ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"பிற்போக்கு எண்ணம் தான் வாழ்க்கையின் முதல் தோல்வி"😒👍🙏💐


நம்ம வாழ்க்கையில் நேருக்கு நேர் மோதும் எதிரி, பின்னால் குத்தும் விரோதி, முன்விட்டு பின் பேசும் துரோகி, நம் நிலையை ஏளனமாக நினைக்கும் பச்சோந்திகள் இப்படி பல வகையிலான குணங்களை பார்த்திருப்போம்.


எதிரிகள் இல்லாதவர்கள் இவ்வுலகில் இல்லை அப்படி இல்லை என்றாலும் நம்முடைய வலிமை நமக்கு தெரியாதல்லவா??சரி கண்ணுக்குத் தெரிந்த எதிரியை எதிர் கொண்டு போராட முடிந்தது அதில் வெற்றி,தோல்விகள் எல்லாம சகஜம் ஆனால் நமக்குள் இருக்கும் ஒரு எதிரி, துரோகி, விரோதி இப்படி பல பெயர்கள் சொல்லலாம்.,


யார் அந்த எதிரி  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அது? அது ஒரு குணம்  தன்னை பிறரோடு ஒப்பிட்டு தாழ்த்திக்கொள்ளும் எண்ணம்.,


அவனுக்கு நல்ல வாழ்க்கை 

அவங்களுக்கு பணம் இருக்கிறது 

அவர்களுக்கு அது இருக்கிறது எனக்கு எதுவுமே இல்லை

இந்த குணம் கொண்டவர்கள் யாருமே எளிதில் தன்னை உயர்த்திக்கொள்ள முடியாது


"எல்லாம் இருந்து சாதித்தவனின் வெற்றியை விட எதுவுமே இல்லாமல் அதை உருவாக்கி சாதித்தவனின் வெற்றிதான் உயர்ந்தது"


எல்லாம் உள்ளவன் சாதிக்கவே அவ்வளவு கஷ்டப்படுகிறான் எதுவும் இல்லாம நான் எப்படி சாதிப்பது??


எல்லாம் உள்ளவர்களுக்கும் எதுவுமே இல்லாதவர்களுக்கு வலி என்பது ஒன்று தானே


ஒரு இனிய நாள் ஆன்மீக தினத்தன்று இறைவன் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்க ஆலயம் ஒன்றில் ஆன்மீக பெரியவர் ஒருவர் தியானத்தில் இருக்கிறார் அதே ஆலயத்தில் வழிபாடு முடித்த ஒரு இளைஞன் ஆலயத்தை சுற்றிவிட்டு மரத்தடியில் தனிமையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க அந்த பெரியவர் அந்த இளைஞனின் கண்ணுக்கு தெம்பட அவரருகில் சென்று அமருகிறான்

அவர் கண்விழித்து அவனை பார்த்து சொல்லுங்கள் என்ன வேண்டும் என்றார் அதற்கு அந்த இளைஞன் ஐயா எனக்கு மன நிம்மதி இல்லாமல் கடந்த சில நாட்களாக புலம்பி திரிகிறேன் எனக்கு நிம்மதியான ஒரு முடிவு இந்த பிரச்சனைக்கு தேவை நான் ஒரு தொழில் செய்து வருகிறேன், என்னால் ஒரு அளவிற்கு மேல் லாபம் ஈட்ட முடியவில்லை ஆனால் என்  வீட்டெதிரில் வசிக்கும் ஒருவன் செய்யும் தொழிலில் மட்டும் லாபம் அதிகம் ஈட்டுகிறான், என்னைவிட அவன் சமூகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறான், என்னால் அவன் ஆளவிற தொழிலில் நிலைநாட்ட முடியவில்லை என்னிடம் ஆட்கள் குறைவு, அவனைவிட என் தொழிலில் ஈடுபாடு குறைவாக உள்ளது நான் என்ன செய்வதென்பதே புரியாமல் தவிக்கிறேன் என் மனதில் அவனைப்பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது,அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான்.,


