ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஆணால் உணரப்பட்ட பெண் உணர்வு(மூன்றாம் பாலினம்)

 

       உலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஆண் மற்றும் பெண்ணுணர்வோடு பிறந்து உலகில் ஆண்டு மடிகிறார்கள்., இரு ஒத்த பாலினங்கள் மூலம் ஒருவருடைய உணர்வை அதே பாலினத்தை சார்ந்த மற்றொருவர் உணர்ந்து கொள்கிறார். ஆனால் என்றேனும் ஆண் உணர்வுகளை பெண்ணும், பெண் உணர்வுகளை ஆணும் உணர முடியாது அதை உலகில் சாத்தியமாக்கியது ஒரு மூன்றாம் பாலினம்., 


     ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உணர்வை புரிந்து கொண்டான் என்றால் அவன் கடவுளுக்கு இணையானவன் அது எப்படி சாத்தியம் உடலாலும் மனதாலும் வேறுபட்ட இரு வேறு மனிதர்களில் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்வது சாத்தியமற்றது உண்மைதான் ஆனால் உலகின் மிகச்சிறந்த படைப்பு இந்த மூன்றாம் பாலினம், உண்மையில் பெண்ணின் உணர்வுகளை உணரத் தெரிந்தவர்கள் தான் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள்., பிறக்கும் போது ஆணாக உடலின் அத்தனை அமைப்புகளையும் பெற்று ஆணாகப் பிறந்திருப்பார்கள் அவர்கள் வளர வளர அவர்களின் உணர்வுகளில் மாற்றம் கண்டு சில காலங்களுக்குப் பிறகு முற்றிலும் பெண்ணாக மாறிவிடுகிறார்கள்.. இந்த மாற்றத்தை எந்த ஒரு குடும்பமும் அல்லது பெற்றோர்களும் ஏற்பதில்லை காரணம் தனது ஆண் மகன் ஒரு பெண்ணாக மாறிவிட்டான் அதனால் இந்த சமுதாயத்தில் நமக்கு அவமானம் என்று அவரகளிடம் மாற்றம் உணர்ந்த பொழுதே அவரகளை ஒதுக்கி விடுகிறார்கள் ஏனோ தெரியவில்லை?? அந்த மாற்றத்தை அவர்கள் அறிய ஆரம்பிக்கும் பொழுதிலிருந்தே அவர்கள் ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர ஆரம்பிக்கிறார்கள், மற்ற ஆணின் உணர்வுகளை வலிகளை உணர ஒரு ஆணாகத்தான் இருக்க முடியும் அது போல ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் இதை அனைவரும் அறிவோம் ஆனால் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் அதே ஒரு ஆணின் வலிகளையும் உணர்ந்தவர்கள் தான் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள்… நம் நாட்டு சட்டம் அவர்களுக்கென இட ஒதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்கி அவர்களின் வாழ்வினை காக்க வழி செய்துள்ளது உண்மைதான் ஆனால் அவர்களும் நம்மை போன்றவர்கள் தானே அவர்களை பற்றின ஒரு மிக கீழ் தனமான நம்முடைய எண்ணம் தான் அவர்களின் இன்றைய நடத்தைகளுக்கு முக்கியக் காரணம்… மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பல பெயர்கள் உண்டு அவர்களைக்கண்டால் விரோதியைப் போல் ஒதுக்குவது, வேலைவாய்ப்பின்மை, குடும்ப ஆதரவு இல்லாதது, அவர்களை பற்றின மற்றவர்களின் எண்ணம் என பல வகைகளில் நாம் அவர்களை தண்டிக்கிறோம், அதனால் தான் அவர்களின் நடத்தையும் மாறியுள்ளது அத்தனையும் வயிற்றுப்பிழைப்பிற்காக என்பது புரியாது நமக்கு… ஏனென்றால் ஒருவரின் உணர்வுகள் தான் மற்றொருவரான நமக்குப் புரியாதே., ஒருவரின் நிலையோ அல்லது உணர்வுகளையோ புரிந்து கொள்ள அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை உணர்வுகளை மதிக்கத் தெரிந்தால் போதும் அவர்களும் ஒரு உணர்வே என்று தெரிந்தால் போதும், அவரகளின் உணர்வுகளுக்கும் உயிர் உள்ளது என்பதை தெரிந்தால் போதும்., அவர்களுக்கும் வலி என்று ஒன்று உண்டு என்பதை உணர்ந்தால் போதும்., பசியும், வலியும் எல்லாருக்கும் ஒன்றே என்று நாம் உணர்ந்தால் போதும் அவரகளை ஒதுக்கி வைக்கும் எண்ணம் நம்மை விட்டு விலகும்..

இறைவன் படைப்பில் எல்லாம் சமம் என்று உணரும் காலம் வந்தால் நம்மைப் போன்றவர்கள் தான் அவரகளும் என்று மதிக்க ஆரம்பிப்போம்… அவர்கள் ஆணாகப் பிறந்த பெண், ஆண் வலியையும் பெண் உணர்வையும் தன்னுள் ஏற்று பல இடங்களில் அவர்களுக்கான இடத்தை தேடிக்கொண்டிருப்பவர்கள்




கருத்துணர்வு:-

   மனிதனால் ஒதுக்கி வைக்க கூடிய உயிர் என்று எதுவும் இல்லை ஆனாலும் மனிதன் சாதி,மதம் என்று மனிதர்களை ஒதுக்கி வைத்து இப்போது பாலினத்தை மையமாக வைத்து ஒதுக்கி வைக்கிறான் என்றால் உணர்வுகளுக்கான மதிப்பு இங்கு இல்லை என்றே பொருள்… முடிந்தால் ஒருவரை புரிந்து கொள் இல்லை என்றால் ஒதுங்கிச்செல் ஒருபோதும் ஒதுக்கி செல்லாதே அந்த வலியும் உன்னால் உணர்ந்து கொள்ள முடியாது… 



2 கருத்துகள்:

  1. அழகான புரிதல்.... சமூக ஒத்திசைவிற்கு இதுபோன்ற புரிதல்கள் காலத்தின் தேவை... வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...