சனி, 24 ஜூன், 2023

ரஷ்யாவில் வெடித்தது உள்நாட்டுப்போர், ரஷ்யாவின் புதிய அதிபர் யார்? புதினின் நிலை என்ன?

ரஷ்யாவில் உள்நாட்டுப்போர்??? ரஷ்ய அதிபர் புதின் நிலை என்ன???

கடந்த பல மாதங்களாக ரஷ்யா - உக்ரைன் போர் உலக அளவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்ய கோரிக்கைகளை உக்ரைன் ஏற்கும் வரை உக்ரைன் மீதான போர் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருந்தார். உக்ரைனில் நிலவிவந்த போர்பதற்றம் இன்று குறையவில்லை. இந்த போரில் உக்ரைன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. உக்ரைன் மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆனாலும் உக்ரைனுக்கு உலக அளவில் பல நாடுகளின் ஆதரவு கிடத்ததால் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வந்தது உக்ரைன் ராணுவம். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் வெடித்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி உள்நாட்டுப்போர் உருவானது? அதற்கான காரணம் என்ன?

உக்ரைனுக்கு எதிராக போர்தொடுக்க ரஷ்யாவிற்கு அரசு ராணுவம் மட்டுமல்லாமல் வாக்னர்   என்ற உள்நாட்டு தனியார் ராணுவ நிறுவனத்தின் படைகளும் உதவி வந்தது. ஆனால் தற்போது அந்த வாக்னர் ஆயுதப்படை ரஷ்ய ராணுவத்திற்கும், ரஷ்ய அதிபரின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

வாக்னர் ஆயுதப்படை தாக்குதலின் நோக்கம் வெளிப்படையாக தெரியவில்லை எனினும் "வாக்னர் படை மீதான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் ரஷ்யாவின் புதிய அதிபர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றும் வாக்னர் ஆயுதப்படை தலைவர் பிரிகோஸின் தெரிவித்திருப்பது உலக அளவில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் வாக்னர் ஆயுதப்படை ரஷ்யாவின் தெற்கு பகுதி ராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.

வாக்னர்  மற்றும் ரஷ்ய ராணுவப்படையும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி கொண்டிருப்பது ரஷ்ய மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

"அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்" என்று ரஷ்ய உள்நாட்டுப்போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக வாக்னர் ஆயுதப்படை தாக்கியுள்ளதா? இந்த தாக்குதலால் ரஷ்ய மக்களின் நிலை என்னவாகப்போகிறது? இதற்கு எல்லாம் விடை அதிகாரவர்கத்தின் முடிவில் உள்ளது. ராணுவ தாக்குதல், உள்நாட்டுப்போர், அரசியல் சண்டை இதற்கிடையில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

மக்களின் தேவைக்காக உருவானது அரசியல், மக்களை காக்க உருவானது தான் ராணுவம் ஆனால் தவறான அரசியலின் நோக்கத்திற்கு ராணுவத்தை உபயோகித்து மக்களின் வாழ்க்கை நிலையை நிம்மதியில்லாமல் செய்வது தான் அதிகார வர்க்கம் மற்றும் அதிகார ஆசை. ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆசைக்காக ஒட்டுமொத்த நாட்டின் நிம்மதியையும் கெடுப்பது ஒரு சிறந்த தலைமையாக நிச்சயம் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...