அதற்கு அவர் நான் சொல்வதை செய்வாயா என்றார் சரி சொல்லுங்க என்றான் ஆலய வாசலில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருப்பான் அவனருகில் சென்று அமர்ந்து அவனோடு பிச்சை எடுப்பாயா என்றார்?? அவன் திக்கிட்டு ஐயா நான் எப்படி பிச்சை எடுப்பது என்றான் ஏன் முடியாது? அவனும் உன்னைப் போலவன் தானே என்றார் நான் சொல்வதை செய் நீ கேட்டதற்கான விடை கிடைக்கும் என்றார்.,


ஐயா என்னால் முடியாது என்றான் ஏன் என்றதற்கு அவன் என்னை விட தாழ்ந்தவன் அவனருகில் சென்று என்னால் அமர்ந்து பிச்சை எடுக்க முடியாது அதிலும் நான் அவனை விட அந்தஸ்தில் உயர்ந்தவன் என்றார் இது தான் உன் தவறு உன்னை விட தாழ்ந்தவனிடன் பார்க்கு இந்த தாழ்வு மனம் நிச்சயம் உன்னை விட உயர்ந்தவனிடமும் இதே தாழ்வு நிலை தான் உனக்கு வரும்.,


அந்த பிச்சைக்காரன் எப்போதும் உன் அளவிற்கு வளர வேண்டும் என்று நினைப்பதில்லை, அவன் தினம் ஆயிரம் பேரை சந்திக்கிறான் ஆனால் எல்லாரையும் போல வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை அப்படி அவன் எண்ணினால் அன்றைய வாழ்க்கை அவனிடம் இல்லை என்பதை அவன் நன்கு அறிவான்  காரணம் அவன் அன்றைய வாழ்க்கைக்கு தேவையானதை பெற்றுக்கொண்டால் போதும் அவன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பான் இதுதான் அவனுடைய தினசரி நிகழ்வு ஆனால் நீ உன் குடும்பத்திற்கு தேவையானதும் போதுமானதும் உன்னிடம் இருக்க பிறர் ஒருவரை பார்த்து அவனைப்போல் உயர என்னால் முடியவில்லை என்று அவனை நினைத்து உன்னை தாழ்த்திக்கொள்வதால் தான் உன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை 

போதும் என்ற மனம் ஒன்று இருந்தால் பிறருடன் ஒப்பிட்டுபார்க்கும் எண்ணம் வராது

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"..


பிறருடன் ஒப்பிடுகையில் அவர்களின் இடம், சூழ்நிலை, வாழ்க்கை வேறு என்பதை உணரும் போது தான் நம்முடைய வாழ்க்கையின் மதிப்பு உணர முடியும், எவரும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை அவரவர் வாழ்க்கையை சூழ்நிலைக்கேற்ப வாழ்ந்தாலே போது நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.


ஆசை, பொறாமை, தாழ்வு மனம் இது தான் நம் வாழ்க்கையின் எதிரியாக இருக்கும் அதுவும் நம்மிடமே இருக்கும்., உன்னால் முடியும் என்றால் முயற்சி செய் நிச்சயம் கிடைக்கும் ஆனால் பாகுபாடு எண்ணம் எப்போதும் முயற்சி செய்ய விடாது என்பதை உணர வேண்டும்"


வாழ்க்கையின் வாய்ப்பு எல்லோருக்கும் ஒன்றுதான்., சூழ்நிலை மட்டுமே வேறு..,

ஆனால் வாழும்போது தான் மதிப்பு ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்கிறார்கள் காரணம் நம்முடைய தேவைகள்.,


இது போன்ற பிற்போக்கு குணங்களால் வாழ்ந்தவர்களை விட வீழ்ந்தவர்கள் தான் அதிகம், இந்த எண்ணங்கள் ஒரு போது நம்மை உயர விடாது என்பதை உணரும் வரை நம் வளர்ச்சி சாத்தியமில்லை…

"எண்ணம் போல் வாழ்க்கை"💪🏻💪🏻👍


2 கருத்துகள்:

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...