சனி, 17 ஜூன், 2023

விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்??


 நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட சமுதாய பொறுப்பு அரசியலுக்கான அடித்தளமா???

       இந்திய அளவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் முக்கிய நடிகர் விஜய்யும் ஒருவர்.  விஜய்யின் இன்றைய சமுதாயப்பணி எதிர்கால அரசியலுக்கு அடித்தளமாக அமையுமா?? என்று அரசியல் வல்லுனர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய் தவிர அவரை சார்ந்த அனைவரும் சமூக வலைதளங்களில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவருடைய தந்தை இயக்குநர் SAC அவர்கள் ஓரிரு ஆண்டுக்கு முன்பு அதிகாரபூர்வமாக விஜயின் அரசியல் பயணத்தை தெரிவித்து அதை திரும்பப்பெற்றார். ஆனால் இதுவரை விஜய் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவருடைய படங்களில் அரசியல் நோக்கம் குறித்த தனது எண்ணங்களை வெளிபடுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் எதிர்கால நோக்கம் பற்றி வெளிப்பட கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றம் சார்பாக சில பல சமுதாய நற்செயல்களும், உதவிகளும் செய்யப்பட்டு வருகிற நிலையில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்

தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு மேடையிலும் தன்னுடைய அரசியல் நோக்கம் பற்றிய ஒரு சில வார்த்தைகள் பற்றி பேசுவது அவருடைய வழக்கம் அதே போல் இன்றைய மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழாவில் "வாக்கு செலுத்த பணம் பெறுவதை ஊக்குவிக்கக் கூடாது" இன்றைய மாணவ மாணவிகள் எதிர்கால வாக்காளர்கள் என்றும் வாக்கு செலுத்த பணம் வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சமுதாய பணி அவருடைய எதிர்கால அரசியலுக்கான அடித்தளமாக இருக்கும் பட்சத்தில் எதிர்கால அரசியலில் விஜயின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா?.

பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற்றவர்கள் என்னவோ ஒரு சிலர்தான். அப்படிபட்ட சூழலில் நடிகர் விஜயின் அரசியல் பயணம் வெற்றி காணுமா? அல்லது மற்றவர்கள் போல இவருடைய அரசியல் பயணம் காணாமல் போகுமா? என்று எதிர்கால வாக்காளர்களின் கையில் உள்ளது.

நாளைய அரசியலுக்கு இன்றைய சமுதாயப்பணி தான் உதவும் என்ற எண்ணம் கைகூடுமா? 

இன்றைய பரிசு வழங்கும் விழாவில் விஜய் அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று மாணவி ஒருவர் வெளிப்படையாக மேடையில் கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு விஜயின் மௌனம் சம்மதத்திற்கான அறிகுறியாக இருக்குமா?

இன்றைய சமுதாயப்பணி அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஒரு தனிக்கட்சி தொடங்க தொடக்கம் தான் என்று விஜய் ரசிகர்கள் சிலரின் சுமூக வலைதள பதிவுகளால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

யார் அரசியலுக்கு வந்தாலும் அடிமட்ட மக்களின் தேவை அரசியல் தலைவர்களுக்கு தெரியாமலே போகிறது காரணம் இடைமட்ட அரசியல் வாதிகள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதையும் தாண்டி அரசியலில் சேர்ந்தால் சமுதாயத்தில் உயர்ந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வருபவர்களால் தான் மக்கள் தேவை தலைவர்களுக்கு தெரியாமலே போகிறது. அப்படிபட்ட இன்றைய அரசியலுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என்றால் அவரை நாளைய வாக்காளர்கள் தலைவராக நிச்சயம் ஏற்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...