புதன், 9 டிசம்பர், 2020

இறப்பு என்பது முடிவாக இருக்கலாம் ஆனால் சரியான தீர்வல்ல...!

 

இறப்பு என்பது முடிவாக இருக்கலாம் ஆனால் சரியான தீர்வல்ல..,

ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான எதிர்பார்த்த விடை நமக்கு கிடைக்கும்.. தீர்வு என்பது அந்த பிரச்சனையை மறு முறை எதிர்கொள்ளும் போது எளிதில் தீர்க்க ஒரு வித வழிமுறை ஆனால் அந்த பிரச்சனையின் முடிவு என்பதுவும் இனி அது போன்ற பிரச்சனையே வாழ்வில் கண்டுவிடக்கூடாது என்ற பயத்தில் தீர்வை கண்டறியாமல் முடிவை நோக்கி எடுக்கும் ஒரு விபரீத முடிவு தான் தற்கொலை... தற்கொலை செய்வது கோழைத்தனம் என்பது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை,ஆனால் இங்கே இறந்தவர்கள் எல்லாம் தன் தோல்விக்காக இறந்ததை விட தன் தன்மானத்திற்காகவும், இழந்த அன்பை ஈடு செய்ய இந்த உலகில் வேறு ஒன்றும் இல்லை இறப்பை தவிர என்று நம்பியவர்களும் தான் அதிகம்., அதாவது பாசத்திற்காகவும், மானத்திற்காகவும் தன் உயிரை துட்சமென எண்ணியவர்கள் தான் உலகில் தற்கொலை செய்ய முடியும் இதில் கோழைத்தனம் என்பது எங்கே என்று புரியவில்லை ஆனாலும் அவர்களின் முடிவு சரியல்ல அவர்களின் முடிவிற்கு காரணம் அவர்கள் அல்ல அவர்களை அன்பாலும், மானத்தாலும் ஏமாற்றிய இந்த சமுதாயம் தான் முக்கிய காரணம்... சமுதாயம் என்பது தன்னிலை மட்டும் உணர்ந்து செயல்படுவது அல்ல ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும் ஒற்றை மனிதன் மீது திணித்து அவனின் வளர்ச்சிக்கும் அல்லது வீழ்ச்சிக்கும் காரணமாவது தான் இந்த சமுதாயம். 

           சரி தற்கொலை செய்து கொள்ள என்ன தைரியம் வேண்டும்??? நாளை நான் சாகப்போகிறேன் என்றால் அந்த சாவின் பயம் உலகில் எவனாலும் உணர முடியாத அந்த பயத்தை தற்கொலை முடிவெடுக்கும் ஒரு சில நிமிடங்களில் உணருகிறார்கள் தற்கொலைக்கும் முயல்பவர்கள்... சாவு தெரியாமல் சாவதை விட தெரிந்து சாவது கொடூரமான ஒரு விபத்து ஆனாலும் தற்கொலை எந்த செயலுக்கும் முடிவல்ல... பாசத்தால் ஏமாற்றப்பட்டேன் ஆனால் உலகில் மனிதர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது அவர்களில் மற்றொருவர் கூடவா நம் அன்பை புரிந்து கொள்ள மாட்டார்கள்??? தோல்வியால் தன்மானம் இழப்பா அப்படி பார்த்தால் உலகில் தோல்வியை சந்தித்த எவனும் மானத்தோடு வாழ்ந்ததில்லை நம் மானத்தை உறுதி செய்ய இந்த சமுதாயத்தில் எவரும் தோல்வியில்லாமல் வாழவில்லை.

           எல்லாவற்றிற்கும் புரிதல் தான் காரணம் நம்மை பிறர் புரிந்து கொள்ளவில்லை என்று உயிரை மாய்ப்பதற்கு காரணம் நம்மை நாம் புரிந்து கொள்ள வில்லை என்று தான் பொருள்... முதலில் நம்மை புரிந்துகொண்டால் நம் மீதான மதிப்பு உயரும் போது சமூகத்தின் பார்வையில் நம் நிலை பற்றிய பிரச்சனை நமக்கு இருக்காது...  தற்கொலைக்கு முன் நம் குடும்பத்தை பற்றி நினைத்திருப்பார்கள், தற்கொலையின் போது வலியை பற்றி நினைத்திருப்பார்கள், தன் எதிர்கால கனவை பற்றி நினைத்திருப்பார்கள் இப்படி அதெல்லாம் நினைக்கும் முன் நம்மை பற்றி ஒரு நிமிடம் நினைத்தாலோ அல்லது நாம் வாழ்ந்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று நினைத்துப்பார்த்தால் தற்கொலை எந்த ஒரு உணர்வுகளுக்கு முடிவு தானே தவிர தீர்வு அல்ல என்பது புரியும்., நம் மீதான மதிப்பை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பதுவும், புரியாத நம் அன்பை பிறரிடம் எதிர்பார்ப்பதுவும் தான் முதல் காரணம் தற்கொலைக்கு, உன் மீதான நம்பிக்கை உன்னைத் தவிர வேறு எவராலும் கொள்ள முடியாது., உன் மீதான அன்பை உன்னை தவிர வேறு எவராலும் உணர முடியாது.., உன் மீதான புரிதல் உன்னைத் தவிர கடவுளாலும் உணர முடியாது., உன் வாழ்க்கை உன்னால் மட்டுமே தற்கொலை எல்லாம் நீ உனக்காச் செய்வது அல்ல மற்றவர்களின் எண்ணங்களை பற்றிய கற்பனை தான் உன் தற்கொலைக்கு காரணம் அந்த எண்ணங்களை கலைக்க நீ செய்யும் மூடத்தனம் தான் தற்கொலை., 

புரிந்து கொள் நீ என்பது நீ மட்டும் தான்

உன் வாழ்க்கை என்பது நீ மட்டும் தான் 

உன் வலிகள்,வேதனைகள் உணர்வால் உணர்வது நீ மட்டும் தான் 

மற்றவரின் பங்கு உன்னை பற்றி அவர்களின் பாணியில் சிந்திப்பது தான் அதற்காக உன் உயிர் ஒரு முடிவல்ல

உயிரை விட்டு முடிவை தேடுவதை விட 

வாழ்ந்து பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பது புத்திசாலித்தனம்...

இறப்பு என்பது முடிவு மட்டுமே தவிர தீர்வல்ல...👍🌱💐

2 கருத்துகள்:

  1. நம் மீதான மதிப்பை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பதுவும், புரியாத நம் அன்பை பிறரிடம் எதிர்பார்ப்பதுவும் தான் முதல் காரணம் - true thambi... ,,,,,,👏👏👏

    பதிலளிநீக்கு

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...