுடன் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து இன்று இவ்வளவு பிரச்சனைக்கும் திமுக பக்கபலமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருந்துவரும் ஒரு சில முக்கியப்புள்ளிகளுக்கு எழுந்துள்ளது.

5.)எதிர்கட்சி தலைவர் EPS அவர்கள் செந்தில் பாலாஜி இப்போது மாட்டிக்கொண்டதால் அவரை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த திமுக முக்கிய புள்ளிகளின் தலை உருளும் என்று எச்சரித்துள்ளார்.

6.)நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த அமலாக்கத்துறையின் செயல்பாடு அரசியல் நாடகம் என திமுக குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பாஜக தலைவர்களையும் பாரத பிரதமர் மோடி அவர்களையும் எச்சரிக்கும் விதமாக சவால் விடுத்துள்ளார்.

7.) பல நாட்களுக்கும் முன்பே பாஜக மாநில தலைலர் அண்ணாமலை மற்றும் சவுக்கு சங்கர் அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து எச்சரித்தும் அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டது தான் இன்றைய  நிலைக்கு காரணம் என்று பல அரசியல் வல்லுநரகள் கூறுகின்றனர்.

8.) மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோதனைக்குப் பின் கிடைத்துள்ள சில ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

9.)செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கும் பட்சத்தில் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் எனவும், அதனால் சில முக்கிய புள்ளிகளின் பெயர் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் நாடகங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம் இன்று நடப்பது நாடகமா அல்லது உண்மையா என்று புரியாமல் இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் முட்டாள்களே!!! புரிந்தவன் புத்திசாலி ஆனால் அதனால் ஒன்றும் மாறப்போவதில்லை.!!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...