அன்பு அப்பா..!
தேவையான இடத்தில் உம்மை தேடினேன்..,
தேவையானவை எல்லாம் வந்ததும் என்னை சேராமல் விட்டுசென்றன..,
எண்ணற்ற கற்பனைகளால் நிழல் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன்..,
ஒரு நாள் நிஜமாகும் என்ற ஆசையில்..,
ஆதியும், அகிலமுமாய் உன் கரம் பிடித்து நிற்கவேண்டியவன்..,
வெறும் கரம் துடைத்து கொண்டிருக்கிறேன் நான்..,
ஆயிரம் உறவுகள் தேடி சென்றாலும் தனிமரம் போல தகுதியற்று நின்றிருந்தேன்..,
ஒரே ஒரு உயிர்
நீ இல்லை என்னோடு
இவ்வுலகமே என் எதிரியாய் முன்னின்று கைகொட்டி சிரிக்கிறது...,
நான் கோழை அல்ல!!!
ஆயிரம் யானை பலம் கொண்டவனாய் திரிந்தாலும்
ஏதோ ஒரு இடத்தில் உந்தன் தேவையை தேடி அழைகிறேன் அனாதையாக...!
அப்பா!!!
இவ்வளவு தான் என் வாழ்க்கையா???
இப்போது புரிகிறது நீ ஒருவன் இல்லையேல் இவ்வுயிறும் மயிரானது பலருக்கு...
அப்பா என்ற இழப்பு ஒரு உயிரல்ல பல வாழ்க்கை, பல கனவு, எண்ணற்ற சந்தோசம்!!!
கண்களில் சிந்தும் கண்ணீரெல்லாம் உன் பெயர் மட்டுமே சொல்கிறது!
கனவிலும் நீ இல்லாமல் வாழ மட்டுமே முடிகிறது
கனவிலும் உன்னோடு வாழ தகுதியில்லாத நிலை எனக்கு!
உன்னை கட்டித்தழுவி அழ நினைத்தாலும் உன் வெறுமை எனக்கு தனிமையை மட்டுமே உணர்த்துகிறது.,
தனிமை எனும் ஆயுதம் மட்டுமே எனக்கு எப்போதும் துணை!
தனிமை என்றால் வெறுமை அல்ல உன் நினைவுகளோடு உலாவிக்கொண்டிருக்கும் சூழ்நிலை.,
வலிகள் என்னோடு உறவாடிய பொழுது உன் நினைவுகள் மட்டுமே துணை.,
அழ கூட தைரியம் இல்லை
வலிகள் சொல்ல மனம் இல்லை
இவ்வாழ்க்கை வலியோடு தான் என்று இப்போது புரிந்துணர்ந்தேன் அப்பா நீ இல்லாமல்!!!..,

பதிலளிநீக்குஅப்பா உணர்வுகளின் மொழி. அம்மா உடலின் மொழி. உடலின் வலிக் கூட எளிதாக காண இயலும்.ஆனால் உணர்வை வலியை உணர்வதைத் தவிர வேறு வழியில் உணர்ந்திட இயலாது. அப்பா என்ற மூன்று எழுத்து தான் வாழ்க்கை என்ற நான்கு எழுத்துத் திசைகளுக்கு வழிக்காட்டும். இருக்கும் வரை அதன் அருமை யாருக்கும் தெரியாது என்பது திண்ணம் தான். அப்பா இல்லாத வலியை தங்களின் வரிகளில் உணர்ந்துக் கொண்டேன். கடந்து போவது தான் வாழ்க்கை ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை கடந்து செல்வது மிகவும் கடினம் தான். கவலை வேண்டாம் அப்பாவின் ஆசிகள் என்றும் தங்களுடன் இருக்கும் நண்பா. நம்பிக்கையுடன் நடை போடுங்கள் அப்பா உங்களுடன் தான் பயணிப்பார். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குYes Vaishu sure ma
ARUMAI.
பதிலளிநீக்கு